குழந்தை காப்பீட்டு திட்டங்களால் பெற்றோருக்கு கிடைக்கும் பலன்கள்

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  குழந்தை காப்பீட்டு திட்டங்களால் பெற்றோருக்கு கிடைக்கும் பலன்கள்
  விளம்பரங்களில் கூறப்படுவது போல் குழந்தை காப்பீட்டு திட்டங்கள் உண்மையிலேயே பயனளிக்குமா என்று பலருக்கு சந்தேகம் வரும். ஒரு குழந்தையின் எதிர்கால பாதுகாப்பிற்கு இவ்வகையான திட்டங்கள் அவசியமா என்று கூட பலர் யோசிக்கலாம். பலருக்கு இத்திட்டங்கள் என்றால் என்னவேன்றே தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

   

  பெரும்பாலான பெற்றோர்கள் வங்கியிலோ அல்லது அஞ்சலகத்திலோ குழந்தைகளுக்காக பணத்தை சேமிப்பர். ஆனால் இவ்வகை காப்பீட்டு திட்டங்களில் முதலீடு செய்தால் எவ்வகையில் லாபம் வரும் என்பது பற்றி தெரியாததால் வங்கியில் சிறுக சிறுக பணத்தை குழந்தைகளுக்காக பணத்தை சேமித்து வைக்கின்றனர். இனி குழந்தை காப்பீட்டு திட்டங்கள் குழந்தைக்கும் பெற்றோருக்கும் எவ்வகையில் லாபம் தருகிறது என்பதை பார்ப்போம்.

  1. ஒரு காப்பீட்டு திட்டமானது ஒட்டு மொத்த நிதி திட்டமிடலோடு தொடர்புடையது என்று பல முதலீட்டாளர்களுக்கு தெரியும். ஆபத்தான இடர்களை சமாளிக்கும் (மரணத்தையும் சேர்த்து) திறனை இவ்வகை காப்பீட்டு திட்டங்கள் கொண்டுள்ளதால் ஒவ்வொரு முதலீட்டாளர்களுக்கும் இவ்வகை திட்டங்கள் அவசியமான ஒன்றாகும். அதிலும் குழந்தைகளுக்கான காப்பீட்டு திட்டங்களில் கூடுதலான சில நன்மைகள் உள்ளன.

  2. ஒரு குழந்தை காப்பீட்டு திட்டமானது, நாமினியாக(nominee) கருதப்படும் குழந்தைகளுக்கு இறப்புப் பயனை தருவது மட்டுமல்லாமல் குழந்தை நலனுக்காக பிரீமியத்தை தொடரவும் உறுதி அளிக்கிறது. உதாரணமாக ஒரு தந்தை ஆண்டு பிரீமியமாக ரூ 10 லட்சத்தை குழந்தை காப்பீட்டு திட்டத்தில் முதலீடு செய்தால், அவரது இறப்புக்கு பிறகு அவரது குடும்பம் இறப்பு பயனாக ரூ 10 லட்சத்தை பெறுவதற்கு தகுதி பெற்றவராகின்றனர். மேலும் காப்பீட்டு திட்டத்தின் மீதமுள்ள ஆண்டுகளில், ஆண்டுக்கு ரூ 5௦,௦௦௦ குழந்தையின் பெயரில் முதலீடாக போடப்படுவது இவ்வகை காப்பீட்டு திட்டத்தின் ஒரு சிறப்பான அம்சமாகும். இதனால் குடுபத்தினர் மட்டுமல்லாமல் குழந்தைக்கும் இத்திட்டம் இக்கட்டான சூழலில் பேருதவி புரிகிறது.

  3. தந்தை அல்லது தாயின் இறப்புக்கு பின் இத்திட்டங்கள் நிதி இழப்பிலிருந்து குடும்பத்தை பாதுகாப்பது மட்டுமல்லாமல், மேலும் இத்திட்டத்தில் உள்ள நன்மைகளை பெறவும் உறுதி அளிக்கிறது. வேறெந்த திட்டத்திலும் இல்லாத சிறப்பான விஷயமாக இது உள்ளது. இந்த அம்சமே குழந்தை திட்டத்தில் நிதி திட்டமிடலுக்குத் தேவையான முக்கிய கூறுகளாக உள்ளன.

