
Employees Provident Fund: How much can one contribute?
ஆன்லைனில் காப்பீட்டுத் திட்டம் வாங்குவதில் உள்ள நன்மை யாதெனில், நீங்கள் பல்வேறு காப்பீட்டுத் திட்டங்களை www.apnapaise.com மற்றும் www.policybazaar.com வலைத்தளங்களில், உங்கள் வயது மற்றும் நீங்கள் விரும்பும் காப்பீட்டுத் தொகை ஆகிய தகவல்களைத் தந்து, பல்வேறு காப்பீட்டுத் திட்டங்களின் நன்மை தீமைகளை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம்.
ஆன்லைனில் வாங்கும்போது, இடைத்தரகர்கள் இல்லாததனால் நிறுவனங்கள் தரகர்களுக்குத் தரும் தரகுத் தொகையை, சந்தாதாரருக்கு தள்ளுபடி விலையாக வழங்குகின்றனர். இவ்வாறு வாங்குவதன் மூலம் நேரம் மிச்சப்படுவதோடு, இந்த இணையதளங்கள் 24 மணிநேர சேவை வழங்குவதால், உங்களுக்குத் தேவையான தகவல்களை நீங்கள் எந்த நேரமும் அறிந்து கொள்ளக்கூடியதாகவும் உள்ளது. தரகர்களின் தவறான வழிகாட்டுதல்களின்றி, மற்றவர்களை சார்ந்திராமல் காப்பீட்டுத் திட்டங்களின் அம்சங்களை, நுகர்வோர் தாங்களே நிதானமாக அலசி ஆராயும் வண்ணம் இம்முறை உள்ளது.
குறைகள்:
• அனைத்து வகையான திட்டங்களும் ஆன்லைனில் கிடைக்கக் கூடியதாக இல்லை.
• இம்முறையில் இணையதளத்திலேயே அனைத்து தகவல்களையும் தர வேண்டி இருப்பதால், அத்தகவல்கள் பிறருக்குக் கசியக்கூடிய உள்ளது. இதனைத் தவிர்க்க விரும்பினால், உங்கள் தகவல்களை நிரப்பும் முன் அந்த இணையதளம் பாதுகாப்பானது தானா என்பதை உறுதி செய்து கொள்வது அவசியம்.
நீங்கள் நினைவில் கொள்ள வேண்டியவை:
• உங்கள் உடல்நிலை பற்றிய உண்மையான தகவல்கள் அனைத்தையும் மறைக்காமல் குறிப்பிட வேண்டும்.
• அனைத்து ஆவணங்களையும் நன்றாகப் படித்து புரிந்து கொண்டு நிதானமாக முடிவு செய்வது அவசியம்.
• உங்கள் காப்பீடு பற்றிய ஆவணங்களை நகலெடுத்து பாதுகாப்பாக வைத்துக் கொண்டால், பின்னால் எழக்கூடிய சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ள ஏதுவாக இருக்கும்.


Click it and Unblock the Notifications