நல்ல மியூச்சவல் ஃபண்டை எப்படி தேர்வு செய்வது?

Posted By: Super
Subscribe to GoodReturns Tamil

நல்ல மியூச்சவல் ஃபண்டை எப்படி தேர்வு செய்வது?
சென்னை: சந்தையில் பல ஆயிரக்கணக்கான பரஸ்பர நிதிகள் உள்ளன. இதில் ஒவ்வொரு நிதியும் தனித்தன்மை வாய்ந்தவை என விளம்பரப்படுத்தப்படுகின்றன. நமக்கு பலரும் பலவிதமாக ஆலோசனை தருகின்றனர். எனவே ஒரு பரஸ்பர நிதியை தேர்ந்தெடுக்கும் பணி மிகவும் கடினமானதாக மாறிவிட்டது.

நீங்கள் பரஸ்பர நிதியில் முதலீடு செய்வதற்கான அடிப்படை விதிகளை தெரிந்து வைத்திருந்தாலும், உங்களுக்கு உகந்த நிதியை தேர்வு செய்யும் பொழுது தடுமாற்றத்தை உணர்வீர்கள். எனவே நாங்கள் உங்களுக்கு உதவும் பொருட்டு ஒரு எளிய சோதனை பட்டியலை தயாரித்து வெளியிட்டுள்ளோம். இந்த பட்டியல் உங்களுக்கு உகந்த பரஸ்பர நிதியை தேர்ந்தெடுக்கும் பொழுது, உங்களுக்கு ஏற்படும் தடுமாற்றத்தை கண்டிப்பாக குறைக்கும்.

நீங்கள் ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு பழங்களை ஒப்பிட முடியாது. இவ்விரண்டும் பழங்களாக இருந்த போதிலும் அவற்றின் குணாதிசயங்கள் வெவ்வேறானவை. இதேபோல் செயல்திறன் ஒப்பீடுகளை ஒரே வகையான நிதிகளுக்கு இடையே மட்டும் செய்ய முடியும். நீங்கள் ஒரு கடன் நிதியை, வளர்ச்சி நிதியுடனோ அல்லது வருமான நிதியை ஒரு பங்கு நிதியுடனோ ஒப்பிட முடியாது. அத்தகைய ஒப்பீடு அர்த்தமற்றதாகும். செயல்திறன் எண்களை ஒரே வகையிலான நிதிகளை ஒப்பீடு செய்ய மட்டுமே பயன்படுத்த வேண்டும். அவ்வாறு செய்யும் பொழுது மட்டுமே செயல்திறன் எண்கள் அர்த்தமுடையதாக இருக்கும்.

ஆபத்து: முதலீடு என்பது இயல்பிலேயே ஒன்று அல்லது பிற வகையான ஆபத்துகளுக்கு உட்படுத்தப்படும். அதிக ஆபத்து, அதிக வருமானத்திற்கான வாய்ப்பை அதிகரிக்கும்', என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் இந்த கருத்து சரியானது அல்ல. ஏனெனில் இந்த கருத்தின்படி ஆபத்தும், வருமானமும் நேரடியாக தொடர்பு படுத்தப்பட்டுள்ளது. ஆனால் பரஸ்பர நிதிக்கு இந்த கருத்து ஒத்து வருவதில்லை. ஏனெனில் ஒரே மாதிரியான நிதிகள் ஒரே பாணியில் செயல்படுவதில்லை.

இதை அந்த நிதிகளின் வருமானத்தையும், அவைகள் எதிர்கொண்ட ஆபத்தையும் சரிபார்த்து தெரிந்து கொள்ளலாம். நீங்கள் ஆபத்தால் சரிசெய்யப்பட்ட வருமானத்தை பற்றி பிறர் பேச கேட்டிருக்கலாம். ஆனால் அவர்கள் நிதிகளின் வருமானத்தை ஆபத்தை எதிர்கொண்ட திறனை வைத்து அளவிடுகிறார்கள். ஆனால் இதை பின்பற்றுவது உங்களுக்கு எளிதாக இருக்காது. ஆகவே கரடி மற்றும் காளை சந்தைகளின் போது ஒரே மாதிரியான இரு பரஸ்பர நிதிகளின் செயல்பாட்டை ஒப்பிடுவது ஒரு மிகச் சிறந்த எளிய நடைமுறையாகும். அவ்வாறு இல்லையெனில், கரடி மற்றும் காளை சந்தைகளின் போது நாம் பரஸ்பர நிதியின் வருமானத்தை அதே மாதிரியான முன்னணி நிதியின் வருமானத்தோடு ஒப்பிட்டு முடிவு செய்யலாம்.

மேலாண்மை: இங்கே நாம் புரிந்து கொள்ள வேண்டிய மிகவும் இன்றியமையாத விஷயம் ஒன்று உள்ளது. அதாவது குறுகிய கால நிதிகள், வருவாய் நிதிகள், குறியீட்டு நிதிகள் போன்றவற்றின் செயல்பாடு அதன் நிர்வாகியை சார்ந்து இல்லை. இந்த பிரிவில் இதுவரை, அனைத்து பெரிய மற்றும் சிறிய நிதிகளும் ஒத்த முடிவுகளையே தந்துள்ளன. ஆனால் நிதி மேலாண்மை என்பது பங்கு நிதியின் செயல்பாட்டில் ஒரு முக்கியமான காரணியாக உள்ளது. பல்வேறு நிதி மேலாளர்கள் வெவ்வேறு துறை பங்குகளை வாங்கி தங்கள் செயல்திறனை முன்னிலைப்படுத்தி அவர்கள் சார்ந்த துறைகளில் முதல்வர்களாக இருக்க முற்படுவார்கள். எனவே இங்கு பங்கு முதலீடு என்பது ஒரு கலையாக இன்றும் கருதப்படுகிறது.

ஆகவே ஒரு பங்கு சார்ந்த நிதியின் செயல்பாடு அந்த நிதி மேலாளரின் தனிப்பட்ட பாணியிலான செயல்பாட்டால் பாதிக்கப்படுவதாக முதலீட்டாளர்கள் நம்புகிறார்கள். ஆகவே ஒரு புதிய நிதியில் முதலீடு செய்யும் முன் அந்த நிதியின் மேலாளரை பார்க்க வேண்டும். ஏனெனில் உயர் செயல்திறன் கொண்ட செயலாளரின் தலைமை பங்கு நிதியின் போக்கையே மாற்றிவிடும்.

கட்டணம்: இங்கு கடைசியாக விவாதிக்கப்படும் முக்கியமான காரணி நிதியின் பல்வேறு கட்டணங்கள் ஆகும். பரஸ்பர நிதிகள் என்பது ஒரு தொண்டு நிறுவனமோ அல்லது லாப நோக்கற்ற ஸ்தாபனமோ அல்ல. அவைகள் லாபத்தை நோக்கமாக கொண்டு செயல்படும் நிறுவனம் ஆகும். அத்தகைய நிறுவனங்கள் தங்களுக்கான செலவினங்களை முதலீட்டளர்களிடமிருந்து கட்டணமாக வசூலிக்கின்றன. ஒரே பிரிவைச் சேர்ந்த பல்வேறு நிதிகளின் கட்டணங்களில் பெரும் வித்தியாசம் இருக்காது என்றாலும், நீண்ட கால முதலீட்டு நோக்கத்தில் அது ஒரு கணிசமான வித்தியாசத்தை ஏற்படுத்தும்.

இந்த காரணிகளை அடிப்படையாக வைத்து நல்ல பரஸ்பர நிதியை நீங்கள் தேர்வு செய்யலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to choose a mutual fund? | நல்ல மியூச்சவல் ஃபண்டை எப்படி தேர்வு செய்வது?

Choosing the right mutual fund scheme can always be a tricky affair. With so many mutual funds and so many schemes under each mutual fund, it's a herculean effort to pick the right one. Above are a few tips that could help you along the way.
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns