அங்கங்கே குண்டு வெடிக்கிறது, உங்கள் கார், பைக்குகளை இன்சூர் செய்துவிட்டீர்களா?

Posted By: Super
Subscribe to GoodReturns Tamil

அங்கங்கே குண்டு வெடிக்கிறது, உங்கள் கார், பைக்குகளை இன்சூர் செய்துவிட்டீர்களா?
சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூர் அணி டெல்லி அணியை வெற்றி பெற்றதை அந்த ஜிம் கொண்டாடிக் கொண்டிருந்தது. அப்போது திடீரென்று எங்கள் ப்ளோர் மேலாளர் திவ்யாவிடமிருந்து ஒரு அபாய குரல். என்ன நடந்ததென்று என்னால் தீர்மானிக்க முடியவில்லை.

எங்கு பார்த்தாலும் ஒரே பரபரப்பு, மக்களின் பயம் கலந்த அலறல் சத்தம். அங்குமிங்குமாக மக்கள் அதிர்ச்சியில் மற்றும் பயத்தில் ஓடிக் கொண்டிருக்கின்றனர். என்னவென்று கேட்டால் குண்டு வெடித்துவிட்டது என்று சொல்லிவிட்டு பலரும் பயந்து ஓடுகின்றனர். குண்டு வெடித்திருக்கிறது என்ற செய்தியை கேட்டவுடன் முதலில் எனக்கும் பயம் ஏற்பட்டது. ஆனால் அதைவிட எனக்கு கோபம் அதிகமாகியது.

என் மனதில் ஏராளமான கேள்விகள் எழுந்தன. இந்த உலகத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? ஒரு நாள் அமெரிக்காவில் மாரதான் போட்டி நடந்து கொண்டிருந்த இடத்தில் குண்டு வெடித்தது. அதில் காயம்பட்ட மாரதான் வீரர்களில் பலர் தங்கள் வாழ்நாள் முழுவதும் படுத்த படுக்கையில் இருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர். தற்போது பெங்களூரில் குண்டு வெடிப்பு நடந்திருக்கிறது. ஏன் எங்களை குறி வைக்கின்றனர்? என்று பல கேள்விகள் என்னுள் எழுந்தன. பெங்களூர் அணியின் வெற்றி இந்த குண்டுவெடிப்பில் காணாமல் போனது.

குண்டுவெடிப்பு நடந்தவுடன், அனைவரும், வெளியில் சென்ற தங்கள் உறவினர்கள் பாதுகாப்புடன் இருக்கின்றனரா என்று போன் செய்து உறுதி செய்து கொண்டனர். பெங்களூரில் நான் இருக்கும் இந்திரா நகரிலிருந்து, மல்லேஸ்வரம் சற்று தூரத்தில் இருந்தாலும் அங்கு குண்டு வெடித்திருக்கிறது என்ற செய்தியைக் கேட்டவுடன் நான் வெளியில் செல்லும் திட்டத்தைக் கைவிட்டுவிட்டேன்.

கொல்கத்தாவில் இருக்கும் என் தந்தை என்னை மொபைலில் அழைத்து, வெளியில் செல்ல வேண்டாம், வீட்டில் பத்திரமாக இருக்க வேண்டும் என்று கட்டளையிட்டார். என்னால் செய்ய முடிந்தது எல்லாம் டிவி பெட்டியை ஆன் செய்து, குண்டு வெடிப்பு சம்பவங்களை வெளியிட்ட நம்ம ஊரு பெங்களூருவை மட்டுமே பார்க்க முடிந்தது.

இந்த குண்டுவெடிப்பில் உயிரிழப்பு ஏற்படவில்லை என்றாலும், வாகனங்கள் பல நாசமாயின. 4 கார்கள் மொத்தமாக சுக்குநூறாக நொறுங்கிவிட்டன. 5 இரு சக்கர வாகனங்கள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டன. மேலும் திருடப்பட்ட ஒரு சுசுகி 2 சக்கர வாகனத்தில் இந்த வெடிகுண்டு வெடித்திருக்கிறது.

இந்த நிலையில் சாலையோர இட்லி கடை நடத்தும் ஒருவர், தன் வாழ்நாள் முழுவதும் உழைத்து சேர்த்து வாங்கிய அவருடைய பழைய இருசக்கர வாகனம் இது போன்ற குண்டு வெடிப்புகளில் சுக்கு நூறாகிவிட்டால், அவர் வேறு வண்டியை வாங்க முடியுமா? இந்த சூழலில் அவர் வாகன இன்சூரன்ஸ் வைத்திருந்து, அந்த பாலிசி, வெடிகுண்டு விபத்தையும் கவர் செய்தால், அந்த நிறுவனம் அவருக்கு இழப்பீடு வழங்கும்.

ஐசிஐசிஐ லம்பார்ட் மோட்டார் இன்சூரன்ஸ், ஐஎப்எப்சிஒ டோக்கியோ கார் இன்சூரன்ஸ், டாட்டா ஏஐஜி பிரைவேட் கார் இன்சூரன்ஸ் திட்டம், பஜாஜ் அலையன்ஸ் டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசி, எச்டிசி எர்கோ டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசி, மற்றும் பாரதி எக்ஸ்ஏ டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசி போன்ற திட்டங்கள், தீவிரவாத தாக்குதல்களில் வாகனங்கள் பாதிக்கப்பட்டால் அதற்கான இழப்பீட்டை வழங்குகின்றன.

மேலும் வாகனங்களைக் குறிவைத்தே பெரும்பாலான தீவிரவாத தாக்குதல்கள் நடைபெறுகின்றன. குறிப்பாக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படும் இடங்களில்தான் பெரும்பாலும் குண்டு வெடிப்புகள் நிகழ்கின்றன. எனவே அப்படிப்பட்ட இடங்களில் குண்டு வெடிப்புகள் நிகழும் போது, ஏராளமான வாகனங்கள் பாதிப்படைகின்றன. எனவே தீவிரவாத செயல்களினால் வாகனங்களுக்கு ஏற்படும் இழப்பீட்டை கவர் செய்யும், இன்சூரன்ஸ் பாலிசிகளை வைத்திருப்பது நன்மை பயக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Why you should cover your car from acts of terror? | அங்கங்கே குண்டு வெடிக்கிறது, உங்கள் கார், பைக்குகளை இன்சூர் செய்துவிட்டீர்களா?

Vehicles are often targeted as sadly, in recent times we have seen bombs going off in places where vehicles are parked. And horrifying as it may sound, we have to take cover for such future happenings as well. World peace is a distant dream. Till then, for our own peace and well-being we need insurance in every form possible
Story first published: Friday, April 19, 2013, 14:48 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns