ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்புக்கு பிறகு முதலீட்டாளர்கள், கடன் வாங்குவோர் என்ன செய்யணும்?

Posted By: Super
Subscribe to GoodReturns Tamil

ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்புக்கு பிறகு முதலீட்டாளர்கள், கடன் வாங்குவோர் என்ன செய்யணும்?
சென்னை: சமீபத்தில் ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 25 பேசிஸ் பாயிண்ட்ஸ் அல்லது 0.25 சதவீதம் அளவிற்கு குறைத்திருக்கிறது. ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு வழங்கும் கடனின் வட்டி விகிதத்தை ரெப்போ ரேட் என்ற முறையின் மூலம் கட்டுப்படுத்துகிறது. ரிசர்வ் வங்கியின் இந்த புதிய முடிவுக்குப் பின் கடன் வாங்குபவரும் மற்றும் கடன் கொடுப்போரும் எவ்வாறு பயன் பெற முடியும் என்று பார்ப்போம்.

How to make an online tax payment?

1. கடன் வாங்குபவர் என்ன செய்ய வேண்டும்?

நீங்கள் தனி நபர் கடன், வாகன கடன், தங்க கடன் அல்லது கல்விக் கடன் போன்றவற்றை வாங்கத் திட்டமிட்டிருந்தால் சற்று காத்திருங்கள். ஏனெனில் புதிய முடிவின்படி ரிசர்வ் வங்கி, மற்ற வங்கிகளுக்கு வழங்கும் ரெப்போ ரேட்டைக் குறைத்திருப்பதால் வங்கிகளுக்கான செலவீனங்கள் குறையும். இதன் மூலம் மற்ற வங்கிகளும் கடனுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்கும்.

எனினும் தங்களின் சொத்து மதிப்பைக் கணித்த பின்பே, வங்கிகள் தங்களின் வட்டி விகிதத்தைக் குறைக்கும். மேலும் ஏற்கனவே ப்ளோட்டிங் ரேட் அடிப்படையில் தனி நபர் கடன் வாங்கியிருப்போரின் வட்டி விகிதம், ரிசர்வ் வங்கியின் இந்த புதிய முடிவின்படி தானாகவே குறைந்துவிடும்.

2. முதலீட்டாளர் என்ன செய்ய வேண்டும்?

பிக்ஸ்ட் டெப்பாசிட்டில் முதலீடு செய்ய விரும்புவோர், வங்கிகள் தங்கள் வட்டி விகிதங்களைக் குறைப்பதற்கு முன்பே முதலீடு செய்துவிட வேண்டும். ஏனெனில் முதலீட்டுக்கான வட்டி விகிதமும் குறைக்கப்பட இருப்பதால் முதலீட்டுக்கான வட்டி விகிதமும் குறைவாகவே இருக்கும்.

மேலும் முதலீடு செய்ய விரும்புபவர் நீண்ட காலத்துக்கான திட்டத்தில் பழைய வட்டி விகிதத்தில் முதலீடு செய்ய வேண்டும். ஏனெனில் ரிசர்வ் வங்கி தொடர்ந்து வட்டி விகிதத்தைக் குறைக்க இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்திருக்கின்றனர். அதன் மூலம் இந்த ஆண்டு மட்டும் வட்டி விகிதம் 75 முதல் 100 பேசிஸ் பாயிண்டுகள் வரை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What investors and borrowers should do after RBI rate cut? | ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்புக்கு பிறகு முதலீட்டாளர்கள், கடன் வாங்குவோர் என்ன செய்யணும்?

The Reserve Bank of India today decided in its Monetary Policy Review to cut the repo rate by 25 basis points or 0.25 per cent. This means that interest rates in the system, be it lending or borrowing rates are headed lower. RBI controls interest rates in the system through the repo rate - a rate at which it lends money to banks. Above is what a borrower and investor should do after RBI rate cut.
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns