முதலீட்டார்கள் நிதி ஆலோசனை பெற கட்டணம் செலுத்த வேண்டுமா?

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முதலீட்டார்கள் நிதி ஆலோசனை பெற கட்டணம் செலுத்த வேண்டுமா?
சென்னை: இன்றைய உலகத்தில் இலவசமாக எதுவும் கிடைப்பதில்லை. நம் அன்றாட வாழ்க்கையில் இது மிகவும் பொருந்தும். வளர்ந்து வரும் வணிக மயமாக்கலால் அனைத்து விதமான சேவைகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அது வேலை அல்லது தொழில் நிமித்தமான ஆலோசனை ஆகட்டும் அல்லது உடல் நல ஆலோசனை ஆகட்டும் அல்லது சட்ட ஆலோசனை ஆகட்டும் அத்தனைக்குமே ஒரு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இப்போது நிதி ஆலோசனைகளும் இந்த பட்டியலில் சேர்ந்துள்ளது.

இந்த நிதி ஆலோசனைகளுக்கான கட்டணத்தால் நடுத்தர மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை பற்றி பார்ப்போமா? நிதி ஆலோசனை வழங்குபவர்கள் மூன்று விதமான கட்டணங்களை தீர்மானித்து வைத்திருகிறார்கள். முதல் வகையில் உங்களுக்கு நிதி ஆலோசனை தருபவர் கட்டணமாக ஒன்றுமே வசூலிப்பதில்லை. இது உண்மையானால் எவ்வளவு நன்றாக இருக்கும்? ஆனால் நாம் சொன்னது போல் எதுவும் இலவசமாக கிடைப்பதில்லை. பின் எப்படி?

இந்த வகையில் ஆலோசகர்கள் நம் பொருட்களை விற்று தர மொத்தமாக ஒரு பெரிய தொகையை பெற்றுக்கொள்வர். இந்த வகையில் நம் அக்கறையும் விருப்பமும் புறக்கணிக்கப்பட்டுவிடும் என்பது நாம் அறிந்ததே. ஆலோசகர்களுக்கு கொடுக்கும் கட்டணம் நம் பொருட்களின் மீது நாம் செய்யும் முதலீட்டிலேயே அடங்கிவிடும். அதிக கட்டனம் வசூலிக்கும் எண்ணத்தோடு வாடிக்கையாளர்களின் கணக்குகளில் அதிகமாக ஆலோசகர்கள் விளையாடுவர். சர்னிங் என்றழைக்கப்படும் இந்த ஏற்பாடு மற்றொரு முக்கியமான பிரச்சனை. இந்த வகையான ஆலோசகர்களிடம் போவதற்கு முன் நீங்கள் அதற்கு செலவு செய்யும் பணத்தை சம்பாதிக்க எவ்வளவு பாடு பட வேண்டும் என்பதை தீர்மானித்துக் கொள்ளுங்கள். அப்படி பாடுபட்டு சம்பாதித்த பணத்தை இந்த வகையான ஆலோசகர்களிடம் கொடுத்தால் அந்த அளவு வரவு இருக்குமா என்பதை கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

இரண்டாவது வகையானது, நம் லாபத்தில் இருந்து ஆலோசகர்களுக்கு பங்கு கொடுப்பது. லாபத்தில் பங்கு என்பதால் ஆலோசகர்கள் அதிக லாபத்தை ஈட்டுவதில் ஆர்வம் காட்டுவார்கள். இது நமக்கு நன்மையிலேயே முடியும். இருப்பினும் லாபம் வந்தால் மட்டுமே அவர்கள் பங்கை எடுக்க வருவார்கள், நஷ்டம் ஏற்பட்டால் அது அவர்களைச் சாராது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. ரிஸ்க்-ரிடர்ன் மேட்ரிக்ஸ் என்பதை பற்றி நாம் அனைவரும் அறிவோம். அதன் படி, எவ்வளவு ரிஸ்க் எடுக்கிறோமோ அவ்வளவு லாபத்தை ஈட்டித் தரும். ரிஸ்க் எடுக்க விரும்பும் பெரிய முதலீட்டார்களுக்கே இந்த அமைப்பு பரிந்துரைக்கப்படுகிறது. அதே நேரம் நடுத்தர முதலீட்டார்கள் கண்டிப்பாக இதை பின்பற்றக்கூடாது.

மூன்றாவது வகையானது, ஆலோசகர்களுக்கு நிலையான கட்டணத்தை மட்டுமே அளிப்பது. வாடிக்கையாளர்கள் அவர்களுக்கு அளிக்கும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் மட்டுமே அவர்களுக்கான கூலி. வாடிக்கையாளர்களுக்கு சிறந்த முறையில் நிதி ஆலோசனை வழங்குவதே அவர்களின் வேலை. ஒரு நல்ல நிதி ஆலோசனை அதிக வருவாய் ஈட்டும் கருத்தை விட சிறந்தது. அது வாடிக்கையாளர்களின் ரிஸ்க் அளவை கணக்கில் வைத்து நிதி இலக்கை அடைய உதவி புரியும்.

இருப்பினும் நம்பகத்தன்மையுள்ள ஆலோசர்களை அணுகாமல் அதிகமாக வசூலிக்கும் ஆலோசகர்களிடம் செல்வது ஒரு மறுக்க முடியாத உண்மையாகிவிட்டது. நமக்கு பணம் ஈட்டித்தராத ஒரு வேளையில் நாம் ஈடுபடுவோமா? கண்டிப்பாக மாட்டோம் தானே. பின் ஏன் நமக்கு நன்மையை ஈட்டித்தராத ஒருவரிடம் பணத்தைக் கொட்ட வேண்டும்? மறுபடியும் நன்கு யோசித்து பின் முடிவு செய்யுங்கள்.

ஒரு சிறந்த நிதி ஆலோசகரை தேர்ந்தெடுத்து உங்கள் நிதியை பராமரிப்பதில் அவரை ஈடுபடுத்தி வெற்றி கொண்டால் அதுவே உங்கள் குடும்பத்துக்கும், உங்கள் நிறுவனத்துக்கும் நீங்கள் தரும் பெரிய பரிசாகும். அனைத்து நன்மைகளுக்கும், லாபத்திற்கும் ஒரு விலை உண்டு. இதனை மறுக்காமல் ஒத்துக்கொள்ளுங்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Should investors pay for financial advice? | முதலீட்டார்கள் நிதி ஆலோசனை பெற கட்டணம் செலுத்த வேண்டுமா?

Nothing comes free in this world! No other impression could fit better in today's day - to - day life. With growing commercialization, everything costs you a fee. Whether it's career consultation, health consultation, legal consultation and now financial consultation has joined the league. Not long back, even today, many people are there in the market who call themselves financial advisors and offer free financial advice. You must be wondering if that option is available, then why you should add an additional burden on your financial life by opting for paid financial advisory services. Let us discuss this issue, which is becoming a concern for most of the middle class people.
Story first published: Saturday, May 4, 2013, 10:03 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X