செயற்முறை மற்றும் இதர கட்டணங்களை கவனியுங்கள்:ஒவ்வொரு வங்கியும் ஒரே மாதிரி செயற்முறை கட்டணம் வசூலிப்பதில்லை. பொதுவாக இது 0.50 விழுக்காடிலிருந்து 1 விழுக்காடு வரை இருக்கும். திருவிழாக் காலச் சலுகையாக சில வங்கிகள் செயற்முறை கட்டணத்தை வசூலிப்பதில்லை. வீட்டுக்கடன் பெறுவதற்கு முடிவெடுக்கும் முன் இணையதளத்தில் அதை பற்றி தெரிந்து கொள்வது நல்லது.
வட்டி விகிதத்தைப் பற்றிய ஆய்வு:
வாகனக் கடனைப் போன்றது அல்ல வீட்டுக்கடன் என்பதை நன்றாக நினைவில் வைத்துகொள்ளுங்கள். வீட்டுக்கடனின் அளவு மிகவும் பெரியது என்பதால் சிறிய அளவு வட்டி விகித வித்தியாசம் கூட பெரிய அளவு மாற்றத்தை தரும். உதாரணத்திற்கு 0.10 விழுக்காடு வித்தியாசம் கூட 30 லட்ச ரூபாய் வீடுக்கடனில் பெரிய மாற்றத்தைத் தரும். தற்போது ஸ்டேட் பேங்க் தான் வீட்டுக் கடனுக்கு குறைந்த வட்டி விகிதத்தை வசூலிக்கிறது. ஆனால் பொதுத் துறை வங்கிகளில் வீட்டுக் கடனுக்கு ஒப்புதல் அளிக்க கால தாமதம் ஏற்படும். இதுவே தனியார் வங்கிகள் அல்லது வீட்டு நிதி நிறுவனங்கள் என்றால் விரைவிலேயே ஒப்புதல் அளிக்கப்பட்டு விடும். விரைவிலேயே உங்களுக்கு கடன் ஒப்புதல் பெற வேண்டுமானால் சில வீட்டு நிதி நிறுவனங்களை அணுகுவதே நல்லது.
கடன் ஒப்பந்தத்தை கவனமாக படியுங்கள்:
கடன் ஒப்பந்தம் முழுவதையும் கவனத்துடன் வாசிக்க வேண்டியது உங்களின் கடமையாகும். அது மிகவும் விலாவரியாக இருக்கும் ஒப்பந்தம் என்றாலும் கூட அதனை படித்தால் தான் உங்களுக்கு நல்லது.
உங்களுக்கு நிரந்தர வேலை இருக்கிறதா?
உங்களுக்கு நிரந்தரமாக வருமானம் வருமாறு நிரந்தர வேலையில் இருப்பது மிகவும் அவசியம். அப்போது தான் வீட்டுக்கடன் முடியும் வரை அதனுடைய அனைத்து EMI களையும் சுலபமாக கட்டலாம். நீங்கள் கட்ட வேண்டிய வரி அதிகமாக இருக்கும் பட்சத்தில் வீட்டுக்கடனை அதிக காலம் நீட்டிக்கலாம். அப்படி இல்லாத பட்சத்தில் உங்கள் கடனை சீக்கிரமாக கட்டி முடிக்க மனக்கணக்கு போட்டு வைத்துக்கொள்ளுங்கள்.
உச்ச வரி வரம்பிற்குள் இருக்கிறீர்களா? அப்படியானால் வீட்டுக்கடன்!!! :
வரி கட்டும் நீங்கள் வரி உச்ச வரம்பிற்குள் இருக்கிறீர்களா? அப்படியானால் ஒரு வீடு வாங்க வீட்டுக்கடன் பெறுவது புத்திசாலித்தனம். ஏனென்றால் 1 லட்சம் முதல் 1.5 லட்சம் வரையிலான அசலை செலுத்தும் போது அதற்கான வட்டிக்கு வரி விலக்கு அளிக்கப்படும்.