அமெரிக்காவின் எண்ணெய் ஜாம்பவானுக்கே இந்த நிலையா.. 21,000 பேரை வீட்டுக்கு அனுப்ப திட்டம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்காவின் எண்ணெய் ஜாம்பவான் ஆன ஸ்க்லம்பெர்கர் 21,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சுமார் 1 லட்சம் ஊழியர்கள் பணிபுரியும் இந்த நிறுவனத்தில் 140க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள ஊழியர்கள் பணி புரிந்து வருகின்றனர். இந்த நிறுவனம் 120 நாடுகளில் தனது சேவையினை வழங்கி வருகின்றது.

கிட்டதட்ட நான்கில் ஒரு பங்கு ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இது கடந்த வியாழக்கிழமையன்று இந்த நிறுவனம் 3.4 பில்லியன் டாலர் நஷ்டம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

கொரோனாவால் ஆட்டம் கண்டுள்ள நிறுவனம்
 

கொரோனாவால் ஆட்டம் கண்டுள்ள நிறுவனம்

கொரோனாவின் கோரத்தாண்டவத்தினால் இது போன்ற ஜாம்பவான்களின் நிலையே இது தான் எனில், சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் நிலையை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதிலும் தற்போது அமெரிக்காவை ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவால், வல்லரசு நாடான அமெரிக்காவே ஆட்டம் கண்டுள்ளது.

ஊழியர்களுக்கு கட்டணம்

ஊழியர்களுக்கு கட்டணம்

டெக்சாஸை தளமாகக் கொண்டுள்ள இந்த நிறுவனம் 3.7 பில்லியன் டாலர் மதிப்புள்ள கட்டணங்களை (சம்பளத்தினை) அறிவித்துள்ளது. இதில் 1 பில்லியன் டாலருக்கும் அதிகமாக தொகையை 21,000 ஊழியர்கள் பணி நீக்க செய்ய உள்ள ஊழியர்களோடு தொடர்புடையது என்றும் தெரிவித்துள்ளது. 2020 ஆண்டின் பிற்பாதியில் பெரும்பான்மையான கட்டணம் செலுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

எண்ணெய் உற்பத்தியாளர்கள் பாதிப்பு

எண்ணெய் உற்பத்தியாளர்கள் பாதிப்பு

கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு லாக்டவுன் செய்யப்பட்ட நிலையில், உலகளாவிய கச்சா எண்ணெய் உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக முதலீட்டாளர்கள் முதலீட்டை குறைத்து வருகின்றனர். இதன் பாதிப்பானது ஸ்க்லம்பெர்கர் போன்ற ஜாம்பாவான்களுக்கிடையே எதிரொலிக்கிறது.

சவாலான காலாண்டாக இருக்கும்
 

சவாலான காலாண்டாக இருக்கும்

கடந்த தசாப்தங்களில் இது மிகவும் சவாலான காலாண்டாக இருக்கலாம் என்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆலிவர் லு பீச் என்றும் தெரிவித்துள்ளார். முதல் காலாண்டில் கண்ட 28 சதவீத வருவாய் வீழ்ச்சியினை அவர் சுட்டிக் காட்டியுள்ளார். வரலாறு காணாத அளவிலான எண்ணெய் தேவை குறைவால் வீழ்ச்சி கண்டுள்ளதாகவும் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் எண்ணெய் ஜாம்பவானுக்கே இந்த நிலை எனில், இந்தியா போன்ற வளரும் நாடுகளில் என்ன ஆகும்? இந்தியா இந்த இக்கட்டான நிலையினை எப்படி சமாளிக்கபோகிறாதோ?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

US oil giant schlumberger expects lay off more than 21,000 employees

Layoff.. US oil giant schlumberger expects lay off more than 21,000 employees
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X