ஆன்லைனில் கிரெடிட் கார்டை பயன்படுத்த பயமா? இருக்கவே இருக்கு வெர்ச்சுவல் கிரெட் கார்ட்

Posted By: Super
Subscribe to GoodReturns Tamil

ஆன்லைனில் கிரெடிட் கார்டை பயன்படுத்த பயமா? இருக்கவே இருக்கு வெர்ச்சுவல் கார்ட்
சென்னை: வெர்ச்சுவல் கிரெடிட் கார்டு (எலக்ட்ரானிக் கார்டு அல்லது இ-கார்டு) மின் வணிகத்தின் பொருட்டு உருவாக்கப்பட்ட முன்கூட்டியே பணம் செலத்தப்பட்ட கார்டு ஆகும். ஆன்லைனில் அதிகரித்து வரும் மோசடிகளின் காரணத்தால் இது போன்ற கிரெடிட் கார்டுகளின் உபயோகம் அவசியமாகிறது. வசதியைப் பொருத்து முன்கூட்டியே பணம் செலத்தப்பட்ட டெபிட் கார்டாகவோ அல்லது கிரெடிட் கார்டாகவோ பெற்றுக் கொள்ளலாம்.

ஆன்லைன் வர்த்தகத்தில் விசா கார்டுகளை ஏற்றுக் கொள்ளும் எந்த ஒரு இணையதளத்திலும் இந்த கார்டுகளை உபயோகிக்கலாம். சாதாரண கிரெடிட் கார்டை ஆன்லைனில் உபயோகிப்பதற்கும் இதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

கார்டு எண், செல்லுபடி துவங்கும் நாள், காலாவதியாகும் நாள் மற்றும் சி.வி.வி எண் என அனைத்தும் இணையதளத்தில் காண இயலும். உங்கள் தேர்வுக்குட்பட்ட கடன் வரம்பிற்குள் இந்த கிரெடிட் கார்டை உபயோகித்து உங்களால் ஆன்லைனில் பரிவர்த்தனைகள் செய்ய இயலும்.

எந்த ஒரு தொகைக்கும் கார்டை உருவாக்கிக் கொள்ள முடியும். உதாரணத்திற்கு பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்.பி.ஐ) வெர்ச்சுவல் கார்டு வரம்பு ரூ. 100 முதல் ரூ. 50000 வரை உள்ளது. இது வங்கியைப் பொருத்து மாறுபடும்.

வெர்ச்சுவல் கிரெடிட் கார்டுகள் எவ்வாறு பாதுகாப்பானதாகின்றன?

* வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கு எண், தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட விவரங்கள் வியாபார நிறுவனங்களோடு பகிரப் படுவதில்லை.

* ஒரு முறை உபயோகத்திற்கு மட்டுமேயான கார்டு இது. ஒரு முறை வெற்றிகரமாக உபயோகித்த பின் மறுமுறை உபயோகிக்க இயலாது.

* கார்டை வாங்கிய 48 மணி நேரத்திற்குள் உபயோகிக்க வேண்டும்.

* பாதுகாப்பான இன்டர்நெட் பேங்கிங் இணையதளம் மூலமாக வெர்ச்சுவல் கார்டு உருவாக்கப்படுகிறது. கடன் வரம்பை கார்டை உருவாக்கும் போது தீர்மானிக்கலாம்.

* கார்டை உருவாக்குதல் மற்றும் உபயோகித்தல் இரண்டும் ஓ.டி.பி (OTP) எனப்படும் ஒரு முறை உபயோகத்திற்கான குறியீட்டைச் சரிபார்த்த பின்னரே அங்கீகரிக்கப் படுவதால் இன்னும் பாதுகாப்பாகிறது.

ரத்து செய்தல் அல்லது திரும்பப் பெறுதல்:

எஸ்.பி.ஐ வெர்ச்சுவல் கார்டுகளைப் பொருத்த வரை ரத்து செய்யப்பட்டாலோ அல்லது காலாவதியானாலோ உபயோகிக்கப்படாத பணம் வாடிக்கையாளரின் கணக்கில் தானாகவே சேர்க்கப்படுகிறது.

செல்லுபடியாகும் காலம்.

நீங்கள் ஒருமுறை உபயோகம் செய்த பிறகோ அல்லது ரத்து செய்தாலோ கார்டு காலாவதியாகிறது. எந்த பரிவர்த்தனைகளும் செய்யாத பட்சத்தில் 48 மணிநேரத்தில் காலாவதியாகிவிடும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

What are virtual cards? Should you use them? | ஆன்லைனில் கிரெடிட் கார்டை பயன்படுத்த பயமா? இருக்கவே இருக்கு வெர்ச்சுவல் கார்ட்

Virtual credit card, also known as Electronic Card or e-Card, is a prepaid card, created for e-commerce transactions. With number of online frauds increasing, it is advisable to go for them. According to ones convenience one can opt for either virtual debit or credit card. The Card can be used to shop online at any merchant website that accepts Visa Cards, without any difference from a regular plastic Card.
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns