ஃபார்ம் 15 ஜி/ஹெச் என்றால் என்ன?

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஃபார்ம் 15 ஜி/ஹெச் என்றால் என்ன?
சென்னை: வங்கிகள், நிதி நிறுவனங்கள், குழுமங்கள் ஆகியவற்றில் வைப்புத் தொகை வைத்திருக்கும் ஒவ்வொருவரும் வருமான வரிச் சட்டம் 1961-ன், ஃபார்ம் 15ஜி/ஹெச் படிவத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி கட்டாயம் அறிந்து வைத்திருக்க வேண்டும்.

வருமான வரிச் சட்டம் 1961-ன், 194ஏ (3) (I) (ஏ) பிரிவின்படி நடப்பு நிதியாண்டில் வட்டித் தொகை அல்லது மொத்த வட்டித் தொகை, வரவாக வந்ததோ அல்லது செலவாக செலுத்தப்பட்டதோ அல்லது இனிமேற்பட்டு வர வேண்டியதோ அல்லது செலுத்த வேண்டியதோ ரூபாய் 10,000த்தை தாண்டும் பட்சத்தில் மூலதனத்தில் இருந்து வரி பிடித்தம் செய்யப்படும்.

 

சில மாதங்களுக்கு முன்பு வரை ஃபார்ம் 15ஜி/ஹெச் பழைய வடிவமைப்பிலேயே உபயோகிக்கப்பட்டு வந்தது. ஆனால் சமீபத்தில் புது ஃபார்மாட்டில் உருவாக்கப்பட்டுள்ள ஃபார்ம் 15ஜி/ஹெச் படிவத்தை வரி விதிப்பு ஆண்டு 2012-13-இல் தாக்கல் செய்யும்படியாக வருமான வரித் துறை வழங்கியுள்ளது.

புதிப்பிக்கப்பட்ட ஃபார்மாட்டில் உள்ள ஃபார்ம் 15ஹெச -இன் குறிப்பு 4-ன் படி நடப்பு நிதியாண்டில் மொத்த வட்டித் தொகை வரவாக வந்ததோ அல்லது செலவாக செலுத்தப்பட்டதோ அல்லது இனிமேற்பட்டு வர வேண்டியதோ அல்லது செலுத்த வேண்டியதோ வரிவிதிப்புக்குரியவரின் தகுதிக்கேற்ப அத்தியாயம் VIஏ-ன் படி வரி மற்றும் பிடித்தங்களிலிருந்து விலக்கு பெறக்கூடிய உச்சவரம்பை மிஞ்சும் வகையில் ஃபார்ம் 15ஹெச் -இல் அமைந்துள்ள டிக்ளரேஷன்களை வங்கிகள் மற்றும் பிற நிறுவனங்கள் ஏற்கக் கூடாது.

இதே போன்ற ஒரு வரையறை புதுப்பிக்கப்பட்ட ஃபார்ம் 15ஜி படிவத்தின் குறிப்பு 6 -இலும் உள்ளது.

ஃபார்ம் 15ஜி/ஹெச் படிவத்தில் செய்யப்படும் டிக்ளரேஷனுடன் தொடர்புடைய வரிவிதிப்பிற்குட்படாத உச்சபட்சத் தொகை பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:

60 வயதுக்குட்பட்ட தனிநபர்கள் - ரூ. 2,00,000/-
ஹெச்.யூ.எஃப்-கள், அறக்கட்டளைகள் மற்றும் சங்கங்கள் - ரூ. 2,00,000/-
60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட ஆனால் 80 வயதுக்குட்பட்ட தனிநபர் வாடிக்கையாளர்கள் (பிறந்த தேதி, 31/03/1954 அல்லது அதற்கு முற்பட்டதாய் ஆனால் 31/03/1934 -க்கு பிற்பட்டதாய் இருப்பின்) - ரூபாய் 2,50,000/-
80 வயதுக்கு மேற்பட்ட தனிநபர் வாடிக்கையாளர்கள் (பிறந்த தேதி, 31/03/1954 அல்லது அதற்கு முற்பட்டதாய் இருப்பின்) - ரூபாய் 5,00,000/-

இந்தப் படிவங்கள், மூலாதார அடிப்படையில் விதிக்கப்படும் வரியிலிருந்து அவ்வைப்பு நிதிக்கு வட்டி வழங்கும் தரப்பினர் விலக்கு பெற உபயோகிக்கப்படுகின்றன. ஆனால் வெகு சிலரே இப்படிவத் தாக்கலுக்கான பயன்கள் மற்றும் இது தொடர்பான முக்கியத் தகவல்களை நன்கு அறிந்து வைத்துள்ளனர்.

ஃபார்ம் 15ஜி/ஹெச் என்றால் என்ன?

ஃபார்ம் 15ஜி/ஹெச், என்பது ஒரு தனிநபர் அல்லது ஒரு ஆள் (நிறுவனமோ அல்லது குழுமமோ அல்ல), சில வகைத் தவணைகளை (பங்காதாயத் தொகைகள்; செக்யூரிட்டிகளுக்கான வட்டி, செக்யூரிட்டிகள், தேசிய சேமிப்புத் திட்டங்கள், யூனிட்டுகள் ஆகியவற்றுக்கான வட்டி தவிர்த்த பிற வட்டித் தொகைகள்), மூலாதார வட்டிப் பிடித்தம் (டிடிஎஸ்) இன்றி பெறும் பொருட்டு தாக்கல் செய்யக்கூடிய ஒரு வகை டிக்ளரேஷன் ஆகும்.

 
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What is Form 15G/H? | ஃபார்ம் 15 ஜி/ஹெச் என்றால் என்ன?

Every person having deposits with banks, financial institutions, companies etc. must be aware of the importance of Form 15G/H of the Income Tax act 1961.
Story first published: Friday, April 26, 2013, 14:24 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X