மூத்த குடிமக்களுக்கு மத்திய அரசு வழங்கும் சிறப்பு வரிச் சலுகைகள்

Posted By: Super
Subscribe to GoodReturns Tamil

சென்னை: மத்திய அரசு மூத்த குடிமக்களின் நலன்களுக்கு பல நல்ல திட்டங்களை தீட்டி அவற்றை அமல்படுத்தி வருகின்றது. குறிப்பாக வரி கட்டுவதிலிருந்து விலக்கீடு, பயணச் சலுகை, உடல் ஆரோக்கியத்திற்கான காப்பீட்டு வசதி என்று பல சலுகைகளை அவர்களுக்கு வழங்கி வருகின்றது. மேலும் மூத்த குடிமக்களுக்காக என்னென்ன திட்டங்களை மத்திய அரசு வழங்குகிறது என்று பார்ப்போம்.

வரி கட்டுவதில் சலுகை

இந்திய வருமான வரி சட்டப்படி வருடத்திற்கு ரூ.2.5 லட்சம் வரை வருமானம் பெறும் மூத்த குடிமக்கள் வருமான வரி கட்டத் தேவையில்லை. ஆனால் பிறர் ரூ.2 லட்சத்திற்கு அதிகமாக வருமானம் பெற்றால் அவர்கள் வரி செலுத்த வேண்டும்.

வட்டி விகிதம்

மூத்த குடிமக்கள் வங்கிகளில் முதலீடு செய்யும் வைப்புத் தொகைகளுக்கு அதிக வட்டி விகிதத்தைப் பெறுகின்றனர் (50 பிபிஎஸ் வரை). ஒரு சில நிறுவனங்கள் அவர்கள் முதலீடு செய்யும் வைப்பு தொகைக்கு 50 பிபிஎஸ்ஸுக்கு அதிகமாகவும் வட்டி வழங்குகின்றன.

டிடிஎஸ்

மூத்த குடிமக்கள் படிவம் 15ஹெச்சை சமர்பித்தால் அவர்களின் வைப்புத் தொகையில் இருந்து கிடைக்கும் வட்டிக்கு வரி செலுத்த தேவையில்லை.

காப்பீடு

மருத்துக் காப்பீட்டு சட்டம் பிரிவு 80டியின் படி மூத்த குடிமக்கள் எடுக்கும் காப்பீடுகளுக்கான பிரீமியத்தின் லிமிட் ரூ.20,000 வரை இருக்கலாம்.

வர்த்தகம்

வர்த்தகத்தில் ஈடுபடும் மூத்த குடிமக்கள், தாங்கள் செய்யும் வியாபாரத்தின் மூலம் போதுமான வருமானத்தைப் பெறவில்லை என்றால் அவர்கள் வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள்.

மிகவும் வயது முதிர்ந்த குடிமக்கள்

மிகவும் வயது முதிர்ந்தவர்கள் அதாவது 80 வயதிற்கு அதிமான குடிமக்கள் ஒரு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை வருமானம் பெற்றாலும், அவர்கள் வருமான வரி செலுத்த தேவையில்லை.

இந்திய ரயில்வே

ரயிலில் பயணம் செய்யும் மூத்த குடிமக்களுக்கு அவர்கள் செலுத்த வேண்டிய பயணக் கட்டணத்தில் 30 சதவீதத்தை இந்திய ரயில்வே தள்ளுபடி செய்கிறது.

மேற்கண்ட சலுகைகளை மூத்த குடிமக்கள் அறிந்து அதை சிறப்பான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

A look at the various financial benefits offered to Senior Citizens | மூத்த குடிமக்களுக்கு மத்திய அரசு வழங்கும் சிறப்பு வரிச் சலுகைகள்

The Government of India has taken several measures to help senior citizens by offering them benefits through its schemes. These benefits include those with respect to tax benefits, travel benefits and health care facilities provisioned for them. Take a look at the various other benefits.
Story first published: Friday, April 5, 2013, 15:44 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns