வீட்டு கடன் வாங்கப் போறீங்களா? இதை படிச்சிட்டு போங்களேன்!

Posted By:
Subscribe to GoodReturns Tamil

வீட்டு கடன் வாங்க என்னென்ன ஆவணங்கள் தேவை?
பெங்களூர்: வீட்டு கடன் கேட்டு விண்ணப்பிக்கும்போது எந்தெந்த ஆவணங்கள் தேவை என்பதைப் பார்ப்போம்.

இன்றைய காலகட்டத்தில் பலர் வீட்டு கடன் வாங்கி தான் வீடு கட்டுகின்றனர். அவ்வாறு வீட்டு கடன் கோரி வங்கிகளில் விண்ணப்பிக்கையில் எந்தெந்த ஆவணங்கள் தேவை என்பது தெரியுமா? இந்த ஆவணங்கள் ஒவ்வொரு வங்கிகளுக்கும் வேறுபடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மாதச் சம்பளம் வாங்குபவர்கள்:

உங்கள் புகைப்படம் மற்றும் கையெழுத்து உள்ள விண்ணப்பம்.

கடைசி 3 மாதத்திற்கான சம்பள ஸ்லிப். சில வங்கிகள் கடைசி 6 மாதத்திற்கான சம்பள ஸ்லிப்பைக் கேட்கலாம்.

பார்ம் 16 மற்றும்/அல்லது வருமான வரி கணக்கு தாக்கல் செய்த ரசீது

வங்கி கணக்கின் கடைசி 6 மாதம் அல்லது கூடுதலான மாதங்களுக்கான பண பரிவர்த்தனை அறிக்கை

அடையாளம், வயது மற்றும் வீட்டு முகவரிக்கான சான்று

புராசஸிங் ஃபீ/ செக்

சுயதொழில் செய்வோர்/ புரபஷனல்ஸ்

உங்கள் புகைப்படம் மற்றும் கையெழுத்து உள்ள விண்ணப்பம்

அடையாளம், வயது மற்றும் வீட்டு முகவரிக்கான சான்று

வியாபாரம் செய்வதற்கான சான்று

கடந்த 3 ஆண்டுகளுக்கான லாப, நஷ்ட கணக்கு. அதுவும் சார்டர்ட் அகௌண்டன்ட் கையெழுத்துடன் கூடியதாக இருக்க வேண்டும.

கடந்த 6 மாதங்களுக்கான வங்கி கணக்கு அறிக்கை

புராசஸிங் ஃபீ/ செக்

வீட்டு கடன் கேட்டு வங்கிகளுக்கு செல்லும் முன்பு புராசஸிங் ஃபீ, வட்டி விகிதம் உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொண்டு செல்லவும். புராசஸிங் ஃபீ, வட்டி விகிதம் உள்ளிட்டவை வங்கிகள் மற்றும் வீட்டு கடன் கொடுக்கும் நிறுவனங்களைப் பொருத்து வேறுபடும். உதாரணமாக வீட்டு கடன் கொடுக்கும் நிறுவனங்களின் சேவை நன்றாக இருந்தாலும் வங்கிகளுடன் ஒப்பிடுகையில் அவற்றின் வட்டி விகிதம் கூடுதலாக இருக்கும்.

அதே சமயம் பொதுத் துறை வங்கிகள் குறைந்த வட்டியில் கடன் கொடுக்கும். மேலும் கடனை வழங்க எத்தனை நாட்கள் எடுப்பார்கள் என்பதையும் பார்க்க வேண்டும். சில வங்கிகள் கடன் தொகையை கொடுக்க 45 நாட்கள் கூட எடுத்துக்கொள்ளும். ஆனால் சில வங்கிகள் வெறும் ஒரு வாரத்தில் பணம் கொடுக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What are the documents needed for home loans? | வீட்டு கடன் வாங்க என்னென்ன ஆவணங்கள் தேவை?

Are you going to apply for a home loan? Then read the above article to have an idea of the necessary documents to be submitted while applying for a home loan.
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns