பணவாட்டம் என்பது என்ன?

Posted By:
Subscribe to GoodReturns Tamil

பணவாட்டம் என்பது என்ன?
பொருளாதரத்துல பணவீக்க விகிதம், பணப்புழக்கம் மாதிரி பணவாட்டம் என்ற சொல்லும் உண்டு.

அதை சில உதாரணங்கள் மூலமாக பார்க்கலாம்

ஒரு கிராமத்தில் 10 பொருட்கள் மட்டும் இருக்கின்றன. உங்களிடம் 10, 10ரூபாய் நோட்டுகள் இருக்கின்றன. அப்படியானால் ஒவ்வொரு பொருளையும் தலா ரூ10 கொடுத்து வாங்கிவிட முடியும்.

சரி... ஒரு பொருளோட விலை ரூ20...உங்ககிட்ட பணமும் ரூ200 இருக்கிறது எனில் ஒவ்வொரு பொருளையும் தலா ரூ20 கொடுத்து வாங்கிட முடியும்... அப்ப பணப்புழக்கம் அல்லது பணவீக்க விகிதம் நன்றாக இருக்கிறது என்று பொருள்

அதே நேரத்தில் உங்ககிட்ட பணம் ரூ50தான் இருக்கிறது.. அப்ப ஒவ்வொரு பொருளோட விலையும் தலா ரூ5 என்ற நிலைக்கு போய்விடும்.. இதுதான் பணவாட்டம் என்பது..

இப்ப...ரூ100 இருக்கிறது...அந்த கிராமத்துல ஏற்கெனவே இருந்த 10 பொருட்களோடு கூடுதலாக 10 பொருட்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆக மொத்தம் 20 பொருட்கள் இருக்கிறது. ஆனால் ரூ100 தான் இருக்கிறது. அதனால பொருளோட மதிப்பு மறுபடியும் தலா ரூ5ன்னு ஆகிவிடும்.

அதாவது பொருட்களோடு உற்பத்தி அதிகரிச்சாலும் உரிய பணம் கொடுத்து வாங்க முடியாத நிலை ஏற்படுகிறது அல்லவா? அதைத்தான் பணவாட்டம் என்கின்றனர்! இதனாலதான் பணவாட்டம் என்பதை எல்லோரும் மோசமான ஒன்றாகவே கருதுகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

What Causes Deflation? | பணவாட்டம் என்பது என்ன?

Let us assume that in a village there are only ten goods and ten Rs 10 notes are available to purchase them with. We can safely assume that each item will end up costing Rs 10 each.
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns