வீட்டுக் கடனை குறைந்த வட்டி வாங்கும் நிதியாளரிடம் மாற்றுவது நல்லதா?

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீட்டுக் கடனை குறைந்த வட்டி வாங்கும் நிதியாளரிடம் மாற்றுவது நல்லதா?
சென்னை: நீங்கள் உங்களுடைய வீட்டுக் கடனை ஒரு மலிவான நிதியாளருக்கு மாற்றிக் கொள்வது இப்பொழுது சாத்தியப்படும் ஒரு சிறிய விஷயமாக மாறி விட்டது. ஏனெனில் தற்போது வட்டி விகிதங்கள் மிக மலிவாக உள்ளன.

 

எடுத்துக்காட்டாக, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தற்போது மிகக் குறைந்த வட்டியான 9.95 சதவீத விகிதத்தில் வீட்டுக் கடன் வழங்குகிறது. வட்டி விகிதத்தில் உள்ள சிறிய வேறுபாடானது மிகப் பெரிய வித்தியாசத்தை உருவாக்கும். ஏனெனில் நாம் மிகப் பெரிய தொகையை வீட்டுக் கடனாக வாங்குகிறோம்.

எப்படி உங்கள் வீட்டுக் கடனை மாற்றுவது?

கடன் பரிமாற்ற நடமுறையை ஏற்கனவே கடன் பெற்ற நிதியாளரிடம், கடன் பரிமாற்ற கோரிக்கையை விண்ணப்பமாக கொடுக்க வேண்டும். அந்த நிதியாளர், உங்கள் கோரிக்கையை பரிசீலித்து நிலுவை தொகை குறிப்பிடப்பட்டுள்ள ஒரு அறிக்கையை இணைத்து ஒப்புதல் கடிதம் அல்லது ஆட்சேபனை இல்லா சான்றிதழை கொடுப்பார்.

நீங்கள் அந்த ஆவணங்களை புதிய நிதியாளரிடம் சமர்பிக்க வேண்டும். அவர் அந்த அறிக்கையை ஆய்வு செய்து உங்களுடைய கடனுக்கு ஒப்புதல் வழங்குவார். பழைய நிதியாளர் உங்களுடைய பழைய கடனை முடித்து வைப்பார். இந்த நடைமுறை முடிந்த உடன் உங்களுடைய சொத்து பத்திரங்கள் புதிய நிதியாளரிடம் ஒப்படைக்கப்படும். அதன் பின்னர் உங்களுடைய மீதமுள்ள பின்தேதியிட்ட காசோலை அல்லது ஈசிஎஸ் ரத்து செய்யப்படும்.

வங்கி அல்லது வீட்டு நிதி நிறுவனம் அதன் பின்னர் தங்களுடைய நடைமுறை வட்டி விகிதத்தில் உங்களுக்கு கடன் வழங்கும். அந்த கடன் மிதக்கும் வட்டி வீதத்தை அடிப்படையாக கொண்டதெனில், உங்களுடைய புதிய நிதியாளர் வட்டி விகிதத்தை உயர்த்தக்கூடும். அதனால் உங்களுடைய கடனுக்கான இஎம்ஐ உயரக்கூடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நீங்கள் மீண்டும் கடனுக்கான செயலாக்க கட்டணத்தை செலுத்த வேண்டும் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். தற்பொழுது, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மிகக் குறைந்த அளவாக மொத்த கடன் மதிப்பில் 0.50 சதவீதத்தை செயலாக்க கட்டணமாக வசூலித்து வருகிறது.

நீங்கள், உங்கள் கடனுக்கு அதிக வட்டி செலுத்திய பிறகு உங்கள் கடனை மாற்ற நினைப்பது அவ்வுளவு உகந்த செயல் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நீங்கள், புதிய வீட்டு கடன் கடன் பெற முயற்சிக்கும் பொழுது கடன் மதிப்பீடு, சொத்து ஆவணங்கள் மற்றும் தொழில்நுட்ப மதிப்பீடு சட்ட சரிபார்ப்பு போன்ற அனைத்து செயல்முறைகளிலும் மீண்டும் ஈடுபட வேண்டும். எனவே நீங்கள், வட்டி விகித வேறுபாடு அதிகமாக இருந்தால் மட்டுமே உங்கள் வீட்டுக் கடனை மாற்ற வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to transfer your home loan to a cheaper lender? | வீட்டுக் கடனை குறைந்த வட்டி வாங்கும் நிதியாளரிடம் மாற்றுவது நல்லதா?

It's highly possible that you have taken a home loan and now wish to change the lender, as interest rates are cheaper elsewhere. For example, State Bank of India is currently offering the cheapest home loans in India at a current rate of 9.95 per cent. Now, a small difference in interest can mean a lot when it comes to a home loan, since we are talking of significantly huge amounts.
Story first published: Monday, May 13, 2013, 10:28 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X