யார் இந்த Gupta-க்கள்..? லஞ்சம் ஊழலால் தென்னாப்பிரிக்காவின் 7-வது பணக்காரர் ஆனது எப்படி..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குப்தாக்கள் (Gupta), உத்திரப் பிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள். குப்தா குடும்பத்தை சிவ குமார் குப்தாவில் இருந்து தொடங்கலாம். உத்திரப் பிரதேசத்தில் சஹரன்பூரில் சோப் பவுடர் விற்றுக் கொண்டிருந்த ஒரு மாமுல் வியாபாரி.

வாழ்கையில் முன்னேற்றம் தேடி அவர் மகன்கள் டெல்லிக்கு சென்று மசாலா சாமான்களை மடகாஸ்கர் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து எஸ் கே ஜி மார்க்கெட்டிங் என ஒரு கம்பெனியை நடத்தினார்கள்.

வளர்ச்சி போதவில்லை. பிசினஸ் நெறி. லாப வெறியானது. இன்னும் பிசினஸில் கொடி கட்டிப் பறக்க துடித்தார்கள். ஒரு சீன பயணத்தின் போது கம்ப்யூட்டரைப் பற்றிப் பார்க்கிறார்கள். எதிர்காலம் கம்ப்யூட்டரில் இருப்பதைக் கண்டு கொள்கிறார்கள்

அடுத்த அமெரிக்கா
 

அடுத்த அமெரிக்கா

சிவ குமார் குப்தா அடிக்கடி சொல்வாராம் "இனி அமெரிக்காவுக்குப் போவது பயணில்லை, அடுத்த அமெரிக்காவுக்குப் போவது தான் புத்திசாலித் தனம். ஆக அடுத்த சில தாசாப்தங்களில் அமெரிக்காவாகப் போகும் ஆப்பிரிக்காவுக்குச் செல்லுங்கள்" என்பாராம். ஆகையால் Gupta சகோதரர்கள் தென் ஆப்பிரிக்காவுக்குள் வலது கால் எடுத்து வைத்தனர். வழக்கம் போல பிழைப்பு தேடி 1993-ல் தென் ஆப்பிரிக்காவில் நுழைந்தார்கள். சீனாவில் பார்த்த கம்ப்யூட்டர் தான் முதல் வியாபாரம். சஹாரா சிஸ்டம்ஸ் என்கிற பெயரில் கம்ப்யூட்டர் வியாபாரம்.

எதார்த்த திறமைசாலிகள்

எதார்த்த திறமைசாலிகள்

தொடங்கிய முதல் வியாபாரத்திலேயே, சிறப்பாக கல்லா கட்ட பெரிய பிசினஸ் சாம்ராஜ்யத்தையே தென் ஆப்பிரிக்காவில் நிறுவி விட்டார்கள். இன்று தென்னாப்பிரிக்காவில் கம்ப்யூட்டர் தொடங்கி நிலக்கரி, சுரங்கம், மீடியா என பல துறைகளில் ரவுண்ட் கட்டி வியாபாரம் பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம். இன்று Oakbay Group என்கிற பெயரில் அனைத்து வியாபாரத்தையும் செய்து வளமாகிறார்கள். தென்னாப்பிரிக்காவின் பெரிய பணக்காரர்களில் அதுல் குப்தாவுக்கு 7-வது இடம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அதெல்லாம் சும்மா வருமா என்ன..? தென் ஆப்பிரிக்காவின் தலையெழுத்தையே பச்சை மைப் பேனாவில் எழுதும் அளவுக்கு அரசாங்கத்தை விலைக்கு வாங்கி வியாபாரத்தை வளர்த்த எதார்த்த திறமைசாலிகள் இந்த குப்தாக்கள்.

கைக்குள் அரசு

கைக்குள் அரசு

முன்னாள் தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் சூமாவின் மனைவி, குழந்தை குட்டிகள் எல்லாம் நம் குப்தா குடும்ப பிசினசில் கூட்டாளிகள் என்பதையே வெளிப்படையாகச் சொல்லும் அளவுக்கு நண்பர்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். ஆளும் அரசியல்வாதிகள் முதல் அதிகாரிகள் வரை நம் குப்தா குடும்பத்தின் பணத்துக்கு பலியாகாதவர்கள் மிகச் சிலரே. இதனாலேயே தென்னாப்பிரிக்க அதிபர் மற்றும் குப்தா குடும்பத்தினரை சேர்த்து சுப்தாஸ் (Zuma + Gupta = Zuptas) என ட்ரோல் செய்கிறார்கள் தென்னாப்பிரிக்க நெட்டிசன்கள்

எல்லாம் நம்ம முடிவு தான்
 

எல்லாம் நம்ம முடிவு தான்

தென்னாப்பிரிக்க அரசில் யார் என்ன பதவியில் இருக்க வேண்டும்,

எந்த அரசியல்வாதிக்கு எந்த கேபினெட் ஒதுக்க வேண்டும், எந்த அதிகாரிக்கு என்ன பதவி கொடுக்க வேண்டும், அரசியல்வாதிகள் பதவிக்கு வர எவ்வளவு செலவு செய்ய வேண்டும்,

பதவியில் அமர வைத்தால் குப்தாக்களுக்கு எவ்வளவு பிசினஸ் டீல்களை ஒதுக்க வேண்டும்...

என நல்ல தொலை நோக்கு பார்வை கொண்ட லாப வெறி வியாபாரிகள் Gupta-க்கள்.

வங்கி நடவடிக்கை

வங்கி நடவடிக்கை

தென்னாப்பிரிக்காவில், சர்வதேச வங்கி விதிமுறைகளுக்கு உட்பட்டு நான்கு பெரிய வங்கிக் கணக்குகள் மூடப்பட்டன. அந்த நான்குமே குப்தா குடும்ப உறுப்பினர்களுக்கு தொடர்புடையது. அனைத்திலும் சுமார் 520 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு சந்தேகத்துக்குரிய பணப் புழக்கம் செய்திருப்பதைக் கண்டு பிடித்திருக்கிறார்கள் தென்னாப்பிரிக்க அதிகாரிகள். ஆனால் தீர்ப்பு குப்தாஸ்களுக்கு சாதகமாக வந்தது. தனிப்பட்ட வங்கிகளுக்கும், நிறுவனத்துக்கும் நடுவில் அரசு தலையிட வேண்டாம் என வழக்கை தள்ளுபடி செய்தது தென்னாப்பிரிக்க நீதிமன்றம். நீ(நி)தி வென்றது.

இந்திய வங்கி மீது நடவடிக்கை

இந்திய வங்கி மீது நடவடிக்கை

இந்த செய்தியைக் கேள்விப்பட்ட பேங்க் ஆஃப் பரோடா, ஆர்பிஐ விதிமுறைக்கு உட்பட்டு சில குப்தாஸ் குடும்பத்தினர்களின் வங்கிக் கணக்குகளை மூட முயற்சித்தார்கள். உடனடியாக குப்தாஸ் ஒரு மறுப்பு அறிக்கை வெளியிட்டு, பேங்க் ஆஃப் பரோடா மீதே வழக்கு தொடுத்தாகச் சொல்கிறது ப்ளூம்பெர்க் செய்திகள். இதற்கு பதிலளித்திருக்கும் குப்தாஸ் "எங்களுக்கு பேங்க் ஆஃப் பரோடா கொடுத்த காலக் கெடு மிகக் குறைவாக இருந்தது, அதை எதிர்த்து தான் நாங்கள் பேசினோம். இதில் என்ன தவறு இருக்கிறத்ஹு" எனச் சொல்லி இருக்கிறார்கள்.

அதிபர் பாஸ்போர்ட்

அதிபர் பாஸ்போர்ட்

இதை எல்லாம் விட சீரியஸான விஷயம் என்ன தெரியுமா..? தென்னாப்பிரிக்காவின் Diplomatic Passport-க்கு விண்ணப்பித்து இருக்கிறார்கள் நம் குப்தா குடும்பத்தினர்கள். ஏன் எனக் கேட்டால் "என்னங்க லூசு மாதிரி கேக்குறீங்க, நான் தான் என் மாப்ள ஜேக்கப் சூமாவோட நிறைய பயணிக்க வேண்டி இருக்கே... எனக்கு பாதுகாப்பு வேண்டாமா..? அதான்" என அசால்ட் காட்டி இருக்கிறார்கள் தி கிரேட் குப்தாஸ்கள். எப்படியோ அதிபருக்கு புரிய வைத்து நோ சொல்ல வைத்து விட்டார்களாம். ஆனால் குப்தாஸ் குடும்பத்தினர்களோ "அதுல் குப்தா முன்னாள் லெசொதோ அதிபருக்கு ஆலோசகரா இருந்தாப்புல. அதனால அவருக்கு diplomatic passport கொடுத்தாங்க, அவர் பதவி காலம் முடிஞ்சதுக்கு பிறகு திரும்ப வாங்கிக்குட்டாங்க. இத தான் எல்லாரும் ஒரு மாதிரி பேசுராங்க" என ஈயம் பூசி இருக்கிறார்கள் Gupta-க்கள்.

விமானப் படை தளம்

விமானப் படை தளம்

இதுவரை சொன்னதை எல்லாம் விட அதுக்கும் மேல ரகத்தில் ஒரு ஸ்பெஷல் ஐட்டம் இருக்கிறது. தென்னாப்பிரிக்காவின் ராணுவ விமானப் படை தளத்தை, இவர்கள் வீட்டுக் கல்யாணத்துக்கு பயன்படுத்தினார்கள் என்றால் நம்புவீர்களா..? நம்பாட்டிப் போங்க. தென்னாப்பிரிக்காவின் Waterkloof Air Base-ஐ இவர்கள் வீட்டு விசேஷத்துக்கு வரும் பெருந்தலைகளின் விமானங்கள் தரை இறங்கவும், மீண்டும் டேக் ஆஃப் செய்து கொள்ளவும் பயன்படுத்தினார்கள். என்னங்க இப்புடி பண்னிட்டீங்க... எனக் கேட்டால், இதுக்கு எல்லாம் நாங்க அனுமதி வாங்கி இருந்தொம் தெரியும்ல..? என நம்மை முறைக்கிறார்கள்.

அப்புறம் கெளம்பிருவேன் பாத்துக்குங்க

அப்புறம் கெளம்பிருவேன் பாத்துக்குங்க

"எங்க மேல இப்புடி ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகள் வெச்சிக்கிட்டே இருக்கீங்க. இப்படி தொடர்ந்து செஞ்சா நாங்க எங்க வியாபாரத்தை விட்டு வெளியேறிடுவோம். அது நாட்டுக்குத் தான் பெரிய பொருளாதார இழப்பு பாத்துக்குங்க" என பயமுறுத்தி இருக்கிறார்கள் Gupta-க்கள். கொஞ்சம் தென்னாப்பிரிக்க அரசும் தன் வியாபார மற்றும் பொருளாதார வளர்ச்சி, குப்தாக்களிடம் வேலை பார்க்கும் தென்னாப்பிரிக்க இளைஞர்களின் நிலைமையை யோசித்து மெளனம் காத்தது.

லாஜிக் இல்ல

லாஜிக் இல்ல

இதுவரை குப்தாஸ் தான் தென்னாப்பிரிக்க அரசை மறைமுகமாக இயக்குகிறார்கள் எனச் சொல்கிறார்களே... பிறகு ஏன் எங்கள் குடும்பத்தினர்கள் யாரும் அரசு பதவிகள் இல்லை. ஏன் எங்கள் குப்தாஸ் குடும்பத்தில் இருந்து ஒருவரும் தென்னாப்பிரிக்க அரசியலில் இல்லை..? சமீபத்தில் தான் தென்னாப்பிரிக்க அரசு எங்கள் மீது எந்த குற்றச்சாட்டுகளும் இல்லை என வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தது. அதன் பிறகும் நாங்கள் தான் தென்னாப்பிரிக்க அரசில் எல்லாவற்றையும் செய்கிறோம் எனச் சொல்வது அர்த்தமற்றது என கோபமாக ஸ்டேட்மெண்ட் விட்டிருக்கிறார்கள் Gupta-க்கள். கேட்கும் கேள்வி லாஜிக்காக இருக்கிறது தானே..?

குற்றப் பத்திரிகை

குற்றப் பத்திரிகை

1. Zwelinzima Vavi என்கிற வர்த்தக சங்கத் தலைவர் தொடங்கி நடப்பு எம்பி, எல் எல் ஏ-க்கள் வரை பலரும் "ஆமாயா என்கிட்டயும் வந்து இந்த நாசமா போன Zwelinzima Vavi -க்கள் பேரம் பேசுனாய்ங்க" என கோரஸ் பாடுகிறார்கள்.

2. 2017-ம் ஆண்டு வாக்கில், குப்தாக்கள் மீது இருக்கும் ஊழல், லஞ்ச வழக்குகளை திசை திருப்ப பிரிட்டனின் Bell Pottinger என்கிற பிஆர் நிறுவனத்துக்கு காசு கொடுத்து, போலி ட்விட்டர் கணக்குகளை தயார் செய்து வெள்ளை ஆதிக்க, இனவாத வெறுப்பு அரசியலை முதன்மைப் பிரச்னையாகக் காட்டிய சம்பவம் 2017-ம் அம்பளமானது. அப்போது காலியான Bell Pottinger நிறுவனம் இன்று வரை தலை தூக்கவில்லை.

3. 2014-ம் ஆண்டு வாக்கில் 600 ரயில்களை China south Rail நிறுவனத்துக்கு போகாமல், குப்தாக்களே தயாரிக்க டெண்டரை மிரட்டி வாங்க முயற்சித்தது.

4. 2016-ம் ஆண்டு வாக்கில் உலகின் முன்னனி ஆடிட் நிறுவனங்களில் ஒன்றான KPMG, Sasfin Bank, Barclays என பலரும் குப்தாவோடு வேலை பார்க்காமல் தெறித்து ஓடிவிட்டார்கள்.

இப்படி பல மோசடிகளைச் செய்துவிட்டு லாஜிக்காக நாங்கள் அரசியலில் இருக்கிறோமா..? அரசு பதவிகளில் இருக்கிறோமா..? எனக் கேட்டால் நீங்கள் (Gupta-க்கள்) நல்லவர்களா..? Gupta-க்களே விட்டு விடுங்கள், போதும். உங்கள் கேவலமான லஞ்சத்தையும், ஊழலையும் தூக்கி எரியுங்கள்.

மற்றவர்களும் வளரட்டும்,

சமூக நீதி மலரட்டும்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

who is Gupta how they raised to 7th richest billionaire in south Africa

who is Gupta how they raised to 7th richest billionaire in south africa
Story first published: Tuesday, June 25, 2019, 18:22 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more