இந்த அமைப்பில் உள்ள வங்கிகள், நிதி நிறுவனங்கள் ஆகியவை தாங்கள் கடன் கொடுத்த நபர்களின் பட்டியலை இந்த அமைப்புடன் பகிர்ந்து கொள்கின்றன. இதன்மூலம் கடன் வாங்கியவர் குறித்த முழு விவரங்களையும் மற்ற வங்கிகளும் நிதி நிறுவனங்களும் அறிந்து கொள்ள முடிகிறது.
ஒரு வங்கியில் வாங்கிய கடனை சரியாக செலுத்தாத நபருக்கு இன்னொரு வங்கி கடன் கொடுப்பதைத் தவிர்க்க இந்த அமைப்பு வழங்கும் கிரெடிட் இன்பர்மேசன் ரிப்போர்ட் (CIR) உதவுகிறது.
டெல்லியில் ஸ்டேட் பாங்கில் கடன் வாங்கிய ஒருவர் அதை சரியாக திருப்பிச் செலுத்தாமல் பெங்களூரில் எச்டிஎப்சி வங்கியின் கடன் கோரி விண்ணப்பித்தால், அவரது ஸ்டேட் வங்கி கடன் குறித்த தகவலை இந்த சிபில் அறிக்கை தெரிவித்துவிடும்.
இந்த அறிக்கையை கடன் வாங்கியவர்களும் கூட கேட்டுப் பெற முடியும். இதன்மூலம் நமது பெயரையோ, அடையாள அட்டையையோ, பாஸ்போர்ட் காப்பியையேயா அல்லது டிரைவிங் லைசென்ஸையோ சான்றாகத் தந்து வேறு யாராவது நமக்கே தெரியாமல் நமது பெயரில் கடன் வாங்கியிருக்கிறார்களா என்பதையும் தெரிந்து கொள்ள முடியும்.
இதைப் பெற ரூ. 142 தான் செலவாகும். சிபில் டிரான்ஸ் யூனியன் ஸகோர் பிளஸ் என்ற முழு விவரததையும் பெற ரூ. 450 செலவாகும்.
பான் கார்ட், அடையாள அட்டை, வங்கி கணக்கு விவரம் உள்ளிட்ட சில அடிப்படை சான்றுகளின் நகல்களுடன் இந்த அறிக்கையைக் கேட்டுப் பெறலாம். இது குறித்த மேலும் விவரங்களுக்கு https://www.cibil.com/ என்ற இணையத்தை நாடலாம்.
இதில் உங்களது விவரங்களில் ஏதாவது தவறு இருந்தால் உடனே சம்பந்தப்பட்ட வங்கியையோ அல்லது நிதி நிறுவனத்தை அணுகலாம். இதையடுத்து இந்திய கடன் தகவல் பணியகம் அமைப்பை நாடலாம். நீங்கள் பிரச்சனையை சொன்ன 30 நாட்களுக்குள் உங்களது தகவல்களை சரி செய்ய வேண்டியது நிதி நிறுவனம், வங்கி மற்றும் இந்திய கடன் தகவல் பணியகத்தின் கடைமையாகும்.
அதை அவர்கள் செய்யத் தவறினால் நுகர்வோர் மையத்தை நாடி வழக்குத் தொடர உரிமை உண்டு.
சிபிலிடம் சிக்காமல் இருப்பது எப்படி?:
- கடனோ, கிரெடிட் கார்டுக்கு பணம் செலுத்துவதோ, காப்பீட்டுக்கு பணம் செலுத்துவதோ அதை மிகச் சரியான நேரத்தில் செலுத்திவிட வேண்டும்.
-லேட் பேமண்ட், காசோலை போட்டாலும் பணம் இல்லாமல் திரும்பி வருவது ஆகியவற்றுக்கு இந்திய கடன் தகவல் பணியகத்தால் பிளாக் மார்க் போடப்படும்.
-கிரெடிட் கார்டுகளை அடிக்கடி பயன்படுத்துவது, பணத்தை உரிய நேரத்தில் செலுத்துவது கடன் தர வரியை அதிகரிக்கும்