உங்களுக்கான வாழ்க்கையை பாதுகாப்பானதாக வாழுங்கள்!

Posted By:
Subscribe to GoodReturns Tamil

உங்களுக்கான வாழ்க்கையை பாதுகாப்பானதாக வாழுங்கள்!
தெளிந்த நீரோடை போன்ற வாழ்க்கையில் சின்ன சின்ன சலனங்கள் ஏற்படுவது இயல்புதான். அதுமே சுனாமியாக மாறி சுழற்றி அடித்தால் யாராலும் தாங்க முடியாது. அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் வாழும் வாழ்க்கையை பாதுகாப்பானதான அமைத்துக் கொள்ளலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

மெடிக்ளெய்ம் இன்சூரன்ஸ்

நாம் சம்பாதிக்கும் பணத்தில் நாற்பது சதவிகிதம் வரை சினிமா, பொழுதுபோக்கு லோன் இஎம்ஐ என கட்டிக்கொண்டிருக்கிறோம். நமது குடும்ப நன்மைக்காக சில பாலிசிகளை எடுக்கவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். மெடிக்ளெய்ம் பாலிசி எடுத்துக்கொள்வதன் மூலம் அவசர காலத்தில் லட்சக்கணக்கில் மருத்துவமனைகளில் பணம் கட்ட வேண்டிய அவசியம் இல்லை என்கின்றனர் நிபுணர்கள்.

இன்றைக்கு சாதாரண காய்ச்சல் தலைவலி என்றாலே நடுத்தர குடும்பத்தினர் செலவு செய்வது சிரமம்தான். இதயநோய், புற்றுநோய் போன்ற அதிகம் செலவு வைக்கும் நோய்கள் வந்தால் அவர்களால் மருத்துவ செலவுகளை சமாளிக்க முடியாது எனவே கையில் மெடிக்ளெய்ம் பாலிசி எடுத்துக்கொண்டால் நோய் தாக்குதல் பற்றியும் மருத்துவ செலவைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை என்கின்றனர் நிபுணர்கள். இன்றைக்கு பல மெடிக்ளெய்ம் இன்சூரன்ஸ் திட்டங்கள் உள்ளன. வருடத்திற்கு 2 ஆயிரம் ரூபாய் முதல் 60000 ஆயிரம் ரூபாய் வரை வருமானத்திற்கு ஏற்ப பாலிசி எடுத்துக்கொள்ளலாம்.

மெடிக்ளெய்ம் பாலிசி எடுப்பதனால் என்னென்ன நன்மைகள்

பிறந்த குழந்தை முதல் வயதான பெரியவர்கள் வரை இந்த திட்டத்தில் பயன் பெறலாம்.

வாழ்நாள் முழுவதும் இதை புதுப்பித்துக்கொள்ளலாம். சில குறிப்பிட்ட பாலிசிகளில் பெண்களின் பிரச்சினைகளான கருப்பை, மாதவிலக்கு பிரச்சினைக்கும் மருத்துவ வசதி உண்டு. நீரிழிவு நோயாளிகளும் சிறப்பு பாலிசிகள் உள்ளன.

சில பாலிசிகளில் இலவச ஹெல்த் செக் அப் உண்டு. பல் சிகிச்சை, அயுர்வேதா, ஹோமியோபதி சிகிச்சைகளுக்கும் இந்த திட்டம் செல்லுபடியாகிறது.

அதேபோல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கும் இந்த மெடிக்ளெய்ம் பாலிசி மூலம் பயன் பெறலாம். எனவே லட்சம் லட்சமாக பணத்தை வைத்துக்கொண்டிருந்தால் மட்டுமே நோய்களுக்கு சிகிச்சை பெற முடியும் என்ற காலம் மலையேறி விட்டது. இனி மெடிக்ளெய்ம் கையில் இருந்தால் எதற்கும் கவலைப்படத்தேவையில்லை என்கின்றனர் நிபுணர்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Medical Insurance - Basic necessity in today’s world! | உங்களுக்கான வாழ்க்கையை பாதுகாப்பானதாக வாழுங்கள்!

Having a medical insurance policy is not a luxury anymore. It has moved towards being a basic necessity in today's world. With inflation surging past 9% in India, an average middle-class household in India finds it difficult to make both ends meet. And the spiraling medical expenses further add to their woes.
Story first published: Wednesday, June 27, 2012, 12:15 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns