ஆன்லைனில் ஆயுள் காப்பீடு பெறுவது எப்படி?

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆன்லைனில் ஆயுள் காப்பீடு பெறுவது எப்படி?
சென்னை: ஆயுள் காப்பீடு வாங்குவது இப்போது எளிதாகி விட்டது .இந்தியாவில் காப்பீட்டாளர்கள் திட்டங்களை இப்போது ஆன்லைனிலும் வாங்க முடியும். ஆன்லைன் கால திட்டங்கள் நீங்கள் வசிக்கும் உங்கள் வீட்டில் அல்லது அலுவலகத்தில் இருந்தே வாங்க முடியும். அனைத்து விவரங்களை தெரிந்து கொள்ள படிக்கவும்.

 

ஆன்லைன் கால காப்புறுதி பெற வழிகள்

இந்த தயாரிப்புகள் "ஆன்லைன்" என்று அழைக்கப்படுகின்றன, இருப்பினும் முழுமையாக ஆன்லைன் செயலாக்கம் இல்லை.சிறிது செயலாக்கத்தை ஆஃப்லைனில் செய்ய வேண்டும். நீங்கள் விண்ணப்பிக்கும் முறை பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிலை 1:

நீங்கள் விரும்பும் திட்டத்தை உறுதி செய்து கொள்ளவும். நீங்கள் விண்ணப்பிக்க துவங்கும் முன், உங்கள் மருத்துவ நிலை பற்றிய விவரங்களை, மற்றும் குடும்ப மருத்துவ வரலாற்றை தயாராக வைத்திருக்கவும்.

நிலை 2:

காப்பீட்டு வலைத்தளத்தில் உங்கள் தனிப்பட்ட விவரங்கள், தொடர்பு மற்றும் தொழில் விவரங்கள், மற்றும் பரிந்துரைபவரின் தகவல் பெறபடும். வலைதளத்தில் நீங்கள் படிப்படியாக செய்ய வேண்டியவற்றை வலைதளமே வழிகாட்டும், ஆகையால் நீங்கள் தற்செயலாக செய்யும் தவறை பற்றியும் கவலைப்பட தேவையில்லை.

நிலை 3:

உங்கள் உடல் நிலை பற்றிய குறிப்புகளை உறுதி செய்து கொள்ளவும். உங்கள் வாழ்க்கை பாணி, உயரம், எடை, மற்றும் முந்தைய உடல்நிலை பற்றிய விவரங்கள், மருந்து, முன் இருந்த நிலைமைகள் தொடர்பான விவரங்களை அளிக்க வேண்டும். வழங்கப்படும் தகவல்கள் தவறாக இருந்தால் அல்லது சீரற்ற தகவலாக இருந்தது என்றால் உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். எனவே விண்ணப்பதில் கவனமாக இருக்க வேண்டும் மற்றும் மருத்துவ பிரச்சனைகள் அல்லது உபாதைகளை மறைக்க வேண்டாம். வழங்கப்பட்ட அனைத்து தகவல்களும் காப்பீட்டு நிறுவனம் மூலம் மிகவும் நெருக்கமாக ஆராயப்படும்.

நிலை 4:

விண்ணப்ப கட்டணத்தை பொதுவாக கடன் அட்டை அல்லது இணையதள வங்கி சேவை மூலம் கட்டலாம்.

நிலை 5:

ஆஃப்லைன் முறையில் மருத்துவ பரிசோதனை மற்றும் அதன் முடிவுகள் சமர்ப்பிக்கபடவேண்டும். பொதுவாக 45 வயதுக்கு உட்பட்ட தனிநபர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டியதில்லை. எனினும் காப்பீட்டாளரின் பொது மருத்துவ நிலையை மற்றும் காப்பீட்டு தொகையை கொண்டு மருத்துவ பரிசோதனைக்கு அழைக்கபடுவார். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணபங்களை பெறுவதற்கும், KYC வழிமுறைகளை பூர்த்திசெய்வதற்கும் அடையாள சான்று, வீடு முகவரி சான்று மற்றும் வருமான சான்று பெற்றுகொள்ள காப்பீட்டு நிறுவன பிரதிநிதி உங்களை அணுகுவார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Term insurance online: How to buy? | ஆன்லைனில் ஆயுள் காப்பீடு பெறுவது எப்படி?

Buying life insurance has just got easier. Insurers in India are now offering term plans that could be bought online. Online Term Plans are here to stay and could be purchased from the comfort of your home or office.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X