பங்கு பிரித்தல் என்றால் என்ன? அது ஏதற்காக செய்யப்படுகிறது?

Posted By: Super
Subscribe to GoodReturns Tamil

பங்கு பிரித்தல் என்றால் என்ன? அது ஏதற்காக செய்யப்படுகிறது?
சென்னை: பங்குச் சந்தையில் பல தொழில்நுட்ப சொற்கள் உள்ளன. அவற்றில் பங்கு பிரித்தல் (stock split) என்றால் என்ன என்பதை இங்கு பார்க்கலாம்.

பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்களை உற்சாகப்படுத்தப் பல திட்டங்கள் உள்ளன. அதில் ஒன்று இந்த பங்கு பிரித்தல். செபி (எஸ்இபிஐ) விதிமுறைப்படி, ஒரு நிறுவனத்தின் பங்குகளின் விலை ஆறு மாத காலமாக ரூ. 500க்கு மேல் விற்கப்பட்டால், அந்த நிறுவனம் அதனுடைய பங்குகளை இரண்டாகப் பிரிக்கலாம். இதையே பங்கு பிரித்தல் என்று கூறுவார்கள்.

பங்குகளைப் பிரிக்கும் போது பங்குகளின் எண்ணிக்கையும், மதிப்பீடும் மாறுமே தவிர மொத்த மதிப்பு மாறுவதில்லை. தற்போது உள்ள டிமேட் முறையில் இந்தப் பங்குப் பிரித்தல் பெரிய வித்தியாசம் சேர்க்கவில்லை. எனினும் பங்குகளைப் பேப்பர் வடிவில் வர்தகம் செய்த காலங்களில், இந்த முறை பயனுள்ளதாக இருந்தது.

பங்குப் பிரித்தலின் அவசியம்?

பங்குகள் அதிக விலையில் விற்கும் போது பங்கு நிறுவனகள் தங்களுடைய பங்குகளைச் சிறிய முதலீட்டாளர்கள் மற்றும் சாதாரண முதலீட்டாளர்கள் வாங்க வேண்டும் என்பதற்காக பங்குகளின் எண்ணிக்கையை உயர்த்தி, விலையைச் சரிப்படுத்துவார்கள். இதனால், பங்கின் நீர்மைத் தன்மை அதிகரிக்கும். ஆனால் வர்த்தக அளவு குறைவாக உள்ள நிறுவனங்கள் இந்தப் பிரிவு நலன் தராது என்றும், முதலீட்டாளர்கள் இதனை வரவேற்க மாட்டார்கள் என்றும் நம்புகின்றன.

கணக்கிடும் முறை:

ஒரு நிறுவனத்தின் 100 பங்குகள் ரூ.1000க்கு விற்கப்படுகிறது என்றால், அதன் மொத்த மதிப்பு ரூபாய் 100X 1000 = ரூ.1,00,000. ஒரு பங்குக்கு நிறுவனம் மற்றொரு பங்கை தரும்போது அது 200 பங்குகளாக மாறும். பங்கின் மதிப்பை ரூ.500க அந்நிறுவனம் நிர்ணயிக்கையில் அதன் மொத்த மதிப்பு 200 X 500 = ரூ.1,00,000 என அப்படியே இருக்கும்.

முதலீட்டாளர்களுக்குக் கிடைக்கும் பலன்:

பங்கின் நீர்மைத் தன்மைக் கூடுவதால் பங்குகள் விற்பனை அதிகரிக்கும். அதே போல, பங்குகளைப் பிரிப்பதால் அது நன்றாக செல்கிறது என்று முதலீட்டாளர்கள் நினைக்கின்றனர். இதை பங்குகள் வாங்குவதற்கான ஒரு அறிகுறியாகக் கருதுகின்றனர்.

ஆனால் பங்குச் சந்தையில் எதுவும் நிரந்தரமில்லை. பங்குகள் பிரிந்தப் பின்னர் விலை விழவும் செய்யலாம். கவனம் தேவை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Read more about: stock, split, investors, பங்கு
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns