
- இந்த நிலைமைதான் தற்போது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஏற்பட்டிருக்கிறது.. அதாவது ஐரோப்பிய பொருளாதார சிக்கல்னு சொல்வது இதைத்தான்!
ஐரோப்பிய ஒன்றியமாக உருவெடுத்தது முதல் உறுப்பு நாடுகளின் பொருளாதாரம் ஒருங்கிணைக்கப்பட்டு ஒற்றை பொருளாதார மண்டலமானது. அதேமாதிரி யூரோ என்ற புதிய பணமும் உருவானது. ஆனால் அனைத்து ஐரோப்பிய நாடுகளும் பொருளாதார வளம் கொண்டவை அல்ல. கிரீஸ், போர்ச்சுகல் போன்றவை நிதி வளமற்ற நாடுகள். யூரோ நாணயம் அறிமுகப்படுத்தப்பட்ட போது பணவீக்கம் பற்றிய எந்த ஒரு அச்சுறுத்தலும் வங்கிகளுக்கு இல்லை. மகிழ்ச்சியாகவே ஏற்றுக் கொள்ளப்பட்டது.
ஏராளமான கடன்கள் அள்ளி அள்ளி கொடுக்கப்பட்டன. ஆனால் அவற்றை திருப்பி செலுத்தக் கூடிய நிதி நிலைமை பற்றி யோசிக்கப்படவில்லை. வங்கிகள் திவாலாகிவிட்டன. சில நாடுகளில் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாமல் அரசாங்கங்கள் தவித்தன. இதுதான் நாம் பேசும் ஐரோப்பிய பொருளாதார சிக்கல். இது சர்வதேச நாடுகளின் பொருளாதாரத்திலும் எதிரொலித்து வருகிறது. அதுவும் ஐரோப்பிய நாடுகளுக்கு பெருமளவு ஏற்றுமதி செய்யும் நாடுகள் தத்தளிக்க வேண்டியதுதான்.
தற்போது ஜெர்மனி போன்ற வலுவான பொருளாதர வளம் கொண்ட நாடுகள், எதிர்காலத்தில் இத்தகைய பொருளாதார சிக்கல் மீண்டும் வந்துவிடக் கூடாது என்பதற்காக புதிய விதிமுறைகளை உருவாக்கி வருகின்றனர். மறுசுழற்சி நிதி, உலக வங்கியிலிருந்து கடனுதவி என்றெல்லாம் பேசப்பட்டு வருகின்றன.. நமது இந்தியாவும்கூட உலக வங்கியின் மூலமாக ஐரோப்பிய பொருளாதார சிக்கலுக்கு உதவியிருக்கிறது. இத்தகைய சீர்திருத்த நடவடிக்கைகல் தொடர்பாக பல்வேறு வகையிலான விவாதங்கள் ஒருபுறம் நடைபெற்று வருகின்றன.
இத்தகையதொரு சிக்கலாம் நாம் எல்லோருமே பாதிக்கப்படுகிறோம். அண்மைக்காலமாக பங்குச் சந்தை மதிப்புகள் படுபயங்கரமாக தள்ளாட்டம் போட்டதைப் பார்த்திருப்போம். நாட்டின் பணமதிப்பு பயங்கரமாக சரிந்து வந்தது. இப்படித்தான் மெல்ல மெல்ல இந்தியப் பொருளாதாரத்தையும் ஐரோப்பிய சிக்கல் தாக்கத் தொடங்கி 2014-ம் ஆண்டுகளில் கடுமையான பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும். நிறுவனங்களுக்கு பணத் தேவை இருக்கும். ஆனால் கடன் என்பது எட்டாக் கனியாகவும் வட்டி விகிதம் என்பது நினைத்துப் பார்க்க முடியாததாகவும் அமைந்துவிடும். இதனால் நாட்டின் பொருளாதாரத்தின் மீது கூடுதல் அழுத்தங்கள் உருவாகும். அது நமது நடைமுறை வாழ்க்கையிலும் எதிரொலிக்கும்.
இதுதான் ஐரோப்பிய பொருளாதார சிக்கல்!
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!



Click it and Unblock the Notifications