தபால் நிலையத்தில் வருங்கால வைப்பு நிதி கணக்கு(பிபிஎஃப்) துவங்குவது எப்படி?

By Siva
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தபால் நிலையத்தில் வருங்கால வைப்பு நிதி கணக்கு(பிபிஎஃப்) துவங்குவது எப்படி?
பெங்களூர்: தபால் நிலையத்தில் வருங்கால வைப்பு நிதி(பப்ளிக் ப்ராவிடென்ட் பன்ட்) கணக்கு துவங்குவது பற்றி பார்ப்போம்.

 

நாம் பணியில் இருந்து ஓய்வு பெறும் போது வருங்கால வைப்பு நிதி(பி.பி.எஃப்) கணக்கில் உள்ள பணம் நமக்கு பேருதவியாக இருக்கும். தபால் நிலையத்தில் துவங்கப்படும் இந்த கணக்கில் நீங்கள் பணியில் இருக்கையில் ஒவ்வொரு ஆண்டும் போடும் பணம் பிற்காலத்தில் உங்களுக்கு பயன்படும். பிபிஎஃப் கணக்கில் போடும் பணத்திற்கு வரி விலக்கும் உண்டு. வெளிநாடு வாழ் இந்தியர்கள் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் கணக்கு துவங்க முடியாது.

தபால் நிலையத்தில் பிபிஎஃப் கணக்கை துவங்கத் தேவையான ஆவணங்கள் எவை?

ரேஷன் கார்டு

பான் கார்டு

பாஸ்போர்ட்

வாக்காளர் அடையாள அட்டை

ஆதார் கார்டு

2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ

பிபிஎஃப் கணக்கை எப்படி துவங்குவது?

அருகில் உள்ள தலைமை தபால் நிலையத்திற்கு செல்லவும்.

அங்கு பி.பி.எஃப். கணக்கு துவங்கும் விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்யவும்.

விண்ணப்பத்தில் உங்கள் புகைப்படத்தை ஒட்டவும்.

விண்ணப்பத்தை உரிய அதிகாரியிடம் கொடுத்து கணக்கு துவங்கத் தேவையான பணத்தையும் அளிக்கவும்.

கணக்கு துவங்கப்பட்டவுடன் உங்களுக்கு பாஸ்புக் வழங்கப்படும். அந்த பாஸ்புக்கில் கணக்கு எண், கிளை பெயர் உள்ளிட்ட விவரங்கள் இருக்கும்.

பிபிஎஃப் கணக்கு துவங்க எவ்வளவு பணம் தேவை?

பிபிஎஃப் கணக்கு துவங்க குறைந்த பட்சம் ரூ.500 தேவை. அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் போடலாம்.

வரி விலக்கு:

நீங்கள் பி.பி.எஃப் கணக்கில் ரூ. 1 லட்சத்திற்கும் மேல் பணம் போட்டிருக்கலாம். ஆனால் வருமான வரி சட்டம் 80 சி பிரிவின் கீழ் அதிகபட்சம் ரூ. 1 லட்சத்திற்கு மட்டுமே வரி விலக்கு பெற முடியும்.

கடன்

பிபிஎஃப் கணக்கு துவங்கி 3 முதல் 5வது நிதியாண்டு வரை அந்த தொகையின் மீது நீங்கள் கடன் பெறலாம். கடனுக்கு 2 சதவீதம் வட்டி வசூலிக்கப்படும்.

முடிந்த வரை பிபிஎஃப் கணக்கை பாதியில் மூடிவிட்டு அதில் உள்ள பணத்தை எடுத்துவிடாமல் இருக்கவும். அந்த பணம் தான் நீங்கள் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு உதவும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: post office
English summary

How to open a PPF account at a post office? | தபால் நிலையத்தில் வருங்கால வைப்பு நிதி கணக்கு(பிபிஎஃப்) துவங்குவது எப்படி?

Public Provident Fund (PPF) is a great vital investment tool, for one to build a corpus for his retirement by investing in the instrument every year. By this an individual can claim tax rebate every year on whatever amount he invests in. Non Resident Indians are not eligible to open an account under the Public Provident Fund Scheme
Story first published: Monday, February 18, 2013, 12:19 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X