
வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்கள் தாய் நாட்டில் உள்ள வங்கிகளில் வீட்டுக் கடன் பெறுவதில் சிரமம் ஒன்றும் இல்லை. நீங்கள் வெளிநாட்டில் தான் வசித்து வருகிறீர்கள் என்பதற்கான ஆதாரம் தான் மிகவும் முக்கியம்.
எங்கு வீட்டுக் கடன் பெறுவது?
பெரும்பாலான இந்திய வங்கிகளின் கிளைகள் வெளிநாடுகளில் உள்ளது. சில நாடுகளில் இந்திய வங்கிகளின் கிளைகள் இல்லாவிட்டாலும் அங்குள்ள வங்கிகளுடன் ஒப்பந்தம் செய்திருப்பார்கள். உதாரணமாக மஸ்கட்டில் உள்ள வங்கி ஒன்றுடன் ஹெச்டிஎப்சி வங்கி ஒப்பந்தம் செய்துள்ளது. தற்போது ஆன்லைனில் வீட்டுக் கடன் விண்ணப்பங்கள் உள்ளன. ஆனால் அதையும், தேவையான ஆவணங்களையும் நீங்கள் கூரியரில் அனுப்பி வைக்க வேண்டி இருக்கும்.
என்னென்ன ஆவணங்கள் தேவை?
நீங்கள் வெளிநாட்டில் தான் வசிக்கிறீர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும். அதனால் தான் விசா உள்ளிட்டவை தேவைப்படுகிறது.
வீட்டுக் கடன் வாங்கத் தேவையானவை:
புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பம்.
வேலைக்கான ஒப்பந்தத்தின் ஜெராக்ஸ். ஒரு வேளை ஒப்பந்தம் ஆங்கிலத்தில் இல்லை என்றால் அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து சமர்பிக்க வேண்டும்.
சமீபத்திய ஊதியச் சான்றிதழ்
ஐடி கார்டின் ஜெராக்ஸ் அல்லது ஒர்க் பெர்மிட் ஜெராக்ஸ்
சமீபத்திய ஒர்க் பெர்மிட்டின் ஜெராக்ஸ்
பாஸ்போர்ட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள செல்லத்தக்க குடியுரிமை விசாவின் நகல்
சொத்துக்கள் தொடர்பான ஆவணங்கள்
புராசஸிங் கட்டண காசோலை
நிலையான வேலை இருந்து மாதாமாதம் கடனை திருப்பி அடைக்க முடியும் என்றால் மட்டுமே வீட்டுக் கடன் வாங்கவும். இந்தியாவில் வசிப்பவர்களுக்கும், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் வீட்டுக் கடனுக்கான வட்டி ஒன்று தான்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications