இல்லத்தரசிகள் ஏன் லைஃப் இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும்?

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  இல்லத்தரசிகள் ஏன் லைஃப் இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும்?
  சென்னை: பொதுவாக லைஃப் இன்சூரன்ஸ் என்பது பொருளாதார அடிப்படையில் தன்னைச் சார்ந்திருப்பவர்களைக் கொண்டிருப்பவர்களுக்குத் தான் மிகவும் அவசியம் என்று கூறுவர். ஒரு குடும்பத்தில் உள்ள சம்பாதிக்கும் நபர்கள் லைஃப் இன்சூரன்ஸ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. ஏனெனில், அவர்களுக்கு ஏதேனும் நேரும் பட்சத்தில் அவர்களைச் சார்ந்திருக்கக்கூடிய சம்பாதிக்காத குடும்ப உறுப்பினர்களின் பொருளாதார நிலை மிகவும் கவலைக்கிடமாகிவிடும்.

   

  ( Can NRIs invest in NSC, PPF and other post office schemes? )

  இல்லத்தரசிகள் பலரின் சேவைகள் பாராட்டுக்குரியனவாக இருக்கிறதோ இல்லையோ அவர்களில் வெகு சிலர் மட்டுமே லைஃப் இன்சூரன்ஸ் வைத்துள்ளனர். இல்லத்தரசிகளின் இழப்பு உணர்வுரீதியாக மிகக் கடினமான ஒன்றாக இருப்பினும், பொருளாதாரரீதியில் அவ்வளவாக பாதிப்பை உண்டாக்குவதில்லையாதலால் அவர்களுக்கு லைஃப் இன்சூரன்ஸ் எடுப்பது அவசியமில்லை என்று சொல்லப்படும் காரணம் ஏற்றுக் கொள்ளக் கூடியதே.

  சம்பாத்தியம் இல்லாத துணையின் இழப்பினால் உண்டாகக்கூடிய பொருளாதார பாதிப்புகள்:

  ஆனால், இப்படி யோசித்துப் பாருங்கள். ஒரு இல்லத்தரசியின் இழப்பினால், பல வகைக் கூடுதல் செலவினங்கள் உண்டாகலாம். உதாரணமாக, வீட்டோடு இருக்கக்கூடிய தாய் இல்லையெனில், தவிர, உங்கள் பகுதியில் குழந்தைகள் காப்பக வசதிகளும் இல்லையெனில், நீங்கள் சிறு குழந்தைகளைக் கவனித்துக் கொள்ளக்கூடிய ஆயாக்கள் யாரையாவது தேட வேண்டி இருக்கும். சமையல் முதலான வீட்டு வேலைகள் அனைத்தும் பிற குடும்ப உறுப்பினர்களின் தலையில் விழும் அல்லது ஒரு முழு நேர வேலையாளை அமர்த்த வேண்டி வரும்.

  இது போன்ற செலவினங்களை சமாளிப்பது நடுத்தர வர்க்கம் மற்றும் கீழ்த்தட்டு மக்களுக்கு பெரும் சவாலாக இருக்கலாம். தனிக்குடித்தனக் குடும்பங்களில், கணவர் அதிக நேரத்தை வீட்டினில் செலவழிக்க வேண்டி வரலாம். இதனால், அவரது சம்பாதிக்கும் திறன் கட்டாயம் குறையும். இது போன்ற சமயங்களில் தான் வேலைக்குச் செல்லாத துணைக்கு எடுக்கப்பட்டிருக்கும் இன்சூரன்ஸ் மிக உபயோகமாய் இருந்து, இது போன்ற செலவுகளை சமாளிக்க நன்கு கைகொடுக்கும்.

  சம்பாத்தியம் இல்லாத துணைக்கான லைஃப் இன்சூரன்ஸ்:

  இல்லத்தரசிகளுக்கு லைஃப் இன்சூரன்ஸ் எடுக்க முடியுமா என்ற கேள்விக்கு நாம் இப்போது வருவோம். ஆம், அவர்களுக்கு லைஃப் இன்சூரன்ஸ் எடுக்க முடியும். இல்லத்தரசிகளுக்கான பாலிசியானது வீட்டு வேலைகள், பாடம் சொல்லிக் கொடுத்தல் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு போன்ற சேவைகள் அனைத்துக்குமான விலையை கணக்கில் கொள்ள வேண்டும். ஆனால், பெரும்பான்மை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இல்லத்தரசிகளுக்கு லைஃப் இன்சூரன்ஸ் விற்கத் தயங்குகின்றன.

  இதனால், டெர்ம் பிளான்கள் பெரும்பாலும் அணுக இயலாதவையாய் உள்ளன. மேலும், இதற்கான இன்னொரு முக்கிய காரணம் டெர்ம் இன்சூரன்ஸ் பிளான்கள், ஒருவர் இழக்கக்கூடிய வருமானத்தை ஈடு செய்வதையே தம் நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றன. ஆனால் வீட்டு வருமானத்துக்கு இல்லத்தரசிகளின் பங்களிப்பு ஏதும் இருக்காது. அதனால் அவர்களுக்கு டெர்ம் இன்சூரன்ஸ் ஒரு நல்ல தேர்வாக இருக்க முடியாது. டெர்ம் பிளான்கள் வழங்கப்பட்டால் அவை மிகக் குறைந்த கவரேஜ் லிமிட்டைக் கொண்டே இருக்கும்.

  இல்லத்தரசிகளுக்கு ஏற்ற இன்சூரன்ஸ் திட்டத்தை அறிந்து கொள்வது எப்படி?

   

  டெர்ம் லைஃப் இன்சூரன்ஸ் பிளான்கள் வேலையில்லா மகளிர்க்கு ஏற்றவையாக இல்லாதிருப்பினும், சில இன்சூரர்கள் அவர்களுக்குக்கேற்ற பொருத்தமான பல பாலிசிகளை வழங்குகின்றனர். டெர்ம் இன்சூரன்ஸ் வீட்டோடு இருக்கக்கூடிய தாய்மார்களுக்கேற்ற நல்ல தேர்வாக இருக்கும்; ஏனெனில் இந்த பாலிசியை அவர்கள் குழந்தைகள் வளரும் வரையோ அல்லது அவர்கள் கல்லூரிப் படிப்பை முடிக்கும் வரையோ அவர்கள் தொடரலாம். கூடிய வரை, மாற்றக்கூடிய பாலிசிகளையே வாங்கும்படி பரிந்துரைக்கப்படுகிறது. அவ்வாறு வாங்கினால், அந்த பாலிசி முடியும் தருவாயில் அப்போதைய உங்கள் குடும்பப் பொருளாதாரச் சூழலுக்கு ஏற்றவாறு உங்கள் பாலிசியை நீங்கள் மாற்றிக் கொள்ளலாம்.

  மகளிர்க்கான இன்சூரன்ஸ்களைக் கையாளும் இன்சூரர்களை தொடர்பு கொள்வது சிறந்த யோசனையாகும். உங்கள் குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளை பூர்த்தி செய்து, உங்களுக்கு நிறைந்த மனநிம்மதி அளிக்கக்கூடிய நல்ல பாலிசியை நீங்களே அவர்களிடம் கேட்டறிந்து தேர்வு செய்து கொள்ளலாம்.

  தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

  English summary

  Why housewives should also take a life insurance cover? | இல்லத்தரசிகள் ஏன் லைஃப் இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும்?

  They tell you that life insurance is essential for people with financial dependents. There is no question that the income-earning members of a family must purchase life coverage. After all, their deaths would place the non-earning members in a difficult financial position. There is no refuting this fact. However, the issue that this article will focus on is insurance for housewives. Increasing numbers of Indian women now pursue careers; yet, a large majority continues to take care of the home, the hearth, the husband and the kids.
  Company Search
  Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
  Thousands of Goodreturn readers receive our evening newsletter.
  Have you subscribed?

  Find IFSC

  Get Latest News alerts from Tamil Goodreturns

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more