இன்சூரன்ஸ் பாலிசியை மேலும் பயனுள்ளதாக்குவது எப்படி?

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்சூரன்ஸ் பாலிசியை மேலும் பயனுள்ளதாக்குவது எப்படி?
பெங்களூர்: ஒரு காபி கடைக்கு செல்கிறோம். அங்கு ஒரு காப்பசினோவை ஆர்டர் செய்கிறோம். நமது முன்பாக க்ரீம், பருப்புகள், மற்றும் சாக்லெட் ஆகியவை கலந்த காபி வைக்கப்படுகிறது. அதைப் பார்த்ததும் நம்மை அறியாமலே அந்த காபியை ஆசையோடு பருகுகிறோம். அதற்கு காரணம் ஒரு சாதரண காபியில் க்ரீம், பருப்புகள் மற்றும் சாக்லெட் ஆகியவை கலந்திருப்பதால் அவை நம்மை வெகுவாக கவர்கின்றன.

 

How to make more money from fixed deposits?

இவ்வாறு ஒரு காபியில் சேர்க்கப்பட்ட க்ரீம் மற்றும் சாக்லெட் நமது காபி அருந்தும் அனுபவத்தை இரட்டிப்பாக்கும் போது, நமது இன்சூரன்ஸ் பாலிசியிலும் சூப்பரான ஆஃபர்கள் வழங்கப்பட்டால் இன்சூரன்ஸ் பாலிசியும் இரட்டிப்பு சந்தோஷத்தை அளிக்கும். எந்த ஒரு பொருளை வாங்கினாலும், அதிலிருந்து நிறைய பலன்களை எதிர்பார்க்கிறோம். இதில் காபி மற்றும் இன்சூரன்ஸ் பாலிசி ஆகியவை விதிவிலக்கல்ல.

இந்த நிலையில் இன்சூரன்ஸ் பாலிசியில் ஏராளமான கவர்ச்சிகரமான ஆஃபர்கள் இருக்கும் போது, நாம் ஏன் பாலிசியின் தொடக்க கால அடிப்படை திட்டங்களில் மட்டும் திருப்தி அடைய வேண்டும். இன்சூரன்ஸ் பாலிசியில் வந்திருக்கும் புதிய ரைடர்களைத் தெரிந்து கொண்டு அவற்றில் இணைந்தால் நமது இன்சூரன்ஸ் பாலிசி மூலம் ஏராளமான நன்மைகளைப் பெற முடியும்.

ரைடர்கள் என்றால் என்ன?

ரைடர்கள் என்றால் லைப் இன்சூரன்ஸ் பாலிசியில் இணைக்கப்பட்டிருக்கும் விருப்ப நன்மைகள் ஆகும். இதை வேண்டும் என்றால் பெறலாம். விருப்பம் இல்லையென்றால் விட்டுவிடலாம். இந்த ரைடர்களை வாங்க விரும்பினால் நமது பாலிசியைத் தவிர்த்து தனியாக வாங்க வேண்டும். மேலும் இந்த ரைடர்கள் பாலிசியின் அடிப்படையான மதிப்பைப் பொருத்து வழங்கப்படுவதால், பாலிசி இல்லாமல் ரைடர்களை மட்டும் தனியாக வாங்க முடியாது. பாலிசி வாங்கும் போது, தேவைப்பட்டால் இந்த ரைடர்களையும் வாங்கிக் கொள்ளலாம். இந்த ரைடர்கள் பாலிசிதாரரின் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் இருக்கும்.

ரைடர்கள் வழங்கும் பொதுவான நன்மைகள்:

லைப் இன்சூரன்ஸ் பாலிசியோடு பலவகையான ரைடர்கள் வழங்கப்படுகின்றன. நமது தேவைக்கேற்ப ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ரைடர்களைத் தேர்வு கொள்ளலாம். இந்த ரைடர்களில் மிக முக்கியமானவை ஆக்சிடென்டல் பெனிபிட் ரைடர், கிரிட்டிக்கல் இல்னஸ் ரைடர், டிஸ்எபிலிட்டி இன்கம் ரைடர் மற்றும் பிரீமியம் வேவர் ரைடர் போன்றவையாகும்.