  4. ஒரு குழந்தை காப்பீட்டு திட்டமானது காப்பீட்டு தயாரிப்பாக வருவதால், ஒரு காப்பீட்டு திட்டம் தொடர்புடைய மற்ற அம்சங்களோடு இந்த திட்டம் வருகிறது. சமீப காலமாக மிகவும் பிரபலமாக, முதலீட்டாளர்கள் பங்கு வெளிப்பாடுகளை பயன்படுத்தி தங்கள் விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ள இத்திட்டம் அனுமதி அளிக்கிறது.

  5. ஒரு நீண்ட கால குழந்தை காப்பீட்டு திட்டத்தில் கையெழுத்திடும் போது யூனிட்-லிங்க் காப்பீட்டு திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம். பங்கு வெளிப்பாடு தவிர, ஒரு யூனிட் தொடர்புடைய காப்பீட்டு திட்டம் பல்வேறு நெகிழ்வான அம்சங்களை முதலீட்டாளர்களுக்கு வழங்குகிறது. பிரீமியத்தை இடைநிறுத்தும் போது எந்த வித நஷ்டத்தையும் இவ்வகை காப்பீட்டு திட்டங்கள் தராது. மேலும் ஒரு முதலீட்டு விருப்பத்திலிருந்து மற்றொரு முதலீட்டு விருப்பத்துக்கு மாற்றம் செய்ய உதவி புரிகிறது. இதுபோல பல நல்ல விஷயங்களை இவ்வகை காப்பீட்டு திட்டங்கள் வழங்குகின்றன.

   

  6. மேலும் முக்கியமாக இவ்வகைத் திட்டங்கள் பாரம்பரிய திட்டங்களோடு ஒப்பிடுகையில் ஒரு உயர்ந்த வாழ்க்கைக்கான சாதகமான அம்சத்தை முதலீட்டாளர்களுக்கு வழங்குகிறது. எனினும் இறப்பு விகித கட்டணம் குறைவாக இதில் இருப்பதால், இளவயதை உடைய பெற்றோர்கள் இவ்வகை திட்டங்களை தேர்ந்தெடுக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் இந்த குழந்தை காப்பீட்டு திட்டத்தில் குறைந்தது 1௦ ஆண்டுகளாவது ப்ரீமியம் செலுத்த வேண்டும். முடியாத போது இத்திட்டமானது மிகுந்த செலவுக்குள்ளாகி விடும்.

  7. ஒரு இளம் முதலீட்டாளர் ஒரு குழந்தை காப்பீட்டு திட்டம் பற்றி அவரது இளவயதிலேயே நினைக்கத் தொடங்கினால், அவர் தனது காப்பீட்டு திட்டத்தில் இருந்து நல்ல வருமானம் ஈட்டும் நன்மையை பெறுவார். பொதுவாக, வாழ்வின் ஆரம்ப கட்டங்களில், ஒரு முதலீட்டாளர் ஒரு சிறு முதலீட்டின் மூலமும் முழுமையான திட்டமிடல் மூலமும் தன்னுடைய நீண்ட கால இலக்குகளை அடைய முடியும். ஒரு குழந்தை காப்பீட்டு திட்டத்திலுள்ள யூனிட்-லிங்க் காப்பீட்டு திட்டமானது அவரது நடுத்தர கால இலக்குகளை சந்திக்க அவருக்கு உதவி புரிகிறது என்றால் அது மிகையில்லை.

  8. இவ்வகை குழந்தை காப்பீட்டு திட்டங்கள் உங்களுக்கு அருகிலிருந்து உதவி செய்யும் ஒரு நபரைப்போல் இருந்து உங்களுக்கு தேவையான நேரத்தில் பணத்தட்டுப்பாட்டை நீக்க உத்திரவாதம் அளிக்கிறது. ஒரு சிறிய தொகையை வழக்கமான அடிப்படையில் சேமிக்கும் போது, சரியான நேரத்தில் ஓட்டு மொத்த தொகையாக நமது கைக்கு கிடைக்கிறது. இவ்வாறு சேமிக்கும் பணமானது குறிப்பிட்ட காலத்திற்குள் வளர்ச்சி அடைந்து நமது அன்பிற்குரிய குழந்தைகளுக்கு நற்கனிகளை வழங்குகிறது.

  9. ஒரு துரதிருஷ்டவசமான சம்பவத்தால் காப்பீட்டாளருக்கு மரணம் ஏற்பட்டால் நாமினிக்கு உறுதி தொகை, தலைகீழ் நிலை ஏற்பட்டதற்கான மாறுதல் போனஸ் மற்றும் டெர்மினல் போனஸ் போன்றவை வழங்கப்படும்.

  10. குழந்தை காப்பீட்டு திட்டத்தால் எதிர்கால பண நெருக்கடியை சமாளிக்க முடியும். உதாரணத்திற்கு குழந்தையின் படிப்பு மற்றும் திருமணம் போன்றவற்றிற்கு இவ்வகை திட்டங்கள் பெருமளவில் நன்மை செய்கின்றன.

  11. குழந்தை 18 வயதை அடைந்தவுடன் இத்திட்டங்களின் செயலானது தானாகவே பெற்றோரிடமிருந்து குழந்தை கைக்கு செல்கிறது. அதாவது குழந்தையின் பெயருக்கு மாற்றப்படுகிறது. இந்த முறையை வெஸ்டிங் என்று அழைப்பர். இதனால் முழுப்பயனையும் குழந்தைகள் பெறுவர்.

  12. குழந்தைகள் என்டோவ்மென்ட் திட்டங்கள் (child Endowment Plans), குழந்தைகள் பணம் திருப்பித்தரும் திட்டங்கள் (Child Money-Back Plans) (இந்த இரு திட்டங்களும் பாரம்பரிய குழந்தை திட்ட வகையின் கீழ் வரும்) மற்றும் குழந்தைகள் பிரிவு இணைந்த காப்பீடு திட்டங்கள் (ULIPs) என்ற மூன்று வகை காப்பீட்டு திட்டங்கள் தற்போது பிரபலமாக உள்ளன. இந்த காப்பீட்டு திட்டங்களை குழந்தையின் தாத்தா, பாட்டி, மாமா போன்ற நெருங்கிய உறவினர்கள் குழந்தைக்கு பரிசாக அளிக்கலாம். எனினும் முன்மொழிபவர் பெற்றோர்களாகவோ அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலராகவோ மட்டுமே இருக்க முடியும்.

  13. குழந்தைகள் காப்பீட்டு திட்டங்கள் பல இருந்தாலும், பெற்றோர்கள் அவற்றை தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இத்திட்டங்களை தேவையின் அடிப்படையிலே மட்டுமே தொடங்க வேண்டும். பெரும்பாலான அனைத்து குழந்தைகள் காப்பீட்டு திட்டங்களும் ஒரே மாதிரி நன்மைகளை தந்தாலும், ‘பிரீமிய தள்ளுபடி' திட்டத்தை கொடுக்கும் குழந்தை காப்பீட்டு திட்டத்தை தேர்ந்தெடுப்பது பெற்றோர் இல்லாத போதும் குழந்தைக்கு நன்மையை தரும்.

  தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

  English summary

  How child insurance plans benefit the child as well as the parents | குழந்தை காப்பீட்டு திட்டங்களால் பெற்றோருக்கு கிடைக்கும் பலன்கள்

  With soaring costs and unexpected expenses at every turn, life sure has a lot of surprises for you at every crossroad. And speaking of costs, how can one ignore the rising costs of education? Education is believed to be one of the most expensive sectors worldwide.
  Story first published: Monday, March 18, 2013, 12:29 [IST]
  Company Search
  Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
  Thousands of Goodreturn readers receive our evening newsletter.
  Have you subscribed?

  Find IFSC

  Get Latest News alerts from Tamil Goodreturns

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more