வருமானவரி ரீபண்ட் நிலவரத்தை ஆன்லைன் மூலம் எவ்வாறு அறிந்து கொள்வது?

Posted By: Super
Subscribe to GoodReturns Tamil

வருமானவரி ரீபண்ட் நிலவரத்தை ஆன்லைன் மூலம் எவ்வாறு அறிந்து கொள்வது?
பெங்களூர்: இந்தியாவில் அதிகமானோர் வருமானவரி கட்டுகின்றனர். ஆனால் தாங்கள் செலுத்தும் வருமானவரியின் ரீபண்ட் நிலவரத்தை ஆன்லைன் மூலம் மிக எளிதாகத் தெரிந்து கொள்ளலாம் என்பதை பலர் அறியாமல் இருக்கின்றனர்.

வருமானவரி ரீபண்ட் நிலவரத்தை ஆன்லைன் மூலம் எவ்வாறு அறிந்து கொள்வது?

முதலில் வருமான வரித்துறை இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
அதில் பான் கார்டு எண்கள் மற்றும் அசஸ்மெண்ட் ஆண்டை பதிவு செய்ய வேண்டும்.
இறுதியில் சப்மிட் ஐகனை கிளிக் செய்ய வேண்டும்.

இப்போது வருமானவரி ரீபண்ட் நிலவரத்தைப் பார்க்க முடியும்.

மேலும் எஸ்பிஐ மூலமாக 18004259760 என்ற டோல் ஃப்ரீ எண்ணை அழத்து, அதன் மூலம் வருமானவரி ரீபண்ட் நிலவரத்தைத் தெரிந்து கொள்ளலாம். அல்லது itro@sbi.co.in அல்லது refunds@incometaxindia.gov.in போன்றவற்றிற்கு இமெயில் அனுப்பினால் போதும். வருமான வரி ரீபண்ட் நிலவரம் நமது இமெயிலுக்கு வந்துவிடும்.

ஆனால் ரீபண்ட் நிலவரத்தைத் தெரிந்து கொள்வதற்கு முன்பாக, உரிய காலத்துக்குள் அதற்குரிய விண்ணப்பம் முழுவதையும் ஆன்லைன் மூலம் சரியாக பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

வருமானவரி ரீபண்ட் நிலவரத்தை அறிய முயலும் போது கீழே கொடுக்கப்பட்ட பலவிதமான தகவல்கள் வரலாம்.

முகவரி மாற்றம்:

வருமானவரி கட்டுபவர் தனது முகவரியை அப்டேட் செய்யாமல் இருந்தால் செக்குகள் திரும்பி வந்துவிடும். அதற்கு காரணம் பலர் தங்கள் இருப்பிடத்தை மாற்றிவிட்டு புதிய முகவரியை அப்டேட் செய்ய மறந்துவிடுவர். அதனால் வருமானவரி செலுத்துபவர் தனது புதிய முகவரியை அப்டேட் செய்வது நல்லது.

கவனத்திற்கு:

ரீபண்ட் பேங்கர் திட்டத்தின்படி, வருமானவரி ரிட்டர்ன்ஸானது அசஸிங் அலுவலகர்கள் அல்லது சிபிசி-பெங்களூரு போன்றோரால் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, சிஎம்பி கிளை, மும்பை (ரீபண்ட் பேங்கர்)க்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அங்கிருந்து பின் வருமான வரி கட்டுவோருக்கு அனுப்ப்படும்.

ரீபண்ட் அனுப்பி வைக்கப்படும் முறைகள்:

வருமானவரி ரீபண்ட் இரண்டு முறைகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

ஆர்டிஜிஎஸ்/என்இசிஎஸ்:

இந்த முறையின்பிடி வருமானவரி ரீபண்ட், வரி செலுத்துவோரின் வங்கி கணக்கில் நேரடியாக கிரெடிட் செய்யப்படும். இந்த வசதியைப் பெற வேண்டும் என்றால் வருமான வரி செலுத்துவோர் தங்களது வங்கியின் பெயர், வங்கிக் கணக்கு எண், வங்கிக் கிளைக்கான எம்ஐசிஆர் குறியீடு மற்றும் தொடர்புக்கான முகவரி ஆகியவற்றை ஏற்கனவே தெரிவித்திருக்க வேண்டும்.

பேப்பர் செக்:

இந்த முறையில் வருமானவரி ரீபண்டைப் பெற வேண்டுமென்றால் வருமான வரி செலுத்துவோர் சரியான முகவரியைக் கொடுத்திருக்க வேண்டும்.

அசஸிங் அலுவலகர், ரீபண்ட் பேங்கருக்கு ரீபண்டை அனுப்பி வைத்த 10 நாட்களுக்குப் பிறகு வரி செலுத்துவோர் தமது ரீபண்ட் நிலவரத்தை ஆன்லைன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

www.tin-nsdl.com என்ற இணையதளத்தில் பெய்ட் ரீபண்ட், பீயிங் பெய்ட், ரீபண்ட் பேங்கர் போன்ற நிலவரத்தைப் பார்க்க முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to check income tax refund status online? | வருமானவரி ரீபண்ட் நிலவரத்தை ஆன்லைன் மூலம் எவ்வாறு அறிந்து கொள்வது?

Did you know that you can check your income tax refund status online? Yes, there is a simple way to do it. Many people are not aware of the fact that it can be checked online and they keep waiting, worrying about their status.
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns