ஆடம்பரத்தின் உச்சம்.. உலகிலேயே காஸ்ட்லியான பொருட்கள் இதுதான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நம்மில் பெரும்பாலானோர் நமது தேவைகளுக்கு மலிவு விலை பொருட்களையே விரும்பும் நிலையில், சில உணவு வகைகள் ஆயிரக்கணக்கான டாலர்களுக்கும், வாகனங்கள் மில்லியன் கணக்கான விலையிலும் இருக்கின்றன.

இப்படி உலகிலுள்ள மிக விலையுயர்ந்த சில பொருட்களைத் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் உங்கள் பார்வைக்கு அளிக்கிறது.

 விலையுயர்ந்த கார்

விலையுயர்ந்த கார்

அக்டோபர் 2013ல் பெயர் வெளியிட விரும்பாத ஒருவர் 1963 பெர்ராரி 250 ஜி.டி.ஓ ரேசர் காரை 52 மில்லியன் டாலருக்கு வாங்கியது தான் அதை உலகின் விலையுயர்ந்த கார் ஆக்கியது. அந்தக் கார் அதற்கு முன்பு அமெரிக்காவின் கனெக்டிகட் கலெக்டரான ஃபால் பாப்பலர்டோ என்பவரிடம் இருந்தது.

விலையுயர்ந்த பீட்சா

விலையுயர்ந்த பீட்சா

லண்டனில் உள்ள கோர்டன் ராம்சேஸ் மாசோ ரெஸ்டாரென்டில் 150 டாலருக்கு விற்கப்படும் வெள்ளை ட்ரப்புள் உள்ள பீட்சா தான் உலகிலேயே விலையுயர்ந்த பீட்சா. மெல்லிய மேலடுக்குக் கொண்ட இந்தப் பீட்சாவின் மீது வெங்காம துகள்கள், பான்டினோ வெண்ணெய், பேபி மோசாரில்லா, பேன்சட்டா, காளான் மற்றும் வெள்ளை ட்ரப்பிள் போன்றவை நிரப்பித் தரப்படுகிறது.

விலையுயர்ந்த சூப்

விலையுயர்ந்த சூப்

லண்டனில் உள்ள ஃகய் மேபேர் ரெஸ்டாரென்ட் "புத்தா ஜம்ப்ஸ் ஓவர் தி வால்" என்னும் சூப்பை 190டாலருக்கு விற்கிறது. இந்தச் சூப்பில் ஷார்க் ஃபின், அபோலோன், ஜப்பானிய மலர் காளான், கடல் வெள்ளரி, உலர்ந்த ஸ்கால்ப், கோழி, ஹுவான் ஹாம், பன்றி மற்றும் ஜின்ஸெங் போன்ற பல இடுபொருட்கள் உள்ளன.

 விலையுயர்ந்த அஞ்சல் தலை

விலையுயர்ந்த அஞ்சல் தலை

சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் உள்ள டேவிட் பெல்டுமேன் எனும் ஏலம்விடுபவர்கள், ஸ்வீடிஸ் "ட்ரீஸ்கில்லிங்" மஞ்சள் அஞ்சல் தலையை 2,255,403 டாலருக்கு 8 நவம்பர் 1996ல் விற்றனர். இதே அஞ்சல் தலை 2010 ல் அதை விட அதிக விலையில் , விலையை வெளியில் கூறாமலேயே விற்கப்பட்டது.

விலையுயர்ந்த திரைப்பட உடை

விலையுயர்ந்த திரைப்பட உடை

1961ல் வெளியான 'ப்ரேக்பாஸ்ட் அட் டிப்பனீஸ்' என்னும் படத்தில்ஆண்ட்ரூ ஹெப்பர்ன் அணிந்த கருப்பு காக்டெய்ல் உடை, 5 டிசம்பர்2006ல் லண்டனில் 924,347 டாலருக்கு ஏலம் போனது. இந்த ஆடையை ஹப்ரிட் டி கிவ்வன்சி என்பவர் வடிவமைத்தார்.

