மூலதன ஆதாயத்திற்கும், வருமானத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மூலதன ஆதாயத்திற்கும், வருமானத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
சென்னை: மூலதன ஆதாயம் என்றால் என்ன? வருமானத்திற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்? இதற்கு வரி எப்படிக் கணக்கீடு செய்யப்படும்? என்ற கேள்விகளுக்கு உங்களுக்கு விடை தெரியுமா? அதைப் பற்றி இங்கு பார்க்கலாம்.

 

Credit Cards: Things to know before applying

மூலதன ஆதாயம்:

மூலதன ஆதாயம் என்றால், நீங்கள் சொத்துக்களை நீண்ட காலம் அதாவது பங்குகளை ஒரு ஆண்டுக்கு மேல் அல்லது மற்ற சொத்துக்களை மூன்று ஆண்டுகளுக்கு மேல் வைத்திருந்து பின்னர் விற்றால் அது மூலதன ஆதாயமாகக் கருதப்படும். அது மட்டும் இல்லாமல் இதற்கு வரி செலுத்த வேண்டும்.

பொதுவாக இந்தியாவில் நமக்கு சேர்த்து வைக்கும் பழக்கம் ஆதிகம். நிலம், நகை, பங்குகள் என சேர்த்து வைப்பது வழக்கம். அதன் பின்னர் சூழ்நிலை மாறும் போது இந்த சொத்துக்களை விற்று பலன் அடைவோம். அப்படி விற்கும் போது வரும் லாபத்திற்கு பெயர் தான் மூலதன ஆதாயம். இந்த லாபத் தொகைக்கு வரி உண்டு. எடுத்துக்காட்டாக கமல் என்பவர் 2005ம் ஆண்டு ரூ. 10 லட்சத்திற்கு ஒரு இடம் வாங்கினார். இன்று அதன் விலை ரூ. 18 லட்சம். அவர் அந்த நிலத்தை ரூ. 18 லட்சத்திற்கு விற்றால், லாபமாக கிடைத்த ரூ. 8 லட்சத்திற்கு அவர் வரி கட்ட வேண்டும்.

வரி செலுத்தல்:

வரி தொகை கமலின் வருமான வரி சதவீதத்தைப் பொறுத்தது. அவ்வாறு வரி கட்டும் போது அவருக்கு விலை குறியீட்டுடன் இணைக்கப்பட்ட கடன் நன்மைகளும் (indexation benefits) கிடைக்கும். இந்த மூலதன தொகையை மீண்டும் நிலமாகவோ அல்லது அரசின் குறிப்பிட்ட பத்திரங்களிலோ முதலீடு செய்தால் இந்த தொகைக்கு வரி கட்டத் தேவையில்லை என்பது ஒரு ஆறுதலான விஷயம்.

வருமானம்:

வருமானம் என்பது தனி ஒரு மனிதனின் சம்பளம் அல்லது தொழிலில் கிடைத்த லாபம், வாடகை, வட்டி போன்றவையாகும். தொழில் செய்வோருக்கு வருமானம் என்பது செலவுகளை கழித்த பின் வரும் தொகை. மூலதன சொத்துக்கள் இல்லாமல் பிற வகை சொத்துக்கள் அதாவது கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள், தொழிலுக்கு தேவையான ஸ்டாக், நகை அல்லாத பிற உடமைகள், அரசின் குறிப்பிட்ட முதலீட்டு பத்திரங்கள் ஆகியவை விற்பனை செய்து வரும் தொகையும் வருமானம் தான்.

வரி செலுத்தல்:

வருமான வரி என்பது தனி ஒரு மனிதனின் சம்பளத்தைப் பொறுத்தது. அதனைக் கணக்கீடு செய்ய வருமானத்திற்கு ஏற்றவாறு வரி சதவீதங்கள் உள்ளன. இந்த சதவீதத்தைப் பொறுத்தே ஒருவரின் வருமான வரி கணக்கீடு செய்யப்படும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Difference between capital gains and total income | மூலதன ஆதாயத்திற்கும், வருமானத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?

Not many investors understand the implications of capital gains tax and what it means. One needs to understand the difference, and use benefits available for exemption from capital gains tax and act accordingly.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X