மிட் கேப் ஸ்டாக்ஸ் என்றால் என்ன?

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மிட் கேப் ஸ்டாக்ஸ் என்றால் என்ன?
சென்னை: மிடில் கேபிடலைசேஷன் பங்குகள் என்பதன் சுருக்கமே மிட் கேப் பங்குகள் ஆகும். ஒரு நிறுவனத்தின் அவுட்ஸ்டாண்டிங் பங்குகளை அந்த நிறுவனத்தின் ஒரு பங்கின் தற்போதைய சந்தை மதிப்பால் பெருக்கிக் கிடைப்பதே கேபிடலைசேஷன் ஆகும்.

எடுத்துக்காட்டாக ஒரு நிறுவனம் 1 கோடி அவுட்ஸ்டாண்டிங் பங்குகளை வைத்திருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். மேலும் அந்த நிறுவனத்தின் ஒரு பங்கின் தற்போதை சந்தை மதிப்பு ரூ.100 என்று எடுத்துக் கொள்வோம். அப்படியானல் அந்த நிறுவனத்தின் மார்க்கெட் கேபிடலைசேஷன் ரூ.100 கோடியாகும்.

லார்ஜ் கேப் பங்குகளை விட இந்த மிட் கேப் பங்குகள் குறைந்த கேபிடலைசேஷனைக் கொண்டிருக்கும். தேசிய பங்குச் சந்தையில் பல நிறுவனங்கள் மிட் கேப் பங்குகளைக் கொண்டிருக்கின்றன.

குறிப்பாக அலகாபாத் வங்கி, ஆந்திரா வங்கி, பாரத் போர்ஜ், சிஇஎஸ்இ, டிஷ் டிவி, க்ராம்டன் க்ரீவ்ஸ், எச்டிஐஎல், ஐடிபிஐ வங்கி, ஜெயின் இரிகேஷன், ஜெஎஸ்டபுள்யு ஸ்டீல், ரிலையன்ஸ் கேபிடல், சன் டிவி, சின்டெக்ஸ் போன்ற நிறுவனங்களின் பங்குகள் மிட் கேப் பங்குகள் ஆகும்.

லார்ஜ் கேப் பங்குகள் மிகப் பெரிய அளவில் மார்க்கெட் கேபிடலைசேஷனைக் கொண்டிருக்கும். அதாவது மிட் கேப் பங்குகள் ரூ.5000 கோடி மார்க்கெட்கேபிடலைசேஷனைக் கொண்டிருந்தால் லார்ஜ் கேப் பங்குகள் அதைவிட அதிகமான கேபிடலைசேஷனைக் கொண்டிருக்கும். பிஎஸ்இ வழங்கும் சென்செக்ஸின் 30 பங்குகளும் மற்றும் எஸ் அன்ட் பி சிஎன்எக்ஸ் நிஃப்டியின் அனைத்து பங்குகளும் லார்ஜ் கேப் பங்குகளாகும்.

அவற்றோடு ரிலையன்ஸ் நிறுவனங்கள், ஐசிஐசிஐ வங்கி, எல் அன்ட் சி, மஹிந்ரா அன்ட் மஹிந்ரா, பஜாஜ் ஆட்டோ, பாரதி ஏர்டெல், ஹின்டல்கோ, ஹெச்யுஎல், ஐடிசி, டிசிஎஸ், இன்போசிஸ், மாருதி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா போன்ற நிறுவனங்களின் பங்குகளும் லார்ஜ் கேப் பங்குகளாகும்.

அமைப்பு ரீதியாக பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்பவர்கள் அது வெளிநாட்டு பணமாக இருந்தாலும் அல்லது உள்நாட்டு பணமாக இருந்தாலும், லார்ஜ் கேப் பங்குகளிலேயே முதலீடு செய்வர். ஏனெனில் இந்த பங்குகளை மிக எளிதில் விற்பனை செய்ய முடியும். மேலும் இந்த லார்ஜ் கேப் பங்குகளின் சந்தை மதிப்பும் அதிகமாக இருக்கும்.

ஆனால் தனி மனிதர்கள் மற்றும் வர்த்தகர்கள் பெரும்பாலும் மிட் கேப் பங்குகளில் முதலீடு செய்வர். பொதுவாக இந்த பங்குகளின் விலை மதிப்பு அடிக்கடி மாறிக் கொண்டே இருக்கும். அதனால் வர்த்தகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவர். அடிக்கடி விலை மதிப்பில் ஏற்ற இறக்கம் இருப்பதால் இந்த மிட் கேப் பங்குகள் வர்த்தகர்களுக்கு அதிக லாபத்தையும் அதே சமயத்தில் அதிக அளவிலான நட்டத்தையும் கொடுத்துவிடும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What are mid cap stocks? | மிட் கேப் ஸ்டாக்ஸ் என்றால் என்ன?

Mid cap is the short form for "middle capitalization stocks". Capitalization is derived by multiplying the number of outstanding shares by the current market price. Say for example, company A has 1 crore outstanding shares and the current market price is Rs 100. Then we would say that the company's market capitalization is Rs 100 crores. So, mid cap stocks would have a lesser capitalization then the large cap stocks.
Story first published: Tuesday, April 30, 2013, 18:15 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X