பங்குதாரரின் உரிமைகள் என்னென்ன?

Posted By: Super
Subscribe to GoodReturns Tamil

பங்குதாரரின் உரிமைகள் என்னென்ன?
சென்னை: ஒரு நிறுவனத்தின் பங்குதாரர்கள் அந்த நிறுவனத்தின் முதலீட்டில் ஒரு சிறு பகுதியை வைத்திருப்பதால் அவர்கள் அந்த நிறுவனத்தின் உரிமையாளர்களாக இருக்கின்றனர்.

ஒரு நிறுவனத்தின் பங்குதாரராக இருக்கும் ஒருவர், அந்த நிறுவனத்தைப் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ள அவருக்கு முழு உரிமை உண்டு. அவ்வாறு அவர் என்னென்ன உரிமைகளை பெற்றிருக்கிறார் என்று பார்ப்போம்.

1. பங்குகளைப் பிரித்துக் கொடுக்கும் போது அதைப் பெறும் உரிமையும், அந்த பங்குகளை வரையறை செய்யப்பட்ட நேரத்திற்குள் வாங்கும் உரிமையும் அவர் பெற்றிருக்கிறார்.

2. அந்த நிறுவனத்தின் ஆண்டு அறிக்கை நகலைப் பெறும் உரிமையைப் பெற்றிருக்கிறார். மேலும் அந்த நிறுவனத்தின் பேலன்ஸ் சீட், லாபம் அல்லது நட்ட கணக்கு, தணிக்கையாளர் அறிக்கையைப் பெறும் உரிமையைப் பெற்றிருக்கிறார்.

3. உரிய காலத்தில் நிறுவனம் வழங்கும் லாபப் பணத்தைப் பெறும் உரிமை

4. அங்கீகரிக்கப்பட்ட வசதிகளான போனஸ் மற்றும் இதர வசதிகளைப் பெறும் உரிமை

5. ஒரு வேளை அந்த நிறுவனம் காலாவதியானல் அதை வாங்கும் உரிமை மற்றும் அந்த நிறுவனத்தில் நடைபெறும் பொதுக் கூட்டங்களில் வாக்களிக்கும் உரிமை ஆகியவற்றையும் பெற்றிருக்கிறார்.

6. நிறுவனத்தின் பதிவு அலுவலகத்திற்கு சென்று நிறுவனத்தின் ஸ்டேச்சுடரி ரெஜிஸ்டர்களை ஆய்வு செய்யும் உரிமையையும் அவர் பெற்றிருக்கிறார்.

7. நிறுவனத்தின் பொதுக் கூட்டங்களில் எடுக்கப்படும் முடிவுகளடங்கிய மினிட் புத்தகத்தை ஆய்வு செய்யும் உரிமை, மற்றும் அந்த புத்தகத்தின் நகல்களைப் பெறும் உரிமை ஆகியவற்றையும் பெற்றிருக்கிறார்.

8. அந்த நிறுவனம் அந்த பங்குதாரரோடு ஆரோக்கியமான நட்போடு இல்லாமல் இருந்தால் அதை புகார் தெரிவிக்கும் உரிமையையும் பெற்றிருக்கிறார்.

9. நிறுவனம் சட்டங்களுக்கு எதிராக செயல்பட்டால் அதை எதிர்த்து நடவடிக்கை எடுக்கவும் அவர் உரிமை பெற்றிருக்கிறார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What are the rights of a shareholder? | பங்குதாரரின் உரிமைகள் என்னென்ன?

Shareholders are the actual owners of the company as they hold part of the share capital of a company. Being a shareholder of the company you have certain rights to know about your company. Above are the few rights which you should be aware of as a shareholder.
Story first published: Friday, April 12, 2013, 7:25 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns