வேலையை மாத்துறீங்களா? பி.எஃப் கணக்கை மூடிடாதீங்க!

Posted By:
Subscribe to GoodReturns Tamil

வேலையை மாத்துறீங்களா? பி.எஃப் கணக்கை மூடிடாதீங்க!
பெங்களூர்: வேலையை மாற்றும்போது இ.பி.எஃப்.(எம்ப்லாயீ ப்ராவிடன்ட் பன்ட்) கணக்கையும் சேர்த்து மாற்றுங்கள்.

ஒரு நிறுவனத்தில் இருந்து இன்னொரு நிறுவனத்திற்கு வேலைக்கு போகிறீர்களா? அப்படி என்றால் பழைய நிறுவனத்தில் உள்ள இ.பி.எஃப்.( எம்ப்லாயீ ப்ராவிடன்ட் பன்ட்) கணக்கை புதிய நிறுவனத்திற்கு மாற்றிக் கொள்வது நல்லது.

இ.பி.எஃப். கணக்கை எப்படி டிரான்ஸ்பர் செய்வது?

பார்ம் 13ஐ (உங்கள் நிறுவனத்திடம் இருந்து பெறலாம் அல்லது டவுன்லோட் செய்யலாம்) பெறவும்.

அதில் உங்கள் பழைய நிறுவனம் குறித்த தகவலை அளிக்க வேண்டும். முக்கியமாக பழைய இ.பி.எஃப். கணக்கு எண்ணை குறிப்பிட வேண்டும்.

புதிய நிறுவனத்தில் கொடுக்கப்பட்ட இ.பி.ஃப். எண்ணையும் அதில் குறிப்பிட்டு, விண்ணப்பக் கடிதத்துடன் அதை புதிய நிறுவனத்தின் ஹெச்.ஆரிடம் கொடுக்கவும்.

அவர் அதில் தேவையானவற்றை பூர்த்தி செய்து, உரியவர்களிடம் கையொப்பம் பெற்று பி.எப். அலுவலகத்திற்கு அனுப்பி வைப்பார்.

விண்ணபக் கடிதத்துடன் கூடிய பார்ம் 13ன் ஒரு நகல் நீங்கள் வேலை பார்த்த பழைய நிறுவனத்திற்கும், மற்றொன்று பி.எப். துறைக்கும் அனுப்பப்படும்.

இதையடுத்து நீங்கள் வேலை பார்த்த நிறுவனத்தார் அவர்களுக்கு அனுப்பப்பட்ட பாரத்தில் தேவையான தகவல்களை நிரப்பி அதை பி.எப். அலுவலகத்திற்கு அனுப்பி வைப்பார்கள். மேலும் உங்களுக்கும் ஒரு நகல் கொடுப்பார்கள்.

மாறாக இ.பி.எஃப். கணக்கில் உள்ள பணத்தை எடுக்க நினைத்தால் பார்ம் 10சியை நிரப்பி சமர்பிக்கவும். ஆனால் இ.பி.எஃப். கணக்கு துவங்கிய 5 ஆண்டுகளுக்குள் அதில் இருந்து பணத்தை எடுத்தால் அந்த தொகைக்கு வருமான வரி கட்ட வேண்டும். அதனால் இ.பி.எஃப் கணக்கை மாற்றுவதே நல்லது.

நீங்கள் வேலைக்கு செல்லும் இடமெல்லாம் இ.பி.எஃப். கணக்கை மாற்றினால் உங்களுக்கு 58 வயதாகும்போது அதில் இருந்து ஓய்வூதியம் வரும். மேலும் நீங்கள் ஓய்வு பெறும்போது அந்த கணக்கில் இருந்து பெரும்தொகை கிடைக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: transfer, epf account
English summary

How to transfer an EPF account? Why is it necessary? | வேலையை மாத்துறீங்களா? பி.எஃப் கணக்கை மூடிடாதீங்க!

It is always better to transfer your EPF(Employee Provident Fund) account whenever you change jobs. If you keep on transfering EPF account while changing jobs, you will get a huge amount while retiring apart from pension.
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns