கல்விக் கடன் வாங்குவதன் நன்மைகள் என்னென்ன?

By Siva
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கல்விக் கடன் வாங்குவதன் நன்மைகள் என்னென்ன?
சென்னை: நீங்கள் மேற்கொண்டு படிக்க விரும்புகிறீர்கள்; ஆனால், போதுமான நிதி உங்களிடம் இல்லை. இந்நிலையில் கல்விக் கடன், உங்கள் ஆசையை நிறைவேற்றக்கூடிய வல்லமை பொருந்திய ஒரு சிறந்த வாய்ப்பாகும். மேலும், கல்விக் கடன் பெறும்போது வரி விலக்குகள், எளிதான தவணைகளில் பணம் செலுத்துதல் மற்றும் வங்கிகளைப் பொறுத்து வீட்டுக்கே வந்து சேவை வழங்கக்கூடிய வாய்ப்பு ஆகிய பல நன்மைகள் உங்களுக்குக் கிடைக்கும்.

இதன் வரையறைகள் என்ன?

நீங்கள் கல்விக் கடன் வாங்க முற்படும்போது, ஒவ்வொரு வங்கியும் ஒவ்வொரு தொகையை உங்களுக்கு வழங்க முன்வரும். உதாரணமாக, ஒரு முன்னணி தனியார் வங்கி ரூ. 15 லட்சம் வரை கடன் தொகை வழங்குகிறது. ஆச்சரியமாக இவ்வங்கி 7.5 லட்ச ரூபாய்க்கு மேல் கொலாட்ரல் எதுவும் வழங்குவதில்லை.

 

ஒருவர் லைஃப் இன்சூரன்ஸ் சான்றிதழ் அல்லது பிக்சட் டெபாசிட் அல்லது கிஸான் விகாஸ் பத்திரம் ஆகியவற்றுள் ஒன்றை அடமானமாக வைத்தால், அவற்றை கொலாட்ரலாகக்(பிணை) கொண்டு உங்களுக்கு வழங்கக்கூடிய தொகையின் வரையறை உயர்த்தப்படும்.

 

சில வங்கிகள், கல்வி நிறுவனங்களின் பெயர்கள் அடங்கிய பெயர் பட்டியல் வழங்கி, நீங்கள் உங்கள் கல்வி நிறுவனத்தை எளிதாகத் தேர்ந்தெடுக்க உதவுகின்றன. பொதுவாக, சுய சம்பாத்தியம் ஏதுமின்றி நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் காலத்தையும் சேர்த்து, சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் உங்கள் கல்விக் கடனை திரும்ப செலுத்தலாம்.

கல்விக் கடன் பெறுவதினால் கிடைக்கும் இன்னொரு நன்மை என்னவெனில் நீங்கள் இத்தொகையை செலுத்தும்போது, வருமான வரிச் சட்டப் பிரிவு 80இ-ன் கீழ் வரி விலக்கு பெறலாம்.

கடன் தொகைகள், பெரும்பாலும் கல்வி நிறுவனங்களுக்கே நேரடியாக அனுப்பி வைக்கப்படும். சில வங்கிகள், நீங்கள் கல்விக் கடன் பெற முடிவு செய்யும் பட்சத்தில் உங்கள் வீட்டுக்கே வந்து ஆவணங்களைப் பெற்றுக் கொண்டு போய் சமர்ப்பிக்கும் வகையில் ஏற்பாடு செய்கின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What are the benefits of taking an education loan? | கல்விக் கடன் வாங்குவதன் நன்மைகள் என்னென்ன?

Looking at pursuing a career, but, finding it difficult to fund the same. Education loan is a great option to fulfill your career and comes with advantages like tax breaks, ease in payments and doorstep service depending on the bank. Above are a few advantages of taking an education loan.
Story first published: Thursday, April 11, 2013, 12:34 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X