வீட்டுக் கடன் மீது ஏன் காப்பீடு எடுத்துக் கொள்ள வேண்டும்?

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீட்டுக் கடனை ஏன் இன்சூர் செய்ய வேண்டும்?
சென்னை: உங்கள் குடும்பத்தில் சம்பாதிக்கும் நபர் நீங்கள் ஒருவர் மட்டுமாக இருந்து, நீங்கள் வீட்டுக் கடன் எடுத்திருக்கும் பட்சத்தில் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் நீங்கள் உங்கள் வீட்டை இழப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால் வீட்டுக் கடன் தந்த நிதி நிறுவனம் உங்கள் வாரிசுதாரரிடம் கடன் தொகையை திருப்பிச் செலுத்தச் சொல்லி கேட்கலாம்.

 

எனவே உங்கள் வீட்டுக் கடன் மீது காப்பீடு செய்து கொள்வது சிறந்தது. இதன் மூலம் காப்பீட்டு நிறுவனம் கடனைத் திருப்பி செலுத்துகிறது. இதனால் உங்களைச் சார்ந்திருப்பவர்களுக்கும், உங்களது வீட்டுக்கும் பிரச்சினை ஏதும் இல்லாமல் பாதுகாத்துக் கொள்ள முடிகிறது.

வீட்டுக் கடன் மீதான காப்பீடு, கடன வாங்கியவர் இறக்கும் பட்சத்தில் மீதமிருக்கும் வீட்டுக் கடன் தொகையை அடைக்க வழி செய்கிறது. வீட்டுக் கடன் தரும் வங்கிகளும், நிதி நிறுவனங்களும் கடன் வாங்குபவரை இது போன்ற காப்பீடு எடுக்குமாறு அறிவுறுத்துகின்றன. ஏனெனில் இது அவர்களுக்கு ஒரு கடன் நிச்சயமாக திரும்பக் கிடைக்கும் என்ற உறுதியை அளிக்கிறது. இந்தக் காப்பீட்டுக்கான தொகையைக் கடனுடன் இணைக்க முடியும்.

ஆனால் இந்தக் காப்பீடு உங்கள் வீட்டுக் கடனுக்கான பாதுகாப்பை மட்டுமே வழங்குகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே உங்கள் குடும்பம் வீட்டைத் திரும்பப் பெற்றாலும் கஷ்டப்பட வாய்ப்புள்ளது. இதனால் நீங்கள் டர்ம்(term)இன்சூரன்ஸ் ஒன்று எடுத்துக் கொள்வது நல்லது.

ஆனால் சில வல்லுனர்கள், வீட்டின் மீது காப்பீடு செய்வதை விட அதிக அளவுக்கான டர்ம் இன்சூரன்ஸ் செய்து கொண்டால் வீடு, குடும்பம் இரண்டிற்கான பாதுகாப்பும் ஒரு சேர கிடைக்கும் என்று கூறுகிறார்கள். இதுவும் சரியான வாதமாகவே படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Why you must take a home loan insurance? | வீட்டுக் கடனை ஏன் இன்சூர் செய்ய வேண்டும்?

If you are the only earning member of the family and have taken a home loan and God forbid any eventuality happens, chances are you could lose your home, as the home loan company would ask the successor to pay off the home loan. It's best to insure your home loan, so the insurance company steps in and pays the loan, securing your dependents and your mortgaged house.
Story first published: Wednesday, April 10, 2013, 15:16 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X