
1956ம் ஆண்டின் கம்பெனி சட்டத்தின் கீழ் பதிவு பெற்ற உற்பத்தித் துறையில் ஈடுபடும் நிறுவனங்கள், என்பிஎப்சி, வீட்டுக் கடன் வழங்கும் நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவங்கள் இந்த நிரந்தர வைப்பு நிதித் திட்டங்களை வழங்குகின்றன.
இந்த தனியார் நிதி நிறுவனங்களில் செய்யப்படும் வைப்பு நிதிகளில் பயன்பாடுகளும் உள்ளன. அதே நேரத்தில் குறைபாடுகளும் உள்ளன.
பயன்கள்
1. அதிக வட்டி
3. குறுகிய கால (6 மாதம்) வைப்பு
3. முதலீட்டாளர் தனது பணத்தை பல நிறுவனங்களில் முதலீடு செய்ய முடியும்.
குறைபாடுகள்
1. பாதுகாப்பு குறைவு
2. வங்கிகள் வைப்பு நிதிகளில் செய்யப்படும் முதலீடுகளுக்கு ரூ.100,000 வரை பாதுகாப்பிற்கான உத்திரவாதத்தை வழங்குகின்றன. ஆனால் தனியார் நிறுவனங்கள் பாதுகாப்பிற்கான உத்திரவாதம் வழங்காது.
3. வைப்பு நிதியிலிருந்து ரூ.5000க்கும் அதிகமாக வட்டி பெற்றால் அதற்கு வரி செலுத்த வேண்டும்.
4. வைப்புக் காலம் முடிவதற்கு முன்பு பணத்தைப் பெற வேண்டுமென்றால் அதில் ஏராளமான பிரச்சனைகள் உள்ளன.
வைப்பு நிதியில் முதலீடு செய்வதற்கு முன் கவனிக்க வேண்டியவை:
1. 14 சதவீதத்திற்கும் அதிகமான வட்டி விகிதத்தை வழங்கும் தனியார் நிதி நிறுவனங்களைத் தவிர்ப்பது நல்லது.
2. தனியார் நிதி நிறுவனங்களின் டிவிடன்ட் பேஅவுட் பேட்டர்னை சரி பார்க்க வேண்டும்.
3. அந்த நிறுவனங்களின் நிதி செயல்பாடுகளை சோதித்து பார்க்க வேண்டும்.
4. வைப்பு நிதியில் முதலீடு செய்வதற்கான காலம் 1 ஆண்டு முதல் 3 ஆண்டு வரை ஆகும்.


Click it and Unblock the Notifications