
(6 govt companies with a cash pile totalling Rs 1.2 lakh crore)
வரி திட்டமிடல் என்பது வரிச்சுமையை குறைக்க மேற்கொள்ளும் ஒரு உரிமையுள்ள, நேர்மையான நடவடிக்கையாகும். இது வரி விதிப்பு விதிகளில் உள்ள இணக்கமான அம்சங்களை சாதகமாக பயன்படுத்தி வரியை மிச்சப்படுத்த வகை செய்கிறது. வரியை சரியாக திட்டமிடுவதன் மூலம் நாம் பல்வேறு பிடித்தங்கள் மற்றும் விதி விலக்குகளின் பயனை முழுமையாக அடைய முடியும். வரி செலுத்தும் அனைத்து தரப்பு மக்களும், வரியை அதிகப்படுத்துவதை விட தங்களின் வருமானத்தை சேமிக்கவே ஆசைப்படுவர். அவ்வாறு சேமிப்பதற்கு வசதியாக ஒவ்வொருவரும் தங்களின் வருமானத்தை சரியான திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும்.
இந்திய வருமான வரி சட்டம் 80 சி-இன் படி ஒவ்வொரு தனி நபரும் தங்களின் வருமானத்தில் அதிக பட்சமாக ரூ. 1 லட்சம் வரை விலக்கு பெறலாம். மேலும், வருமான வரி சட்டங்கள், 80 சிசிசி மற்றும் 80 சிசிடி, நாம் ரூ. 1 லட்சத்திற்கு மேல் வரி விலக்கு பெற வழி வகை செய்கிறது. வரி விலக்குகளை அதிகப்படுத்த ஏரளமான வழிகள் உள்ளன. மருத்துவ காப்பீடு பிரீமியம், மருத்துவ சிகிச்சை, உயர் கல்வி கடனுக்கான தவணை, நன்கொடைகள், வீட்டிற்கு செலுத்தும் வாடகை, ராயல்டி வருமானம், நீண்ட கால உள்கட்டமைப்பு பத்திரங்களில் செய்யப்படும் முதலீடு ஆகியவற்றிற்கு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு வரி விலக்களிக்கப்பட்டுள்ளது. இவற்றை தவிர வீட்டு வாடகைப்படி, பணிக்கொடை, தொகுத்தளிக்கப்பட்ட ஓய்வூதிம் போன்ற சில வருமானங்களுக்கும் வரி விலக்களிக்கப்பட்டுள்ளது.
ஒரு பணியாளர் தனது சம்பளத்தை திட்டமிட வாய்ப்பு பெற்றார் எனில் அவர் பின்வரும் அம்சங்களை கருத்தில் கொள்ள வேண்டும். சம்பளமானது அடிப்படை ஊதியம் மற்றும் பல படிகளாக பிரிக்கப்பட்டிருக்க வேண்டும். இது தொகுப்பூதியத்தை விட சிறந்தது. ஏனெனில் சில படிகள் வரியிலிருந்து விலக்கு பெற்றுள்ளன.
அகவிலைப்படியை (டிஏ) ஓய்வு நலன்களின் ஒரு பகுதியாக உருவாக்க வேண்டும். இது ஒய்வு கால நன்மையை அதிகரிப்பதோடு வீட்டு வாடகைப்படி, பணிக்கொடை மற்றும் தொகுத்தளிக்கப்பட்ட ஓய்வூதியத்தினால் ஏற்படும் வரிச் சுமையை குறைக்கும். ஊழியர்கள் பெறும் கமிஷன், அடிப்படை சம்பளத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். இது வரிச்சுமையை குறைக்கும்.
பணியாளர்களின் அங்கீகரிக்கப்பட்ட வருங்கால வைப்பு நிதிக்கு (ஆர்பிஎப்) தங்களின் பங்களிப்பாக சம்பளத்தில் 12 சதவீதத்தை செலுத்த வேண்டும். ஏனெனில், இந்த எல்லை வரை மட்டுமே வரி விலக்கு உள்ளது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications