மருத்துவக் காப்பீட்டுக்கு மருத்துவ பரிசோதனை அவசியமா?

Posted By: Super
Subscribe to GoodReturns Tamil

மருத்துவக் காப்பீட்டுக்கு மருத்துவ பரிசோதனை அவசியமா?
சென்னை: எதிர்பாராத மருத்துவ செலவு எல்லா தரபட்ட மக்களாலும் ஈடு கட்ட முடியாதது. ஆகவே மக்கள் எதாவது ஒரு மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் சேர்கின்றனர். காப்பீடு என்றாலே நிறைய விதிமுறைகளும் உண்டு. அதிலும் மருத்துவ காப்பீடு என்றால் நிறைய வழிமுறைகள் உள்ளன மருத்துவ காப்பீடுக்கு மருத்துவ பரிசோதனை மிகவும் அவசியம் என்ற பரவலான கருத்து உண்டு. அதை பற்றிய விளக்கங்களை இங்கே காண்போம்

(RBI puts restrictions on bank loans against gold)

மருத்துவ காப்பீட்டு நிறுவனங்கள் பொதுவாக விண்ணப்பதாரர் 45 முதல் 50 வயதுக்கு உட்பட்டவராக இருப்பின் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள கட்டாயப் படுத்துவதில்லை. எனினும் சில காப்பீடு நிறுவனங்கள் 50 வயது மேற்பட்டவர்களுக்கு மருத்துவ பரிசோதனையை கட்டாயம் ஆக்கியுள்ளது.

ஆனாலும், சில மருத்துவக் காப்பீடு நிறுவனங்கள் 60 முதல் 69 வயதுக்குட்பட்ட மூத்த குடி மக்களுக்கு மருத்துவ பரிசோதனையில் விலக்கு அளித்துள்ளது.

ஒவ்வொரு காப்பீடு நிறுவனங்களுக்கும் வெவ்வேறு விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் உள்ளன. மேலே சொல்லப்பட்ட வயது வரம்புக்கு மேற்பட்டவராய் இருப்பின் காப்பீடு நிறுவனங்கள் ஒதுக்கிய மருத்துவ சேவை மையங்களில் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

46 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் கீழ்கண்ட மருத்துவ சோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

1. இரத்த அணுக்கள் எண்ணிக்கை
2. இரத்தத்தில் சர்க்கரை அளவு
3. இஎஸ்அர்(ESR)
4. சிகப்பணுக்கள் விகிதம்
5. எஸ்ஜிபிடி(SGPT)
6. சிறுநீர் பரிசோதனை
7. இசிஜி(ECG)
8. இரத்த கொதிப்பு அளவு

ஏற்கனவே இருக்கும் நோய்களின் பாதிப்பு

காப்பீட்டாளர் முன்னரே ஏதும் நோய் அல்லது காயம் மூலமாக பாதிக்கப்பட்டு இருந்தாலோ 24 அல்லது 48 மாதங்களுக்கு முன்னர் இருந்து மருத்துவரின் கண்காணிப்பில் இருந்திருந்தாலோ அதைப் பற்றி முதல் காப்பீட்டு கட்டண செலுத்தும் முன்னரே காப்பீடு நிறுவனத்திடம் தகவல் தெரிவிக்க வேண்டும். இதுவும் காப்பீடுநிறுவனங்களுக்கு இடையே மாறுபடும்.

பொதுவாக, மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களை கவனமாக அதன் சொற்றொடரில் சொல்லப்பட்டிருக்கும் நேர் மற்றும் மறைமுக விபரங்களை நன்கு படித்துவிட்டு வாங்குவது நல்லது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: insurance, medical insurance
English summary

Is medical check up necessary for taking health insurance? | மருத்துவக் காப்பீட்டுக்கு மருத்துவ பரிசோதனை அவசியமா?

Insurance companies do not insist on a medical for a new health insurance policy, if the applicant is under 45-50. However, a medical checkup is necessary for a new health insurance policy for customers above the age of 45-50 years, depending on which insurance service provider you choose.
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns