நம் நாட்டு ஓய்வூதியத் திட்டங்கள் கவர்ச்சிகரமானதா என்ன?

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நம் நாட்டு ஓய்வூதியத் திட்டங்கள் கவர்ச்சிகரமானதா என்ன?
சென்னை: ஆயுள் காப்பீட்டு நிறுவனம் உட்பட கிட்டத்தட்ட அனைத்து காப்பீட்டு நிறுவனங்களும் ஓய்வுக்கு பின்னர் வருமானத்தை வழங்கும் ஓய்வூதிய திட்டங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன.

அனைத்து திட்டங்களும் ஒரு குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு (உதரணமாக 18-20 ஆண்டுகள்) பிறகு ஒரு மிகப் பெரிய தொகையை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதாக உத்தரவாதம் தருகின்றன. எடுத்துக்காட்டாக டிபர்ட் அன்யூட்டி திட்டத்தில் தற்பொழுது நீங்கள் வருடத்திற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்து வந்தால் 20 ஆண்டுகளுக்கு பிறகு மாதம் ரூ. 1 லட்சம் கிடைப்பதாக உறுதியளிக்கப்பட்டால், அதைப்பற்றி நீங்கள் ஆராய வேண்டும். ஏனெனில், 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது உள்ள பணவீக்கத்தை கவனத்தில் கொண்டால் ரூ. 1 லட்சம் என்பதன் மதிப்பு மிகவும் குறைந்துவிடும்.

 

குறைந்த வருமானமுடைய டிபர்ட் அன்யூட்டி திட்டங்கள்

 

ஓய்வூதிய திட்டங்கள் இறுதியில் வழங்கும் வருமானம் ஒன்றும் அவ்வளவு கவர்ச்சிகரமாக இல்லை. தற்பொழுதுள்ள வரலாற்றின்படி இதே அறிகுறிகள் நீடித்தால் அடுத்த 15-20 ஆண்டுகளில் தங்கம், ரியல் எஸ்டேட் மற்றும் பங்குகளில் இருந்து கிடைக்கும் வருவாய், ஓய்வூதிய திட்ட வருவாயை விட மிக அதிகமாக இருக்கும். நம்முடைய கணிப்புகளில் சில தவறுகள் இருக்கலாம். ஆனாலும் ஓய்வூதிய திட்ட வருவாய் கண்டிப்பாக 6 முதல் 7 சதவீதம் வரை மட்டுமே இருக்கும்.

கிடைக்கும் வருவாய் போதுமானதா?

தற்பொழுது, பணவீக்க விகிதம் 10 சதவீத அளவிற்கு உள்ளது. எனவே, மிகக் குறைந்த வருவாயான 6 முதல் 7 சதவீதம் என்பது பணவீக்கத்தை மீறி உங்கள் வாழ்கையை தொடர்ந்து நடத்த போதுமானதாக இருக்காது. பெரும்பாலான ஓய்வூதிய திட்டங்கள் ஒரு குறிப்பிட்ட வருவாய்க்கு உறுதி அளிக்கின்றன. எனவே, அத்தகைய திட்டங்கள் மிகப் பாதுகாப்பான முதலீடுகளை மட்டுமே மேற்கொள்ளும். அத்தகைய முதலீட்டுகளுக்கான வருமானம் மிகக் குறைவாகும்.

அதிக கட்டணம்

டிபர்ட் அன்யூட்டி திட்டங்கள் யூனிட் லிங்க்ட் காப்பீட்டுத் திட்டங்களைப் போன்று அதிக ஒதுக்கீடு கட்டணங்களை வசூலிக்கின்றன. இத்தகைய அதிக ஒதுக்கீடு கட்டணங்கள் உங்களுடைய வருவாயிலிருந்தே பிடிக்கப்படுவதாகும். அதனால், ஓய்வூதிய திட்டங்கள் உறுதியளிக்கும் 7 சதவீத வருமானத்திலிருந்து ஒதுக்கீடு கட்டணங்களை கழித்தால் வருவதே நம்முடைய உண்மையான வருவாயாகும்.

வசதியற்ற தன்மை

நீங்கள் உங்களுடைய முதலீட்டின் ஒரு பகுதியை மட்டுமே திரும்ப பெற முடியும். அதற்கு மட்டுமே வரி விலக்கு உண்டு. உங்களுக்கு, ஓய்வு காலத்திற்கான நிதி ஆதாரங்கள் ஏற்கனவே இருந்தால் ஓய்வூதிய திட்டத்தில் செய்யப்படும் முதலீடு என்பது அனாவசிமாக மாட்டிக் கொள்வதற்கு சமமாகும். மேலும், இந்த திட்டத்திலிருந்து பெறப்படும் ஓய்வு கால வருமானத்திற்கு கண்டிப்பாக வரி செலுத்த வேண்டும்.

சிறந்த வருமானத்தை பெறக்கூடிய ஏராளமான முதலீட்டு வழிகள் உள்ளன. நீங்கள் உங்களுடைய ஓய்வு காலத்திற்கான நிதியை அடுத்த 15 வருடங்களில் உருவாக்க வேண்டுமெனில், சில கடன் சார்ந்த பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்யலாம். அவைகள் உங்களுடைய தேவைக்கு மிக உகந்ததாக இருக்கும். சில கடன் சார்ந்த பரஸ்பர நிதிகள் பங்கு சந்தை முதலீட்டில் ஈடுபடுகின்றன. அத்தகைய நிதிகளின் வருவாய் கண்டிப்பாக ஓய்வூதிய திட்டங்களின் வருவாயை விட அதிகமாக இருக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Pension plans in India: Are they really attractive? | நம் நாட்டு ஓய்வூதியத் திட்டங்கள் கவர்ச்சிகரமானதா என்ன?

Virtually, every insurance company including the Life Insurance Corporation has a pension plan in place to offer you returns after you retire. The promise can be for a large sum of money after a fixed period of years, say for example 18-20 years. Now, in a deferred annuity plan you would be promised say Rs 1 lakh per month, 20 years from now if you invest a sum of money say X per year. Remember, the value of Rs 1 lakh, 20 years down the line could well be considered as negligible.
Story first published: Monday, May 13, 2013, 19:36 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X