விலையுயர்ந்த இசைக்கருவி

விலையுயர்ந்த இசைக்கருவி

டரிசியோ ஏல நிறுவனம், லேடி ப்ளண்ட் எனப் பெயரிடப்பட்ட ஸ்ட்ராடிவேரியஸ் வயலினை லண்டனில் 20 ஜூன் 2011ல் 15,875,800 அமெரிக்க டாலருக்கு விற்றது.

விலையுயர்ந்த ஸ்கேட்போர்ட் வீடியோ கேம்

விலையுயர்ந்த ஸ்கேட்போர்ட் வீடியோ கேம்

டோனி ஹவாக் :ரைட் என்னும் வீடியோ கேம் 151 டாலர் என்ற விலையில் வெளியிடப்பட்டது. இதில் உயர்தர விளையாட்டு அனுபவத்தைத் தர நகர்வுகளை அனுமனிக்கும் சென்சார்கள் உள்ளன.

விலையுயர்ந்த கையுறை

விலையுயர்ந்த கையுறை

"பாப் உலகின் அரசன்" மைக்கேல் ஜாக்சனுக்குச் சொந்தமான கையுறை 21நவம்பர் 2009ல் அமெரிக்காவின் மான்ஹேட்டன் நகரில் நடந்த ஏலத்தில் 420,000டாலருக்கு விற்கப்பட்டது. நியூயார்க் போன்டே 16 ரிசார்டால் இந்தக் கையுறை வாங்கப்பட்டது.

விலையுயர்ந்த சூசி

விலையுயர்ந்த சூசி

பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த சமையல் நிபுணர் ஆங்கிலிட்டோ அரநீடா என்பவர் செய்ய ஜப்பானிய உணவான சூசி, 2010ல் 1,978.15டாலருக்கு விற்கப்பட்டது. இந்த உணவில் வைரங்கள் வைத்து அலங்காரம் செய்து, 24 காரட் தங்க இழைகள் கொண்டு சுற்றப்பட்டிருந்தது.

விலையுயர்ந்த ஓவியம்

விலையுயர்ந்த ஓவியம்

ப்ளெமீஸ் பெயிண்டர் பீட்டர் ஃபால் ரூபீன்ஸ் என்பவர் வரைந்த ஓல்டு மாஸ்டர் ஆர்ட் என்று அழைக்கப்படும் 'தி மசேக்ரே ஆப் தி இன்னெசென்ட்ஸ்'ஓவியம், தாம்சன் செய்திதாளின் தலைவர் கென்ன தாம்சன் என்பவருக்கு 76.7மில்லியன் டாலர் விலைக்கு 10 ஜூலை 2002ல் விற்கப்பட்டது.

விலையுயர்ந்த ட்யூனா மீன்

விலையுயர்ந்த ட்யூனா மீன்

ஜப்பானின் அமோரியில் பிடிபட்ட ப்ளூபின் ட்யூனா மீன், டோக்கியாவின் டிசுகிஜி மீன் சந்தையில் 5 ஜனவரி 2013 அன்று 1,767,470 டாலருக்கு ஏலம் எடுக்கப்பட்டது. இந்த மீனின் எடை 222 கிலோ.

விலையுயர்ந்த வாசனை திரவியம்

விலையுயர்ந்த வாசனை திரவியம்

ஆண்கள் மற்றும் பெண்களுக்கான நம்பர் 1 வாசனைதிரவியமான க்ளைவ் கிரிஸ்டியன், லண்டனில் நவம்பர் 2005ல் அறிமுகப்படுத்தப்பட்டது. 500மில்லிலிட்டர் அளவிலான திரவியத்தின் விலை 205,000 டாலர். இந்தத் திரவியம் நிரப்பப்பட்ட குடுவை 5காரட் வெள்ளை வைரம் பதிக்கப்பட்டு, 18காரட் தங்க இழையால் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.

விலையுயர்ந்த பழம்பெரும் கார்

விலையுயர்ந்த பழம்பெரும் கார்

உலகின் மிகப் பழமையான மற்றும் தற்போதும் செயல்படும் ரோல்ஸ் ராய்ஸ் கார், 3 டிசம்பர் 2007 அன்று லண்டனில் நடைபெற்ற ஏலத்தில் 7,242,916 டாலருக்கு விற்கப்பட்டது. 20154 என்ற எண் கொண்ட இரு இருக்கைகள் உள்ள இந்தக் கார் 1904ல் தயாரிக்கப்பட்டது.

