பென்ஷன் பாலிசி எடுக்கப் போறீங்களா?

Posted By: Super
Subscribe to GoodReturns Tamil

பென்ஷன் பாலிசி எடுக்கப் போறீங்களா?
சென்னை: ஜீவன் அக்ஷய் VI என்ற எல்.ஐ.சி ஓய்வூதிய திட்டம் ஒரு உடனடி பலன் தரும் வருடாந்திர திட்டம் ஆகும்.

இந்த திட்டம் வாடிக்கையாளர்களுக்கு ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் முறையில் வழங்கப்படுகிறது. ஆன்லைன் வாடிக்கையாளர்களுக்கு ஆண்டு இறுதிப் பலன் தொகையை அதிகரிப்பதன் மூலமாக ஒரு சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இந்த உடனடி பலனளிக்கும் திட்டத்தை மொத்தமாக ஒரு தொகை செலுத்தி பெற்றுக்கொள்ள முடியும்.

இந்தத் திட்டத்தின் சிறப்பம்சங்கள் சிலவற்றைக் காணலாம்.

1. பிரீமியம் தொகை மொத்தமாக செலுத்தப்பட வேண்டும்.

2. ஆன்லைன் முறையில் இல்லாமல் இந்தத் திட்டத்தை வாங்க குறைந்தபட்சம் ரூ. 1,00,000 தேவை. ஆன்லைன் மூலம் வாங்குபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 1,50,000 செலுத்த வேண்டும்.

3. இந்தத் திட்டத்தின் கீழ் மருத்துவப் பரிசோதனை எதுவும் தேவை இல்லை.

4. வாங்கும் தொகை, இறுதிப்பலன்கள் போன்றவற்றிற்கு அதிகபட்ச வரம்பு எதுவும் இல்லை.

யார் வாங்கலாம்?

முப்பது வயதை அடைந்தவர்கள் எவரும் இந்தத் திட்டத்தில் பங்கு கொள்ளலாம். இதில் சேர்வதற்கு அதிகபட்ச வரம்பு 85 வயது (நிறைவு அடைந்திருக்கலாம்). வயது சான்றிதழ் கட்டாயமாக தேவைப்படும்.

பலன்கள் அளிக்கப்படும் முறைகள்:

* வாழ்நாள் முழுவதும் சீரான விகிதத்தில் பலன் அளிக்கப்படுதல்.

* 5, 10, 15, 20 வருடங்கள் கண்டிப்பாக பலன் அளிக்கப்படுதல். அதன் பின்னர் பாலிசி எடுத்தவர் உயிருடன் இருக்கும் காலம் வரை அளிக்கப்படுதல்.

* வாழ்நாள் முழுவதும் பலன் அளிக்கப்படுவதோடு, இறக்கும் பட்சத்தில் வாங்கும் தொகை திருப்பியளிக்கப்படுதல்.

* வாழ்நாள் முழுவதும் பலன் அளிக்கப்படுவதோடு ஆண்டுக்கு மூன்று சதவீத விகிதத்தில் பலன் அதிகரித்தல்.

* வாழ்நாள் முழுவதும் பலன் அளிக்கப்படுவதோடு, இறக்கும் பட்சத்தில் பலனில் 50 சதவீதம் பாலிசிதாரரின் துணைக்கு அளிக்கப்படுதல்.

* வாழ்நாள் முழுவதும் பலன் அளிக்கப்படுவதோடு, இறக்கும் பட்சத்தில் பலனில் 100 சதவீதம் பாலிசிதாரரின் துணைக்கு அளிக்கப்படுதல்.

* வாழ்நாள் முழுவதும் பலன் அளிக்கப்படுவதோடு, இறக்கும் பட்சத்தில் பலனில் 100 சதவீதம் பாலிசிதாரரின் துணைக்கு அளிக்கப்படுதல். இதோடு கடைசி பயனாளியும் இறக்கும் பட்சத்தில், நியமனதாரருக்கு பாலிசி வாங்கும்போது செலுத்திய தொகை திருப்பியளிக்கப்படுதல்.

கடன்:

இந்தத் திட்டத்தின் கீழ் கடன் பெரும் வசதி எதுவும் கிடையாது.

வரி:

பலன்கள் உங்கள் வருமானத்தின் கீழ் சேர்க்கப்பட்டு உங்கள் வரி வரம்புப்படி வரி வசூலிக்கப்படுகிறது. இந்தத் திட்டங்கள் உங்கள் தேவைக்கேற்பவும், பொறுப்புகளுக்கேற்பவும் தேர்வு செய்யப்பட வேண்டும். இந்த வகைத் திட்டங்கள் இந்தியாவில் அவ்வளவாக மக்கள் மத்தியில் பெயர் பெற்றிருக்கவில்லை. இந்தத் திட்டம் நிரந்தர வருமானம் வேண்டுபவர்களுக்கு சிறந்த திட்டமாகும். ஆன்யுட்டி விகிதங்கள் குறைந்துகொண்டே வருகின்றன. எனவே இது பணவீக்கத்தை ஈடு செய்யும் வகையிலோ அல்லது பிற நிரந்தர வருமான திட்டங்களை மிஞ்சும் வகையிலோ இருக்க வாய்ப்பில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: pension, lic, எல்ஐசி
English summary

LIC Jeevan Akshay VI: A brief review | பென்ஷன் பாலிசி எடுக்கப் போறீங்களா?

LIC Pension Plan also called Jeevan Akshay VI is a immediate annuity plan. This scheme is offered offline as well as online. Online customers are offered a rebate of 1% by way of increase in the basic annuity rate. It is an Immediate Annuity plan, which can be purchased by paying a lump sum amount. Above are few salient features of the scheme.
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns