
முதலீட்டாளர், பிரதி பத்திரத்திற்கென்று பிரத்யேகமாக உள்ள படிவத்தில் (என்சி29), அசல் பத்திரம் தொலைந்துவிட்டதா, திருடப்பட்டதா, சிதைந்து விட்டதா அல்லது உருக்குலைந்துள்ளதா என்பதை தெளிவாகக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்விண்ணப்பத்தோடு தொலைந்த பத்திரங்கள் பற்றிய முக்கிய குறிப்புகள் அடங்கிய விவர அறிக்கையையும் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், பரிந்துரைக்கப்பட்ட வடிவிலுள்ள காப்புறுதிப் பத்திரத்தை, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஜாமீன்களுடனோ அல்லது ஒரு வங்கி உத்தரவாதத்துடனோ நிரப்பிக் கொடுக்க வேண்டும். அசல் பத்திரம் சிதைந்தோ அல்லது உருக்குலைந்தோ இருக்கும் பட்சத்தில், காப்புறுதிப் பத்திரம் தேவை இல்லை.
என்எஸ்சி என்று பிரபலமாக அழைக்கப்படும் தேசிய சேமிப்பு பத்திரங்கள், தபால்துறை அலுவலகங்களில் வழங்கப்படுகின்றன. இப்பத்திரங்கள் வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் உங்களுக்கு வரி விலக்கு ஆதாயங்களை கொடுக்கவல்ல, மிகப் பாதுகாப்பான சாதனங்களாகும்.
என்எஸ்சி-யோடு ஒப்பிடுகையில், பொது வருங்கால வைப்பு நிதித் திட்டம் (பிபிஎஃப்) அதன் வரியற்ற வட்டி வழங்கும் தன்மையினால், மிகவும் புகழ்பெற்று விளங்குகிறது. எனினும், பிபிஎஃப் திட்டத்தில் உச்ச பட்ச முதலீட்டுத் தொகையாக, வருடத்திற்கு 1 லட்ச ரூபாய் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது (அதாவது, ஒருவர், ஒரு வருடத்தில், அதிகபட்சமாக 1 லட்ச ரூபாய் மட்டுமே பிபிஎஃப்-இல் முதலீடு செய்ய முடியும்).
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?



Click it and Unblock the Notifications