இந்த 4 தவறுகளை தவிர்த்தால் நிதி பிரச்சனையின்றி வாழலாம்

Posted By: Super
Subscribe to GoodReturns Tamil

சென்னை: பட்ஜெட் சரியாக இருந்தால் அந்த குடும்பம் மிகவும் ஆனந்தமாக இருக்கும் என்பது உறுதி. ஆனால் பொதுவாக குடும்பங்களில் பொருளாதார ரீதியாக ஏராளமான தவறுகள் நடைபெறுகின்றன. அதனால் பொருளாதார ரீதியாக முன்னேற்றமடைய வாழ்க்கை முழுவதும் போராட வேண்டி இருக்கிறது.

(How to check LIC policy status online?)

அப்படி என்னென்ன பொருளாதார தவறுகள் செய்கிறோம் என்பதைப் பார்ப்போம்.

திட்டமிட்ட பட்ஜெட் இல்லாமை

நீங்கள் திட்டமிடும் பட்ஜெட்தான் உங்களின் பொருளாதார வளமைக்கு முழுமுதல் காரணமாக இருக்க முடியும். ஆனால் பெரும்பாலானோர் பட்ஜெட் போடுவதே இல்லை. மாதா மாதம் நீங்கள் செய்யும் செலவுகள் மற்றும் கட்டணங்கள் மற்றும் பொறுப்புகள் மட்டும் பட்ஜெட் இல்லை. மாறாக ஒரு பட்ஜெட் என்றால் அது உங்களது வரவுகள் மற்றும் செலவுகள் ஆகியவற்றை உள்ளடக்கி இருக்க வேண்டும். எனவே சரியான பட்ஜெட்டைத் தயாரித்து உங்களது வரவுகளையும் செலவுகளையும் நீங்கள் அடிக்கடி கண்காணித்துக் கொண்டு வர வேண்டும். அவ்வாறு செய்வது உங்கள் பொருளாதார இலக்குகளை அடைய உதவியாக இருக்கும்.

வரவு எட்டனா செலவு பத்தனா

பொதுவாக எல்லோருக்குமே ஆடம்பர வாழ்க்கை மீது ஒரு மோகம் உண்டு. அப்படிப்பட்ட வசதியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதற்காக பலர் சேமிப்பதைத் தள்ளிப் போட்டுக் கொண்டு இருக்கின்றனர். வரவுக்கு அதிகமாக செலவழிக்கின்றனர். நீங்கள் அனுபவிக்க விரும்பும் சீஸ் பீசா, சிகரெட், புதுபடங்கள் போன்றவற்றுக்கு வாரம் நீங்கள் ரூ.500 செலவழித்தால் அது ஆண்டுக்கு ரூ.26,000ல் முடியும். ஆனால் நீங்கள் உங்கள் வருமானத்தில் மாதம் ரூ.1000 சேமிக்கத் தொடங்கிவிட்டால், அது சேமிக்கும் பழக்கத்தை அதிகரிக்கும். அந்த சேமிப்பு நீங்கள் பொருளாதாரப் பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கும் போது உங்களுக்கு உதவியாக வந்து நிற்கும்.

கிரெடிட் கார்டு வாழ்க்கை

நீங்கள் இப்போது வாங்கும் கடனை எதிர்காலத்தில் கண்டிப்பாக திருப்பிச் செலுத்த வேண்டும். தற்போது மாத வருமானம் பெறும் பெரும்பாலான இளைஞர்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் மிக எளிதாக கிரெடிட் கார்டை வாங்கிவிடுகின்றனர். அதோடு கிரெடிட் கார்டு மூலம் செலவழித்த பணத்தை உரிய தேதியில் செலுத்த வேண்டும் என்பதைப் பற்றியும் அவர்கள் கவலைப்படுவதில்லை. அதற்கு அவர்கள் அதிக வட்டி செலுத்த வேண்டும். குறிப்பாக கிரெடிட் கார்டில் செலவழித்த பணத்தை உரிய காலத்தில் செலுத்தவில்லை என்றால், அந்த தொகைக்கான வட்டி மாதா மாதம் குட்டி போட்டுக் கொண்டிருக்கும். எனவே உங்களால் திருப்பிச் செலுத்த முடிந்தால் மட்டுமே கிரெடிட் கார்டு மூலம் செலவழிக்க வேண்டும். மேலும் கிரெடிட் கார்டு பணத்திற்கு வட்டி விகிதமும் அதிகமாக இருக்கும். எனவே கிரெடிட் கார்டு மூலம் செலவழிப்பதைத் தவிர்ப்பது நல்லது.

இன்சூரன்ஸ் இல்லாத வாழ்க்கை

இன்சூரன்சில் முதலீடு செய்வது வீண் செலவு என்று ஒரு சிலர் எண்ணுகின்றனர். ஒருவேளை அதிகமான இன்சூரன்ஸ் பாலிசிகளை வைத்திருந்தால் அவற்றை வீண் செலவு என்று கருதலாம். ஆனால் தேவையான அளவு இன்சூரன்ஸ் வைத்திருந்தால் அது உங்களது பொருளாதாரச் சிக்கல்களைத் தீர்த்து வைக்கும்.

எடுத்துக்காட்டாக, நீங்கள் எதிர்பாராத விதமாக உங்களுடைய தவறால் ஒருவருடைய காரில் மோதிவிட்டீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது நீங்கள் இன்சூரன்ஸ் பாலிசி இல்லாமல் இருக்கிறீர்கள். இந்த நிலையில் உங்கள் மருத்துவச் செலவை பார்த்துக் கொள்ள உங்களுக்கு பணம் இல்லை என்றால் நீங்கள் அதிகமான வட்டி விகிதத்தில் தனியாரிடமிருந்து கடன் வாங்க வேண்டியிருக்கும். ஆனால் நீங்கள் இன்சூரன்ஸ் வைத்திருந்தால் உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனம் உங்களுக்கு உதவி செய்யும்.

எனவே உயிர், ஆரோக்கியம் மற்றும் வாகனம் போன்றவற்றிற்கு தேவையான இன்சூரன்சை வைத்திருப்பது மிகவும் நல்லது. இன்சூரன்ஸ் உங்கள் பொருளாதாரத்தை வளர்க்கப் போவதில்லை. ஆனால் தகுந்த நேரத்தில் அது உங்களுக்குப் பாதுகாப்பைத் தரும். எனவே தேவையான அளவு நீங்கள் இன்சூரன்ஸ் பாலிசிகளை எடுத்திருந்தால் அது உங்கள் குடும்பங்களை பொருளாதாரச் சிக்கலிலிருந்து பாதுகாக்கும்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Read more about: finance, mistakes, நிதி
English summary

Four most common financial mistakes | இந்த 4 தவறுகளை தவிர்த்தால் பிக்கல், பிடுங்கலின்றி வாழலாம்

Our desires grow with our income and controlling on our desires is one of the difficult tasks ever; so we often make common financial mistakes. These mistakes are very generic in nature. The important ones have been listed above.
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns