என்.ஆர்.ஐ.களுக்கு இடிஎஃப் திட்டம் வழங்கும் வரிச் சலுகைகள் என்னென்ன?

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

என்.ஆர்.ஐ.களுக்கு இடிஎஃப் திட்டம் வழங்கும் வரிச் சலுகைகள் என்னென்ன?
சென்னை: கோல்டு இடிஎஃப் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் இந்தியாவில் வாழும் இந்தியர்கள் மட்டும் அல்லாமல் வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் இந்தியர்களும் நிறைய பலன்களை அனுபவித்து வருகின்றனர். வெளிநாடு வாழ் இந்தியர்கள் பங்குகளை வாங்குவதன் மூலமோ அல்லது ஃபண்ட் ஹவுசஸ் மூலமோ கோல்டு இடிஎஃப் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்றால் அவர்கள் போர்ட்போலியோ இன்வெஸ்ட்மென்ட் ஸ்கீம் (பிஐஎன்எஸ்) அகௌண்ட் வைத்திருக்க வேண்டும்.

 

கோல்டு இடிஎஃப் முதலீட்டில் உள்ள வரி

தங்க நகைகள், தங்க நாணயங்கள் மற்றும் தங்க கட்டிகளை விற்கும் போது கேபிடல் கெய்ன்ஸ் விதிக்கப்படுகிறது. மூன்று ஆண்டுகளுக்குள் அவற்றை விற்பனை செய்தால் அதற்கு ஷார்ட் டேர்ம் கேபிடல் கெய்ன் வரி விதிக்கப்படும். அதே நேரத்தில் 3 ஆண்டுகளுக்கு பிறகு விற்பனை செய்தால் லாங் டேர்ம் கேபிடல் கெய்ன் வரி விதிக்கப்படுகிறது.

தங்கத்தை வாங்குபவர்கள் பெரும்பாலும் டாக்ஸ் டிடெக்கடர் அட் சோர்ஸ் (TDS)ஐ தெரிந்திருக்கமாட்டார்கள். அதனால் அவர்களுக்கு வரி விதிக்கப்படமாட்டாது. இந்த நேரத்தில் தங்கத்தை விற்கும் வெளிநாடு வாழ் இந்தியர் அதற்கான வருமான வரியைச் செலுத்த வேண்டும். கோல்டு இடிஎஃப் திட்டத்தில் முதலீடு செய்தால் வரி செலுத்த வேண்டி இருந்தாலும் இந்த திட்டத்தின் மூலம் வரி விலக்கும் பெற முடியும்.

கோல்டு இடிஎஃப் திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தங்க நகைகளுக்கான கேபிடல் கெய்ன்ஸ் ஒரு வருடம் கழித்தே அது நீண்ட கால கேபிடல் கெய்ன்சாகக் கருதப்படும். அதுபோல் இந்த திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தங்க நாணயங்கள் மற்றும் தங்கக் கட்டிகளுக்கான கேபிடல் கெயன்ஸ் 3 வருடங்கள் கழித்தே அது நீண்ட கால கேபிடல் கெயின்சாக கருதப்படும். நீண்ட கால கேபிடல் கெயின்சுகளுக்கு குறைந்த அளவே வரி விதிக்கப்படுகிறது.

வெளிநாடு வாழ் இந்தியர் பங்கு சந்தை மூலம் கோல்டு இடிஎஃபை வாங்குவதால் மற்றும் விற்பதால் அதற்கு டிடிஎஸ் பயன்படாது. எனவே அந்த வெளிநாடு வாழ் இந்தியர் வருமான வரியை ஃபைல் செய்யும் போது செல்ப் அசெஸ்மென்ட் செய்ய வேண்டும். ஒருவேளை அவர் இடிஎஃப் திட்டத்தை ஃபண்ட் ஹவுஸ் மூலம் வாங்கினால் அதற்கு டிடிஎஸ் கழிக்கப்படும்.

தங்கத்தில் முதலீடு செய்து எவ்வாறு வரி விலக்கு பெறலாம்?

பரஸ்பர நிதிகள், பங்குகள் மற்றும் தங்கத்தை விற்கும் போது வரி விலக்கு அளிக்கப்படுகின்றது. நீண்ட கால கேபிடல் கெய்ன்சுகளிடமிருந்தே நீண்ட கால கேபிடல் லாஸ் பெறப்படுகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் ஒரு இந்தியர் தங்கள் நாட்டில் தங்கத்தை விற்க அனுமதிக்கப்படுகிறார். அதற்கு அவருக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

கோல்டு இடிஎஃப் திட்டத்தில் முதலீடு செய்தால் தங்கத்திற்கு பாதுகாப்பு உறுதி. தங்கத்தை வைத்திருக்கும் வெளிநாடு வாழ் இந்தியர் இந்த கோல்டு இடிஎஃப் திட்டத்தில் முதலீடு செய்தால் அவருக்கு சொத்து வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

A look at the tax implications for NRIs on Gold ETFs | என்.ஆர்.ஐ.களுக்கு இடிஎஃப் திட்டம் வழங்கும் வரிச் சலுகைகள் என்னென்ன?

Gold ETFs have emerged as an effective investment tool in short span of time not only to Indian investors but also for NRI investors. It offers a distinct advantage that was not available for investors in traditional investments such as Gold bars or Jewelry. The first and foremost advantage of investing in ETF is that you are tension free from risk of theft and insurance that is generally attached in investing in physical Gold. Secondly, it can be purchased in small quantities which start from a unit equivalent to 1 gram of gold. The investment amount is reduced significantly as one unit can be equivalent to Rs 3200 even if the current prices are considered to be at Rs 32000 per 10 gram. Impurity is another factor that is nullified when you invest in Gold ETF. Another advantage of holding ETF is that you are free from the liability of wealth tax.
Story first published: Friday, May 3, 2013, 17:36 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?