1. ஆக்சிடென்டல் பெனிபிட் ரைடர்:

பாலிசிதாரர் எதாவது ஒரு விபத்தில் இறந்துவிட்டால் அவருடைய நாமினி இரண்டு மடங்கான பணத்தை பெறுவதற்கு இந்த ரைடர் வழிவகுக்கிறது. எனவே ஒவ்வொரு மாதமும் இன்சூரன்ஸ் பாலிசியைத் தவிர்த்து இந்த ரைடருக்கு தனியாக ஒரு சிறிய தொகையச் செலுத்தி வந்தால், நமது எதிர்பாராத திடீர் மரணத்திற்கு பின் நமது குடும்பத்திற்கு ஒரு பெரிய தொகையை அளிக்க முடியும்.

2. கிரிட்டிக்கல் இல்னஸ் ரைடர்:

மாரடைப்பு, சிறுநீரக செயலிழப்பு, புற்று நோய் போன்ற நோய்கள் ஏற்பட்டால் அதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள அதிகமான அளவில் பணம் தேவைப்படும். ஆனால் இந்த கிரிட்டிக்கல் இல்னல் ரைடரை நாம் வைத்திருந்தால், மேற்கூறிய நோய்கள் வரும் போது இன்சூரன்ஸ் நிறுவனமே நமது சிகிச்சைக்கான செலவுகளைப் பார்த்துக் கொள்ளும்.

 

3. டிஸ்எபிலிட்டி இன்கம் ரைடர்:

சூப்பராக பணம் ஈட்டும் ஒருவர் பலவித காரணங்களால் பணம் ஈட்ட முடியாத நிலை ஏற்படலாம். அது போன்ற நேரங்களில் இந்த டிஸ்எபிலிட்டி இன்கம் ரைடரை வைத்திருந்தால், அவருக்கு ஒரு தொகையை இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்கும். குறிப்பாக அவர் பணம் ஈட்ட முடியாமல் இருக்கும் காலம் வரை இந்த தொகையை வழங்கும்.

4. பிரீமியம் வேவர் ரைடர்:

பாலிசிதாரர் தன்னால் மீண்டும் வேலைக்குச் செல்ல முடியாது மற்றும் பணம் ஈட்ட முடியாது என்று அறிவித்துவிட்டால் அவர் பிரீமியம் தொகையைச் செலுத்துவதிலிருந்து விடுவிக்கப்படுகிறார். ஆனால் அவரது பாலிசி செயலிழந்துவிடாது. அது ஆக்டிவாகவே இருக்கும்.

ஒவ்வொருவருக்கும் தனித்தனியான தேவைகளும் மற்றும் விருப்பங்களும் இருக்கும். அவற்றுக்கு ஏற்ப இன்சூரனஸ் நிறுவனங்கள் புதிய திட்டங்களை அறிவித்து தங்களது பாலிசிதாரர்களுக்கு உரிய நேரத்தில் அவர்களுக்குத் தேவையான நன்மைகளை வழங்கி வருகின்றன.

நீங்களும் ரைடர்களைத் தெரிந்து கொண்டு, உங்களுக்குத் தேவையான ரைடர்களை வாங்கிப் பயன் பெறலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Add More Life to Your Insurance Policy – Get a Rider | இன்சூரன்ஸ் பாலிசியை மேலும் பயனுள்ளதாக்குவது எப்படி?

We all like to get more out of the products we purchase, whether it is a beverage or an insurance policy. So why would you settle for just the basic when some very attractive add-ons are easily available? Riders available with life insurance policies make the policies more effective and help you get more benefits at every step.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X