விலையுயர்ந்த காக்டெயில்

விலையுயர்ந்த காக்டெயில்

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன்-ல் உள்ள கிளப்23, 7 பிப்ரவரி 2013 அன்று உலகின் விலையுயர்ந்த காக்டெய்லை 12,970 டாலருக்கு விற்றது. இது 1858ல் ஜோல் ஹெப்பர்னான் செய்யப்பட்டது.

விலையுயர்ந்த முத்தம்

விலையுயர்ந்த முத்தம்

அமெரிக்காவில் ஜானி ரிம் என்பவர், ஹாலிவுட் நடிகை சேரோன் ஸ்டோனின் முத்தத்தை 50,000 டாலருக்கு ஏலத்தில் எடுத்தார். ஆகஸ்ட் 2003ல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் இந்த முத்த ஏலம் நடைபெற்றது.

விலையுயர்ந்த சிலை

விலையுயர்ந்த சிலை

ஹொம்மே க்யூ மார்சே என்ற 1.8 மீட்டர் உயர வெண்கல சிலை, 3பிப்ரவரி 2010 அன்று லண்டனில் நடைபெற்ற ஏலத்தில் 103,676,000 டாலருக்கு விற்கப்பட்டது. இந்தச் சிலை ஸ்விஸ் சிலை வடிவமைப்பாளர் ஆல்பெர்டோ ஜியோகோமெட்டி என்பவரால் 1960ல் செய்யப்பட்டது.

விலையுயர்ந்த வெள்ளை ஒயின்

விலையுயர்ந்த வெள்ளை ஒயின்

லண்டன் ஏன்டிக் ஒயின் கம்பெனி 1811ல் தயாரிக்கப்பட்ட Chateau d'Yquem என்ற ஒயினை 18 ஜனவரி 2011ல் நடந்த ஏலத்தில் 117,000 டாலருக்கு விற்றது. இந்த ஒயின் இந்தோனேசியாவின் கிறிஸ்டியன் வேன்னேக்யூ என்பவரால் வாங்கப்பட்டது.

விலையுயர்ந்த தொலைநோக்கி

விலையுயர்ந்த தொலைநோக்கி

நாசாவால் 1990ல் செலுத்தப்பட்ட ஹப்பிள் ஸ்பேஸ் டெலஸ்கோப், 2.1பில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட்ட உலகின் விலையுயர்ந்த தொலைநோக்கியாக உள்ளது.

விலையுயர்ந்த குளியலறை

விலையுயர்ந்த குளியலறை

ஜனவரி 2001ல் ஹாங்க்ஹாங் நகைக்கடை அதிபரான லாம் சாய்-விங் கட்டிய குளியலறை தான் உலகின் விலையுயர்ந்தது. 3.5 மில்லியன் டாலர் செலவில் தங்கம், ரூபி போன்ற விலையுயர்ந்த பொருட்களால் கட்டப்பட்டது.

விலையுயர்ந்த கேவியர்

விலையுயர்ந்த கேவியர்

அல்மாஸ் என்ற இரானிய பெலுகா மீனின் உலர்ந்த சினைமுட்டை ஒரு கிலோ 34,500 டாலர் விலைக்கு விற்கப்பட்டது. 'பே கோல்டு' என்று அழைக்கப்படும் இந்தக் கேவியர் 60-100 வயதுள்ள அதிசய அல்பினோ மீனின் முட்டையிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

விலையுயர்ந்த வீடு

விலையுயர்ந்த வீடு

இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீடான அன்டிலியா 1பில்லியன் டாலர் செலவில் கட்டப்பட்டது. 27 மாடி கட்டிடமான இவ்வீடு 37,161 சதுர மீட்டர் பரப்பில், 600பணியாளர்கள் பணியாற்றுகின்றனர்.

 விலையுயர்ந்த ஆட்டோகிராப்

விலையுயர்ந்த ஆட்டோகிராப்

'தி பீட்லீஸ்' என்ற ராக் பேண்டின் கையெழுத்து இட்ட புகைப்படம் உலகின் மிக விலையுயர்ந்தது. இதன் மதிப்பு 43,758 டாலர்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

World's most expensive things

World's most expensive things
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X