தேசிய ஓய்வூதிய திட்டத்தால் இவ்வளவு நன்மையா?

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தேசிய ஓய்வூதிய திட்டத்தால் இவ்வளவு நன்மையா?
சென்னை: அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு 1-4-2009ல் இருந்து செயல்படத் தொடங்கிய புதிய ஓய்வூதியத் திட்டமானது, வரையறுக்கப்பட்ட பங்களிப்பு அடிப்படையில் அமைந்த ஒரு ஓய்வூதியத் திட்டமாகும். ஒருவர் வாடிக்கையாக இத்திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம், அவர் பணியிலிருந்து ஓய்வு பெறும் சமயத்தில் ஒரு கணிசமான தொகை மற்றும் அவரது வாழ்நாள் முழுவதும் கிடைக்கக்கூடிய நிலையான மாத வருமானம் ஆகியவற்றைப் பெறலாம்.

வரி விதிப்பு கோணத்திலிருந்து பார்த்தால் ஏராளமான வரிப் பயன்களை உள்ளடக்கிய தேசிய ஓய்வூதிய திட்டம் ஒரு சிறந்த தேர்வாகும். நீங்கள் 30 சதவீத வரி அடைப்புக்குள் இருப்பவராக இருந்தால் வருமான வரி சட்டம் 80சிசிடி(2) பிரிவின் கீழ் வரக்கூடிய தேசிய ஓய்வூதிய திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்வதன் மூலம் உங்களுக்கு விதிக்கப்பட்ட வரியிலிருந்து சுமார் 15,000 ரூபாயை குறைக்க இயலும்.

வருமான வரிச் சட்டம் 80சிசிடி(2) பிரிவானது மற்றவற்றிற்கிடையில், ஊழியர் மற்றும் நிறுவனம் புதிய ஓய்வூதிய திட்டக் கணக்கில் செலுத்தக்கூடிய பங்களிப்புகளில், ஊழியரின் சார்பில் பிடித்தம் செய்யக்கூடிய வாய்ப்பை வழங்குகிறது. ஆனால், இது 1 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருத்தல் அவசியம்.

80சிசிடி(2) பிரிவின் கீழ் அனுமதிக்கப்பட்ட பிடித்தமானது, தேசிய ஓய்வூதியத் திட்டத்திற்கான ஊழியர் மற்றும் நிறுவன பங்களிப்புகளை உள்ளடக்கியுள்ளது. அவ்வப்போது திருத்தம் செய்யப்படும் வருமான வரிச் சட்டம் 1961-ஐப் பொறுத்து உங்களுக்கு வரிப் பயன்கள் கிடைக்கும்.

சமீபத்தில் தேசிய ஓய்வூதிய திட்டத்தின் நிதி மேனேஜர்களை பங்குகளில் முதலீடு செய்ய இந்திய ஓய்வூதியத் தொகை ரெகுலேட்டர் அனுமதி அளித்துள்ளது. நிதி நிர்வாகக் கட்டணங்கள், உங்கள் முதலீட்டுத் தொகையில் இருந்து சுமார் 0.025 சதவீதமாக திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் இக்கட்டணம் சுமார் 0.0009 சதவீதம் மட்டுமே இருந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: pension tax
English summary

National Pension Scheme: Tax benefit under the scheme | தேசிய ஓய்வூதிய திட்டத்தால் இவ்வளவு நன்மையா?

The New Pension Scheme is a defined contribution-based pension scheme, launched by the government, which has gone effective from April 1, 2009. One can regularly invest money in this and get a lump sum at retirement and a fixed monthly income for the lifetime.
Story first published: Wednesday, May 22, 2013, 16:55 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X