
கருத்தில் கொள்ள வேண்டியவை:
ஆவண செய்வதற்கு முன் நீங்கள் ஃபைல் செய்த ஏஒய் 2009-10, அல்லது அதற்கு பிறகான காலத்திற்குரிய இ-ரிட்டர்ன்ஸை பெற்றுக் கொண்டமைக்கான தகவல், 143 (1) பிரிவின் கீழ், பெங்களூரு சிபிசியிலிருந்து நீங்கள் பெற்றுக்கொண்டீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
சிபிசியிலிருந்து அனுப்பப்பட்டுள்ள தகவல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள திருத்தங்களை, அவை நீங்கள் எதிர்பார்த்தவாறு இல்லாமல் இருந்தாலும், கவனமாக படிக்கவும்.
நீங்கள் உங்கள் ரிட்டர்ன்ஸை ஃபைல் செய்ய உபயோகிக்கும் இணையதளங்கள் பலவற்றிலும் கிடைக்கும் பொதுப் பிழை வழிகாட்டியை ஆய்வு செய்யவும்.
நீங்கள் எவற்றையெல்லாம் பிழை என்று நினைக்கிறீர்களோ அவற்றையெல்லாம் திருத்தம் செய்து, எக்ஸ்எம்எல் ஃபார்மாட்டில் தயாராக வைக்கவும். அனைத்து பிழைகளும் திருத்தம் செய்யப்பட வேண்டும். நிரப்பப்பட வேண்டிய அனைத்து அட்டவணைகளையும், கட்டங்களையும், வழிகாட்டியில் விளக்கப்பட்டுள்ளதைப் போல் சரியாக நிரப்பவும். திருத்தப்பட வேண்டிய அட்டவணைகள் மற்றும் கட்டங்கள் மட்டுமின்றி, டிடிஎஸ் மற்றும் வரித் தவணை அட்டவணைகள் ஆகியவற்றையும் கொண்ட முழுமையான ரிட்டர்ன் ஃபைல் செய்யப்பட வேண்டும்.
ஃபைலில் திருத்தங்கள் செய்வதற்கு உண்டான வழிமுறைகள்:
1. இ-ஃபைலிங் அப்ளிகேஷனில் லாக் இன் செய்யவும். பின்னர் மை அக்கவுண்ட்டுக்கு சென்று ஃபைல் ரெக்டிஃபிக்கேஷனை தேர்வு செய்யவும்.
2. ரெக்டிஃபிக்கேஷனை இ-ஃபைல் செய்ய வேண்டிய வரி விதிப்பு ஆண்டை தேர்வு செய்யவும். பின், சிபிசி உத்தரவில் கொடுக்கப்பட்டுள்ள லேட்டஸ்ட் கம்யூனிகேஷன் ரெஃபரென்ஸ் நம்பர் மற்றும் லேட்டஸ்ட் சிபிசி ஆர்டர் தேதி ஆகியவற்றை நிரப்பவும்.
3. "கன்டின்யூ" என்ற பட்டனை க்ளிக் செய்யவும்.
4. "ரெக்டிஃபிக்கேஷன் ரிக்வெஸ்ட் டைப்" என்பதை தேர்வு செய்து தகவல்களை நிரப்பவும்.
5. ரெக்டிஃபிக்கேஷன் எக்ஸ்எம்எல் -ஐ அப்லோட் செய்யவும்.
6. "சப்மிட்" என்ற பட்டனை க்ளிக் செய்யவும்.
7. வெற்றிகரமாக சமர்ப்பித்த பின், ஒரு ஒப்புகை (அக்நாலெட்ஜ்மென்ட்) நம்பர் உருவாக்கப்பட்டு, பெங்களூரு சிபிசி-க்கு ப்ராசஸிங்கிற்காக அனுப்பி வைக்கப்படும்.
ப்ராசஸிங்கிற்குப் பிறகு ஒன்று உங்களுக்கு 154 பிரிவின் படி ரெக்டிஃபிக்கேஷன் உத்தரவு வழங்கப்படும், அல்லது உங்கள் வேண்டுகோள் நிராகரிக்கப்படும்.
பிழை திருத்தம் மற்றும் ரீஃபண்டுக்கு - சிபிசி: 1800 425 2229
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications