சீன அரசு அமைப்புகள் சில நாட்களுக்கு மூன்பு ஜாக் மா-வின் ஆன்ட் குரூப் மற்றும் அலிபாபா நிறுவனத்திற்கு எவ்வளவு கடன் கொடுக்கப்பட்டு உள்ளது என்பதை அனைத்துப் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளை முழுமையாகக் கணக்கிட உத்தரவிட்டது.
சீன அரசுக்கு ஆன்ட் குரூப்-ன் ஐபிஓ-வை தடை செய்த பின்பு எடுக்கப்படும் முக்கியமான நடவடிக்கையாகும். ஆனால் உண்மையில் சீன அரசு அனைத்து தனியார் நிறுவனங்களுக்கும் புதிய கட்டுப்பாடுகளை விதிக்கத் திட்டமிட்டு அதற்கான பணிகளைச் செய்து வருகிறதாம்.
இதனால் சீன டெக் நிறுவன பங்குகள் அதிகப்படியான வர்த்தகச் சரிவை எதிர்கொண்டு வருகிறது.
EPFO: உங்க அடிப்படை சம்பளம் ரூ.15,000 ரூபாய்க்கு மேல் உள்ளதா..? வருகிறது புதிய திட்டம்..!

ஜி ஜின்பிங்
ஜி ஜின்பிங் தலைமையிலான சீனா அரசு டெக் நிறுவனங்கள் மீது தனிநபர் தகவல் பாதுகாப்பு, சைபர்செக்யூரிட்டி போன்றவற்றைக் காரணம் காட்டி டெக் நிறுவனங்களின் ஆதிக்கத்தைக் குறைக்கவும் மோனோபோலியை தடுக்கவும் அதிகப்படியான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

டெக் நிறுவன பங்குகள்
இந்தக் கட்டுப்பாடுகள் காரணமாகக் கடந்த ஜூலை மாதம் முதல் டெக் நிறுவன பங்குகள் தொடர்ந்து சரிந்து வந்த நிலையில், கடந்த 2 நாட்கள் மிகவும் மோசமான சரிவைச் சீன டெக் நிறுவனங்கள் பதிவு செய்துள்ளது.

புதிய கட்டுப்பாடுகள்
இந்தச் சரிவுக்கு முக்கியமான காரணம் சீன அரசு தனியார் நிறுவனங்கள் மீது புதிய கட்டுப்பாடுகளை விதிக்கத் திட்டமிட்டு உள்ளதாகவும், விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மெட்டாவெர்ஸ்
இதனால் சீன பங்குச்சந்தையில் இருக்கும் முன்னணி டெக் நிறுவன பங்குகள் அதிகப்படியான சரிவை பதிவு செய்துள்ளது. சீனா மெட்டாவெர்ஸ் துறையில் அதிகப்படியான முதலீடுகளைச் செய்துள்ளது அனைவருக்கும் தெரியும்.

டெக், சோஷியல் மீடியா, கேமிங்
அந்த வகையில் இந்த மெட்டாவெர்ஸ் துறையில் பல்வேறு ஊழல் செய்யப்பட்டு உள்ளதை கண்டுபிடிக்கப்பட்டு உள்ள காரணத்தால் சீன அரசு டெக், சோஷியல் மீடியா, மற்றும் கேமிங் துறை நிறுவனங்கள் மீது புதிய கட்டுப்பாடுகளை விதிக்கத் திட்டமிட்டு உள்ளது.

டென்சென்ட் ஹோல்டிங்ஸ்
இதன் வாயிலாகவே சீனாவின் முன்னணி டெக் மற்றும் அதிக மதிப்புடைய நிறுவனமான டென்சென்ட் ஹோல்டிங்ஸ் நிறுவன பங்குகள் திங்கட்கிழமை மட்டும் சுமார் 5.2 சதவீதம் சரிந்து உள்ளது. இதேபோல் அலிபாபா ஹோல்டிங்க்ஸ் பங்குகள் 3.9 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.

Meituan சரிவு
மேலும் ஹாங்காங் பங்குச்சந்தையில் டெக் நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டு இருக்கும் Hang Seng Tech Index குறியீடு கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 5.9 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. இதற்குப் பெரும் சரிவுக்கு வழிவகுத்தது Meituan நிறுவனத்தின் 18 சதவீத சரிவு தான்.