பிக்சட் டெபாசிட்டை இப்போது ஏன் உடைத்து பணம் எடுக்கக் கூடாது?

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிக்சட் டெபாசிட்டை இப்போது ஏன் உடைத்து பணம் எடுக்கக் கூடாது?
சென்னை: 6 அல்லது 12 மாதங்களுக்கு முன்பு வைப்புத் தொகையில்(பிக்சட் டெபாசிட்டில்) நீங்கள் முதலீடு செய்திருக்கிறீர்களா? அந்த பணத்தை நீங்கள் திரும்பப் பெற நினைக்கிறீர்களா? அதற்கு முன் கீழ் கொடுக்கப்பட்டிருக்கும் விஷயங்களை நீங்கள் அலசி ஆராய்வது நல்லது.

 

(Expert views on whether you should buy gold now)

முதலில் தகுந்த காரணம் இல்லாமல் வைப்புத் தொகையில் உள்ள பணத்தை நீங்கள் திரும்பப் பெறாமல் இருப்பது நல்லது. ஏனெனில் ஒரு வருடத்திற்கு முன் செய்யப்பட்ட 2-3 ஆண்டுகளுக்கான வைப்புத் தொகை திட்டங்களில் உள்ள தொகைக்கு 9.5 சதவீத வட்டியை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் வழங்கி வருகின்றன.

மேற்கூறிய வட்டி விகிதம் ஒரு பெரிய விகிதம் ஆகும். ஆனால் தற்போது இருக்கும் வைப்புத் தொகை திட்டங்களில் செய்யப்படும் முதலீட்டுக்கு 9 சதவீத வட்டியையே வங்கிகள் வழங்குகின்றன. முதலீடு செய்த அந்த பணத்தைத் திரும்பிப் பெறுவதற்கு முன், வட்டி விகிதங்களை ஒப்பிட்டுப் பார்ப்பது நல்லது.

வைப்புத் தொகை திட்டங்களில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் தொடர்ந்து சரிந்து கொண்டே வருகிறது. தற்போது 0.50 சதவீதம் குறைந்து, வைப்புத் தொகைக்கு 9 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.

தற்போது வட்டி விகிதம் பொதுவாக சரிந்து வந்து கொண்டிருக்கிறது. எனவே வைப்புத் தொகையில் ஏற்கனவே முதலீடு செய்யபட்டிருக்கும் அந்த பணத்தை இப்போது எடுத்து, அதை அடுத்த 6 மாதங்களுக்கு பிறகு முதலீடு செய்யலாம் என்று நீங்கள் நினைத்தால், அந்த பணத்திற்கான் வட்டி குறைவாக இருக்கும் என்று தெரிகிறது.

மேலும் அதிக வட்டிக்கு முதலீடு செய்திருக்கும் உங்கள் பணத்தை, காரணமில்லாமல் திரும்ப எடுத்தால் அதில் எந்த பயனும் இருப்பதில்லை. எனவே உங்களிடம் பணம் இருந்தால் வட்டி விகிதம் சரிவதற்கு முன்பே அந்த பணத்தை வைப்புத் தொகையில் முதலீடு செய்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மேலும் நீங்கள் தற்போது முதலீடு செய்ய முடிவெடுத்துவிட்டால், அதை நீண்ட காலத்திற்கு முதலீடு செய்வது நல்லது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Why you should not break your fixed deposits now? | பிக்சட் டெபாசிட்டை இப்போது ஏன் உடைத்து பணம் எடுக்கக் கூடாது?

If you have invested in fixed deposits 6-12 months ago and want to break them now, do not do it, unless there is a dire need. A year back deposit rates from good public sector banks was around 9.5 per cent on a 2-3 year deposit. So, chances are you have locked in at extremely good rates, considering that the same tenure would now fetch you a rate of just 9 per cent.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?