ஆன்லைனில்தான் வருமானவரி கணக்கு தாக்கல்..சில தகவல்கள்

Posted By:
Subscribe to GoodReturns Tamil

ஆன்லைனில்தான் வருமானவரி கணக்கு தாக்கல்..சில தகவல்கள்
ஆண்டுக்கு ரூ10 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்கள் தங்களது வருமான வரி கணக்குகளை இனி ஆன்லைனில் தாக்கல் செய்ய வேண்டும் என்று அண்மையில் மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்திருந்தது. கடந்த 2010-11ம் ஆண்டு வரை விரும்புவோர் மட்டுமே ஆன்லைனில் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யலாம் என்பது நடைமுறையில் இருந்தது.

ஆனால் ஆண்டு வருமானம் ரூ10 லட்சத்துக்கு குறைவாக இருப்போர் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யும் முறையில் எந்த மாற்றமும் இல்லை. அவர்கள் விரும்பினால் அவர்கள் ஆன்லைனிலும் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்து கொள்ளலாம்..

ரூ10 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்கள் கண்டிப்பாக ஆன்லைனில்தான் வருமான வரிக் கணக்கை செலுத்தியாக வேண்டும். ஆனால் இப்படி செலுத்தும் போது ஸ்கேன் செய்யப்பட்ட கையெழுத்து (டிஜிடல்) அவசியம் என்பது இல்லை. இனி ஆன்லைனிலேயே அனைவரும் வருமான வரி கணக்கு செலுத்துவதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற தொலை நோக்குத் திட்டத்தின் ஒரு பகுதி இது. ஈ பைலிங் அல்லது ஆன்லைன் முறையில் தாமதமின்றி எளிதாக வருமானவரி கணக்கை செலுத்தலாம்.

எதற்கான ஆன்லைன் முறை?

ஆன்லைனில் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வது என்பது எளிதானது என்பதற்காக மட்டுமல்ல.. பணம் திரும்பக் கொடுப்பதற்கும் எளிதான வழி.

ஆன்லைன் நடைமுறை பற்றி சில தவறான கருத்துகளும் உண்டு...

- அதாவது டிஜிட்டல் கையெழுத்து அவசியம் தேவைப்படும் என்று கூறுவர்... ஆனால் அது உண்மையில்லை. டிஜிட்டல் கையெழுத்து கட்டாயம் என்பது கிடையாது

- ஆன்லைனில் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்தால் பலமுறை பரிசீலிப்பார்கள் என்றும் சொல்வர். ஆனால் இது நல்ல கட்டுக் கதை என்றுதான் கூற வேண்டும். ஏனெனில் ஆன்லைனில் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யும் போது ஒவ்வொருவரது முந்தைய ஆண்டுக் கணக்கையும் தானாகவே கணக்கிட்டுக் கொள்ளக் கூடிய வாய்ப்பு இருப்பதால் ரொம்பவே எளிதானது.

- ஆன்லைனில் வருமான வரிக் கணக்கை செலுத்த பணம் கட்ட வேண்டும் என்று கூட சொல்வோரும் உண்டு. உண்மை அதுவல்ல. அரசின் அதிகாரப்பூர்வ தளத்தில் சென்று எந்த கட்டணமும் இல்லாமலேயே வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யலாம்

- ஆன்லைன் முறை பாதுகாப்பற்றது என்பதும் சரியானது அல்ல.. நீங்கள் ஆன்லைனில் பதிவேற்றும் தகவல்கள் அனைத்தும் வருமான வரித்துறை அலுவலகத்துக்குத்தான் செல்கிறது. உங்கள் தகவல்களை பாதுகாக்கக் கூடிய மிகவும் அட்வான்ஸ் சாப்ட்வேர்களையே அவர்கள் பயன்படுத்துகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Income over Rs 10 lakhs; you need to file returns online | ஆன்லைனில்தான் வருமானவரி கணக்கு தாக்கல்..சில தகவல்கள்

The Central Board of Direct Taxes (CBDT) has recently issued a notification which has made it mandatory for individuals earning an annual income in above INR 10 lakhs to file their Income Tax Returns online from the current Financial Year 2011-12 (Assessment Year 2012-13) onwards. This new notification is applicable to individuals and Hindu Undivided Family (HUF) taxpayers as well. E-filing for such individuals was optional till Financial Year 2010-11 (AY 2011-12). For individuals in upto INR 10 lakh bracket, there has not been any change in tax filing; they have the option of filing returns either manually or electronically.
Story first published: Tuesday, July 3, 2012, 14:36 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns