வீட்டுக் கடன் வாங்க திட்டமிடுகிறீர்களா? உங்கள் சந்தேகங்களுக்கான விடைகள் இதோ

By Siva
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீட்டுக் கடன் வாங்க திட்டமிடுகிறீர்களா? உங்கள் சந்தேகங்களுக்கான விடைகள் இதோ
சென்னை: சொந்த வீடு வாங்குவது ஒவ்வொரு இந்தியனின் கனவாகும். நம்மில் பலருக்கு சொந்தப் பணத்தில் வீடு வாங்குவது இயலாத காரியம். எனவே நாம் கடன் வாங்க வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களை நாடிச் செல்கிறோம்.

(A comparison of the cheapest home loan rates in India)

 

இது போன்ற சமயங்களில் நீங்கள் தகுதி அளவுகோல்கள், வட்டி விகிதம் (நிரந்தர அல்லது மாறக்கூடிய வகை), கட்டணங்கள் பற்றிய விவரங்கள், தேவையான ஆவணங்கள் பற்றி அறிய விரும்பலாம். உங்களுக்கு பல கேள்விகள் தோன்றலாம்

 

இதோ, வீட்டுக்கடன் பற்றி சாதாரணமாகக் கேட்கப்படும் சில கேள்விகளும், அதற்கான பதில்களும் கீழே உள்ளன.

வீட்டுக் கடன் பெற தேவையான தகுதிகள் என்ன?

கடனைத் திருப்பிச் செலுத்தும் உங்கள் திறன் மீதான வங்கியின் மதிப்பீடு உங்களது கடன் பெறும் தகுதியை தீர்மானிக்கிறது. வங்கிகளால் கருத்தில் கொள்ளப்படும் சில முக்கிய காரணிகள்:

* மாத வருமானம்.

* குடும்ப செலவுகள் மற்றும் நிகர வருமானம்.

* சொத்துக்கள் மற்றும் கடன்கள்.

* கடன் வரலாறு.

* நீங்கள் வாங்க இருக்கும் சொத்தின் மதிப்பு.

வீட்டுக்கடன் மீதான வட்டியை வங்கிகள் எப்போது வசூலிக்கத் தொடங்குகின்றன?

வங்கிகள் கடன் பட்டுவாடா செய்த நாள் துவங்கி வட்டி வசூலிக்கத் தொடங்குகின்றன. கடன் ஒப்புதல் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வட்டி விகிதம் ஒரு குறிப்பிட்ட காலம் வரை பொருந்தும். அதன் பின் வட்டி விகிதத்தில் மாற்றம் இருப்பின் அது செயல்படுத்தப்படும். ஒப்புதல் தரப்பட்டு பட்டுவாடா செய்யப்படாத கடன்கள் மீது வங்கிகள் வட்டி வசூலிப்பதில்லை.

வட்டி விகிதங்கள் மாறும் போது வங்கிகள் அதைத் தெரிவிக்க வேண்டுமா?

ஆம். உங்களது வீட்டுக் கடன் மீதான வட்டி விகிதத்தில் மாற்றம் இருந்தால் வங்கிகள் உங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்

நிலையான வட்டி விகிதம் என்றால் என்ன?

கடன் காலம் முழுமைக்குமான வட்டி விகிதம் மாறாமல் இருக்கும் அல்லது கடன் வாங்கிய சில வருடங்கள் கழித்து மறுமதிப்பீடு செய்யப்படலாம். இது உங்கள் கடன் விதிமுறைகளுக்கு உட்பட்டது.

நீங்கள் கடன் பெறும் சமயத்தில் வட்டி விகிதம் குறைவானதாக இருந்தால் இந்த முறை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எதிர்காலத்தில் சந்தையில் வட்டி விகிதம் அதிகரித்தாலும் உங்கள் கடன் மீதான வட்டி விகிதம் நிலையானதாக இருக்கும்.

மாறத்தக்க வட்டி விகிதம் என்றால் என்ன?

இங்கு வட்டி விகிதம் நிலையானதல்ல, வங்கிகளால் மாற்றத்தக்கது. இந்த விகித மாற்றம் வங்கிகளால் குறிப்பிடப்படும் பிரதான கடன் வழங்கும் விகிதத்துடன் தொடர்புடையது.

இந்த விகிதம் உயர்ந்தால் வீட்டுக் கடன் மீதான வட்டி விகிதமும் மாதத் தவணையும் உயரும். இது குறைந்தால் வட்டியும் குறையும்.

எல்லா மாதமும் குறையும் வகையில் வட்டி எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

உங்கள் மாதத் தவணையின் ஒரு பகுதி கடன் முதலில் இருந்து கழிக்கப்படுகிறது. கழிக்கப்பட்ட முதல் மீதே அடுத்த மாதத்திற்கான வட்டி கணக்கிடப்படுகிறது. குறிப்பிட காலம் கடன் மீதான தவணைகள் செலுத்தப்பட்ட பின் தவணையில் வட்டிப்பகுதி குறைந்து முதல் பகுதி அதிகரிக்கிறது.

கடன் பெறப் பொருந்தும் கட்டணங்கள் யாவை?

பொதுவாக வங்கிகள் கீழ்கண்ட கட்டணங்களை விதிக்கின்றன

* கடன் விண்ணப்பத்தை செயல்படுத்த.

* ஆவணங்கள் தயாரிக்க.

* தாமதமான தவணைகளுக்கு.

* கடன் காலத்தில் வேறு கடன் திட்டங்களுக்கு மாறும்போது.

* கடனை முழுமையாகவோ அல்லது கடனின் ஒரு பகுதியையோ முன்கூட்டியே திருப்பி செலுத்தும் போது.

* கடனை மறுசீரமைக்கும் போது.

* வட்டி விகிதத்தை நிலையானதிலிருந்து மாறத்தக்க விகிதமாக மாற்றும்போது அல்லது மாறத்தக்க விகிதத்திலிருந்து நிலையானதாக மாற்றும்போது.

வங்கிகளால் வசூலிக்கப்படும் பிற கட்டணங்கள்:

* சட்ட வேலைகளுக்கான கட்டணம்.

* தொழில்நுட்ப ஆய்வுக்கான கட்டணம்.

* வருடாந்தர சேவை வரி.

* ஆவணங்கள் திருப்புதலுக்கான கட்டணம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Planning for home loan? Here are few FAQs | வீட்டுக் கடன் வாங்க திட்டமிடுகிறீர்களா? உங்கள் சந்தேகங்களுக்கான விடைகள் இதோ

It is every Indian's dream to own his or her home. For many of us it is difficult to acquire it on our own resource. So many us have to knock the doors of a financial institution/ bank for a loan. Well, you may have many questions unanswered. Above are few FAQs for you.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X