இன்சூரன்ஸ் பாலிசியில் போனஸ் என்றால் என்ன?

Posted By: Super
Subscribe to GoodReturns Tamil

இன்சூரன்ஸ் பாலிசியில் போனஸ் என்றால் என்ன?
சென்னை: ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் போனஸ் என்றால் என்னவென்று பார்ப்போம்.

(Education loan: Interest rate comparison)

போனஸ்:

ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் போனஸ் என்பது பாலிசி முதிர்வின் போது அல்லது பாலிசிதாரரின் இறப்பின் போது அளிக்கப்படும் நன்மைகளோடு கூடுதலாக வழங்கப்படும் தொகை ஆகும். இருப்பினும் அனைத்து பாலிசிதாரரும் போனஸ் பெற தகுதியடைவதில்லை. போனஸ் பெற விரும்புபவர்கள் லாபத்துடன் கூடிய பாலிசிகளையே எடுக்க வேண்டும். இவர்கள் செலுத்தும் பிரீமியமும் வழக்கத்தை விட அதிகமானதாக இருக்கும்.

போனஸ் வகைகள்:

போனஸில் இரண்டு வகை உண்டு- இடைக்கால போனஸ் மற்றும் இறுதியான போனஸ். இடைக்கால போனஸ் என்பது நிதி ஆண்டின் மத்தியில் பாலிசிதாரரின் மரணத்தாலோ அல்லது பாலிசி முதிர்வாலோ நிறுத்தப்படும் போது தரப்படுவது.

இறுதி போனஸ் என்பது பாலிசி முதிர்வின் போது அல்லது சரண்டர் செய்யப்படும்போது தரப்படுவது. இது பொதுவாக இன்சூரன்ஸ் நிறுவனத்தின் லாபத்தில் குறிப்பட்ட சதவீதமாக இருக்கும்.

இவை தவிர வருடாந்திர போனஸ், விசுவாசத்திற்கான போனஸ் சில சமயங்களில் வழங்கப்படுகின்றன.

போனஸ் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

இன்சூரன்ஸ் நிறுவனம் பாலிசிதாரர்களிடம் இருந்து பெறும் பிரீமியத்தை சேர்த்து பங்குகள், கடன் பத்திரங்கள் ஆகியவற்றில் முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டுகிறது. லாபத்துடன் கூடிய பாலிசிகளை எடுத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த லாபம் பகிர்ந்து போனசாக அளிக்கப்படுகிறது.

போனஸ் விகிதம் கவனத்துடன் செய்யப்படுகிற பொருளாதார ஆய்வுகளின் படி, கீழ்கண்ட காரணிகளைக் கருத்தில் கொண்டு கணக்கிடப்படுகிறது.

1. முதன்மைப் பலன்களின் மீதான வருமானம்.

2. முந்தைய போனஸ் விகிதங்களின் சராசரி

3. எதிர்பார்க்கப்படும் சந்தை வரவினங்கள்.

4. பொருளாதாரச் சந்தையின் அப்போதைய நிலை.

பொதுவாக இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பாலிசிக்கால முடிவில் அல்லது பாலிசிதாரர் இறக்கும் தருவாயில் இந்த போனஸ் தொகையை பாலிசிதாரர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கின்றன.

மொத்தப் பணமும் ஒரே நேரத்தில் தரப்படுகிறது. பாலிசி முதிர்விற்கு முன் பாலிசிதாரர் போனஸ் கோர இயலாது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What exactly is Bonus in a Life Insurance Policy? | இன்சூரன்ஸ் பாலிசியில் போனஸ் என்றால் என்ன?

Bonus is an amount paid to the policyholder in addition to the benefits received at maturity or in the event of death. Every policyholder however isn't entitled to bonuses. If you want to avail of the bonus, you have to opt for a ‘with-profit' policy. The premium you pay is different (usually higher) than a regular policy.
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns