ஆன்லைனில் பரஸ்பர நிதியில் மூதலீடு செய்வது எப்படி?

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆன்லைனில் பரஸ்பர நிதியில் மூதலீடு செய்வது எப்படி?
பெங்களூர்: ஆன்லைனில் பரஸ்பர நிதியில்(mutual fund) முதலீடு செய்ய பல வழிமுறைகள் உள்ளன. ஏஜெண்டுகள் உதவியுடன் ஆன்லைன் மூலம் பரஸ்பர நிதியில் முதலீடு செய்வது மிகச் சிறந்த மற்றும் எளிதான வழி ஆகும்.

அதற்காக ஷேர்கான் போன்ற நிறுவனங்கள் உதவி செய்கின்றன. அதாவது உங்களிடம் போதுமான அளவிற்கு பணம் இருந்து நீங்கள் ஆன்லைன் மூலம் பரஸ்பர நிதி திட்டத்தில் முதலீடு செய்ய விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

 

முதலில் ஷேர்கானின் இணையதளத்திற்குள் சென்று ட்ரேட் அன்ட் இன்வெஸ்ட்மென்ட் என்ற ஐகனை கிளிக் செய்ய வேண்டும். அதனைத் தொடர்ந்து பரஸ்பர நிதி என்ற ஐகனை தேர்வு செய்ய வேண்டும். பின் பர்சேஸ் என்ற ஐகனை கிளிக் செய்ய வேண்டும். இப்போது பரஸ்பர நிதியின் பட்டியலை ஆன்லைனில் பார்க்கலாம். அதில் உங்களுக்குப் பிடித்த பரஸ்பர நிதி திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும். அதன் பின் கோ என்ற ஐகனை கிளிக் செய்தால் பலவிதமான திட்டங்களைப் பார்க்கலாம்.

இணையதளங்கள்:

ஆன்லைனில் பரஸ்பர நிதி திட்டத்தில் முதலீடு செய்ய பல்வேறு இணையதளங்கள் உதவுகின்றன.

பரஸ்பர நிதி இணையதளங்கள்

பரஸ்பர நிதி திட்டம் அளிக்கும் நிறுவனங்களின் இணையதளங்களுக்கு சென்று அதன் மூலமும் முதலீடு செய்யலாம். ஆனால் அதில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன. ஆதாவது அந்த இணையதளங்களுக்கு செல்லும் முன் நீங்கள் அவற்றில் பதிவு செய்ய வேண்டும். அதாவது நீங்கள் 5 அல்லது 6 பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்ய விரும்பினால் அந்த 6 நிதி திட்ட இணைதளங்களிலும் பதிவு செய்ய வேண்டும். இதனால் கால விரையம் ஏற்படும்.

நீங்கள் தேர்ந்தெடுத்த பரஸ்பர நிதி திட்ட விண்ணப்பப் படிவத்தை ஆன்லைனில் சரியாகப் பூர்த்தி செய்யவில்லை என்றால், தேவையான ஆவணங்களை நேரில் சென்று கொடுக்க வேண்டி இருக்கும். அதன் பின்தான் நீங்கள் அந்த நிறுவனத்தின் பரஸ்பர நிதி திட்டத்தை வாங்க முடியும்.

பரஸ்பர நிதி திட்டத்தின் ஆன்லைன் பரிவர்த்தனைகள் கீழ்கண்ட முக்கிய அம்சங்களைக் கொண்டிருக்கும்:

சப்ஸ்க்ரைப் அல்லது வாங்குக
என்எஃப்ஓவில் முதலீடு
கூடுதலாக வாங்க
ரிடீம்
திட்ட மாறுதல்

ஆன்லைனில் பரஸ்பர நிதி திட்டத்தில் முதலீடு செய்வதற்கு முன் அந்த திட்டத்தின் தன்மை, நன்மை ஆகியவற்றை முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to invest in mutual funds online? | ஆன்லைனில் பரஸ்பர நிதியில் மூதலீடு செய்வது எப்படி?

There are various ways in which you can invest in a mutual fund online. Some these include doing it through your broker, independent websites, mutual fund websites.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X