தேசிய சேமிப்பு பத்திரங்கள்.. சில சுவாரஸ்ய தகவல்கள்

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தேசிய சேமிப்பு பத்திரங்கள்.. சில சுவாரஸ்ய தகவல்கள்
பெங்களூர்: இந்திய அரசாங்கம் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் எண்ணத்தோடு தேசிய சேமிப்பு பத்திரத்தை உருவாக்கியது. இதற்கு வருமான வரி சட்டம் 80 சி பிரிவின் கீழ் வரி விலக்கு உள்ளது. மேலும் இந்த பத்திரத்தை வைத்து கடன் பெறலாம்.

இந்த திட்டம் அரசாங்க ஊழியர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் மற்ற துறைகளில் சம்பளம் பெறுபவர்கள் போன்ற வருமான வரி செலுத்துபவற்களுக்காக உருவாக்கப்பட்டது.

Why to invest in bank auctioned property?

தேசிய சேமிப்பு பத்திரம் VIII வழங்குபவை

• முதலீட்டுக்கு அதிகபட்ச வரம்பு கிடையாது.
• மூலதனத்தில் வரி விலக்கு கிடையாது.
• வங்கிகளில் இருந்து கடன் பெறுவதற்கு இந்த பத்திரங்கள் உதவியாக உள்ளன.
• வருமான வரி சட்டம் 80 சி பிரிவின் கீழ் ஒரு வருடத்திற்கு ரூ1,00,000 வரை வரி விலக்கு பெறலாம்.
• அறக்கட்டளை இதில் முதலீடு செய்ய முடியாது.
• இந்த பத்திரத்தின் காலம் 5 ஆண்டுகள்.
• 8.60 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது.
• 1.4.2012 அன்றோ அதற்கு பிறகோ வாங்கப்பட்ட 100 ரூபாய்க்கான பத்திரத்தின் முதிர்வு மதிப்பு 5 ஆண்டுகள் கழித்து ரூ.152.35 ஆக இருக்கும்.

தேசிய சேமிப்பு பத்திரம் IX வழங்குபவை

• முதலீட்டுக்கு அதிகபட்ச வரம்பு கிடையாது.
• இந்த பத்திரத்தின் காலம் 10 ஆண்டுகள்.
• குறைந்தபட்ச பணம் ரூ.100.
• ஒரு தனி நபருக்கான பத்திரத்தை 18 வயது நிறைந்தவர்கள் மட்டுமே வாங்க முடியும்.
• 8.90 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது.
• 1.4.2012 அன்றோ அதற்கு பிறகோ வாங்கப்பட்ட 100 ரூபாய்க்கான பத்திரத்தின் முதிர்வு மதிப்பு 10 ஆண்டுகள் கழித்து ரூ.238.87 ஆக இருக்கும்.

அரசாங்கம் ஒவ்வொரு நிதி ஆண்டிலும் ஏப்ரல் 1ம் தேதிக்கு முன்னதாக வட்டி விகிதத்தை அறிவிக்கும். தேசிய சேமிப்பு பத்திரம் அரசாங்கத்தால் வழங்கப்படுவதால் இது மிகவும் பாதுகாப்பானதாகும்.

தேசிய சேமிப்பு பத்திரத்தை ஒரு தபால் நிலையத்திலிருந்து மற்றொன்றுக்கு மாற்ற முடியும். தேசிய சேமிப்பு பத்திரம் தொலைந்து, சிதைந்து அல்லது திருடப்பட்டு போனால் டூப்ளிகேட் பத்திரம் வழங்கப்படும்.

வரி விதித்தல்

தேசிய சேமிப்பு பத்திரத்தின் மூலம் கிடைத்த வட்டிக்கு நாம் வரி செலுத்த வேண்டும். ஆனால் இதற்கு டிடிஸ் கிடையாது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Few facts on the National Savings Certificates | தேசிய சேமிப்பு பத்திரங்கள்.. சில சுவாரஸ்ய தகவல்கள்

National Savings Certificate (NSC) is an instrument offered by Government of India with a purpose to encourage savings. It offers tax benefit under 80C, comes with a lock-in and can be pledged to take a loan. The Scheme is specially designed for Government employees, businessmen and other salaried classes who are Income Tax assesses.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X