என்ஆர்இ மற்றும் என்ஆர்ஒ கணக்குகளுக்கிடையேயான வித்தியாசங்கள்

Posted By: Super
Subscribe to GoodReturns Tamil

என்ஆர்இ மற்றும் என்ஆர்ஒ கணக்குகளுக்கிடையேயான வித்தியாசங்கள்
சென்னை: வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் இந்தியாவில் இரண்டு வகையான வங்கிக் கணக்குகளை தொடங்க முடியும். ஒன்று என்ஆர்இ மற்றொன்று என்ஆர்ஒ ஆகும். இந்த இரண்டு கணக்குகளில் உள்ள வேறுபாடுகளைப் பார்ப்போம்.

( India's stock markets worst performers after Brazil )

என்ஆர்இ

இந்த என்ஆர்இ கணக்கில் செலுத்தப்படும் தொகை இந்திய ரூபாயின் மதிப்பி்ல் இருக்கும். இந்தியாவில் குடியிருக்காத இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அல்லது வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் இருவரோ அல்லது அதற்கு மேற்பட்டவர்களோ சேர்ந்து இந்த கணக்கை இந்தியாவில் தொடங்கலாம். இந்த கணக்கிற்கு வெளிநாட்டில் இருந்து எளிதாக பணம் அனுப்பலாம்.

இந்த என்ஆர்இ கணக்கு ஒரு சேமிப்புக் கணக்காகவோ அல்லது நடப்புக் கணக்காகவோ, அல்லது ரெக்கரிங் கணக்காகவோ அல்லது வைப்புத் தொகையாகவோ இருக்கலாம். ஆனால் இந்த கணக்குகளை வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தங்கள் பெயரில் மட்டுமே தொடங்க முடியும். யாருக்காவது பவர் ஆப் அட்டார்னி கொடுத்து அவர் மூலம் தொடங்க முடியாது.

வரி

என்ஆர்இ கணக்குகளில் இருக்கும் பணத்திலிருந்து பெரும் வட்டிக்கு வருமான வரி மற்றும் சொத்து வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

நாணயம்

இந்த என்ஆர்இ கணக்குகள் வைத்திருப்பவருக்கு இந்திய ரூபாயின் மதிப்பின் ஏற்றம், இறக்கம் பொருந்தும்.

வட்டி விகிதம்

என்ஆர்இ சேமிப்பு கணக்குகளில் சேமிக்கப்படும் தொகை மற்றும் வைப்புத் தொகைக்கு வட்டியை நிர்ணயம் செய்வதில் வங்கிகளுக்கு முழு அதிகாரம் உண்டு. ஆனால் வங்கிகள் வழங்கும் வட்டி விகிதம் உள்நாட்டு வாழ் இந்தியர்கள் சேமிக்கும் தொகைக்கு வழங்கும் வட்டி விகிதத்தைவிட அதிகமாக இருக்கக் கூடாது.

என்ஆர்ஒ

இந்த என்ஆர்ஒ கணக்கை ஒருவரோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இணைந்தோ மிக எளிதாகத் தொடங்க முடியும். இந்த கணக்கு ஒரு சேமிப்புக் கணக்காகவோ அல்லது நடப்புக் கணக்காகவோ அல்லது ரெக்கரிங் கணக்காகவோ அல்லது வைப்புத் தொகையாகவோ இருக்கலாம். மேலும் எந்த வங்கிக் கணக்கிலிருந்தும் இந்த என்ஆர்ஒ கணக்கிற்கு பணத்தைப் பரிமாற்றம் செய்யலாம். குறிப்பாக இந்தியாவில் வாழும் இந்தியர்களும் வெளிநாட்டு வாழ் இந்தியரின் என்ஆர்ஓ கணக்கிற்கு பணத்தைப் பரிமாற்றம் செய்யலாம்.

நாணயம்

வட்டியில் இந்திய ரூபாயின் மதிப்பின் ஏற்றம், இறக்கம் பிரதிபலிக்கும்.

வட்டி விகிதம்

என்ஆர்ஒ கணக்குகளில் சேமிக்கப்படும் பணத்திற்கு வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்வதில் வங்கிகள் சுதந்திரமாக ஈடுபடலாம். எனினும் இந்தியாவில் வாழும் இந்தியர்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தைவிட அதிகமாக இருக்கக் கூடாது.

மேலும் என்ஆர்ஒ கணக்கில் சேமித்த பணத்திலிருந்து பெறப்படும் வட்டிக்கு வரி செலுத்த வேண்டும். ஆனால் என்ஆர்இ கணக்கில் வரி செலுத்த தேவையில்லை. மேலும் என்ஆர்ஒ கணக்கிலிருந்து என்ஆர்இ கணக்கிற்கோ அல்லது என்ஆர்இ கணக்கிலிருந்து என்ஆர்ஒ கணக்கிற்கோ மிக எளிதாக பணத்தை பரிமாற்றம் செய்ய முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

What is the difference between a NRE and NRO account? | என்ஆர்இ மற்றும் என்ஆர்ஒ கணக்குகளுக்கிடையேயான வித்தியாசங்கள்

If a person is a Non Resident Indian (NRI), he can open two kinds of account in India - a non-resident rupee accounts (NRE), and non resident ordinary rupee accounts (NRO). Above is the difference between the two.
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns